மாநில செயற்குழு கூட்டம்


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் சந்திப்பு சென்னை வடபழனியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமை தாங்கினார்.

 மாநில பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி சார்பில் நாளை நாகர்கோவிலில் தேர்தல் பிரச்சாரம் தொடங்க உள்ளதாக அறிவித்தார்.

ஐந்தாம் கட்ட பிரச்சாரம் நாளை தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறும் என அறிவித்தார். தேமுதிக சார்பில் -சந்திரகுமார் மற்றும் இளைஞரணி செயலாளர் சுதீஷ் அவர்கள் கோவில்பட்டியில் கலந்து கொள்வார் என தலைவர் அறிவித்தார்.

தேமுதிக -மக்கள் நலக்கூட்டணி தமிழக அரசியல் வரலாற்றில் ஏறக்குறைய 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றை மாற்றி அமைத்துள்ளது. இந்த மாற்றம் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை அமைக்கும் என தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த கூட்டணி மீது விமர்சனங்கள்,காழ்புணர்ச்சி ஆகியவற்றை முன்மொழிந்தார்கள் ஆனால் நாங்கள் இன்னும் ஆழமான உறவுடன் வளர்ந்து வருகிறோம்.

மக்கள் நலன் கருதி -நாட்டு நலன் கருதி உருவாக்கப்பட்ட கூட்டணி இது! ஊழல் -மது ஒழிப்பு -கூட்டணி ஆட்சி ஆகிய கோட்பாடுகளுடன் உருவான கூட்டணியில் தற்போது தேமுதிக தொகுதி உடன்பாடு வைத்துள்ளது.

மேலும் சில கட்சிகள் விரைவில் இணையும் என தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். மக்கள் நலக்கூட்டணியின் தேர்தல் அறிக்கை தயாராகி வருவதாகவும் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். 

இதனை தொடர்ந்து பேசிய தலைவர் தானும் ஒரு தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் விரைவில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் என்றார், இந்த அணியின் பெயர் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தலைவர் அவர்கள் தேமுதிக -மக்கள் நலக் கூட்டணி என்றும் அல்லது விஜயகாந்த் அணி எனவும் அழைக்கலாம் என கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய தலைவர் பாண்டிச்சேரியிலும் வேட்பாளர்களை அறிவித்து மக்கள் நலக்கூட்டணி போட்டியிடும் என்றும் தெரிவித்தார்.

மாநில பொறுப்பாளர்களின் கூட்டத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைவர் அவர்கள் மோதிரம் சின்னத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தேர்தல் பணிகுழு நிதிச்செயலாளர் நீலசந்திர குமார் அவர்கள் தனது கையில் அணிந்திருந்த மோதிரத்தை தலைவர் அவர்களிடம் வழங்கினார். தலைவர் அந்த மோதிரம் தேர்தல் நிதியில் சேர்த்துக்கொள்ளப்படும் என அறிவித்தார்.

0 comments:

கருத்துரையிடுக