விசிக - முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்

விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் மக்கள் நலக் கூட்டணி, தே.மு.தி.க. மற்றும் த.மா.கா.வுடன் இணைந்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறது. இதில் விடுதலை சிறுத்தைகளுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியில், 11 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று அறிவித்தார். இந்த பட்டியலில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 

முதல் பட்டியலை வெளியிட்டு திருமாவளவன் பேசியதாவது:

மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 17 தனித் தொகுதிகளிலும், 8 பொதுத் தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும். புதுச்சேரியில் மொத்தம் 7 தொகுதிகளில் வி.சி.க. போட்டியிடுகின்றது.

முதற்கட்டமாக 11 பேர் கொண்ட பட்டியல் தற்போது வெளியிடப்படுகிறது. இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும்.

மொத்தமுள்ள 25 தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இவ்வாறு அவர் கூறினார்.
 

வேட்பாளர்கள் விபரம்:

புவனகிரி - சிந்தனைச் செல்வன் 
குன்னம் - ஆளூர் ஷாநவாஸ்
மயிலம் - எஸ்.எஸ் பாலாஜி
சோழிங்கநல்லூர் - பன்னீர்தாஸ் 

செய்யூர் - கரோலின்
சேலம் தெற்கு - கோ. ஜெயச்சந்திரன்
ஊத்தங்கரை - சி.கிருஷ்ணன் (எ) கனியமுதன்
துறையூர் - ஆதிமொழி (எ) சுஜா தேவி

வந்தவாசி - மேத்தா ரமேஷ்
ராசிபுரம் - கா.அர்ஜூன்
வேலூர் - அப்துல் ரகுமான் .

0 comments:

கருத்துரையிடுக