விடுதலைச் சிறுத்தைகளின் விருதுகள் பெறும் சான்றோர்கள்

விடுதலைச் சிறுத்தைகளின் விருதுகள் பெறும் சான்றோர்கள்
தொல்.திருமாவளவன் அறிவிப்பு
 

ஒவ்வொரு ஆண்டும் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளான 
ஏப்ரல் 14ஆம் நாள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தகுதிவாய்ந்த சான்றோருக்கு அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், காயிதேமில்லத் பிறை, அயோத்திதாசர் ஆதவன், செம்மொழி ஞாயிறு என்ற பெயர்களில் ஆறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் ஏப்ரல்14ல் நடைபெறவேண்டிய இந்த விழாவைத் தள்ளிவைக்க நேர்ந்தது.

புரட்சியாளர் அம்பேத்கரின் 125ஆவது பிறந்த ஆண்டான இந்த 2016ஆம் ஆண்டுக்கான விருதுகளைப் பெறும் சான்றோர்களின் பெயர்களை அறிவிப்பதில் மகிழ்ச்சிகொள்கிறோம்.

அம்பேத்கர் சுடர்  நீதியரசர் கே.சந்துரு
பெரியார் ஒளி  முனைவர் வே.வசந்திதேவி
காமராசர் கதிர்  திரு எல்.இளையபெருமாள் ( மறைவுக்குப் பின்) 
அயோத்திதாசர் ஆதவன் பத்திரிகையாளர் ஞாநி
காயிதேமில்லத் பிறை  திரு நாகூர் ஹனீஃபா ( மறைவுக்குப் பின்) 
செம்மொழி ஞாயிறு  கவிஞர் ஈரோடு தமிழன்பன்  

இந்த விருது ஒவ்வொன்றும் பட்டயமும் ஐம்பதாயிரம் ரூபாய் பொற்கிழியும் கொண்டதாகும். 

ஜூன் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை, காமராசர் அரங்கத்தில் இந்த விருதுகள் வழங்கும் விழா நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

இவண்
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக