தமிழக அரசு மதுவிலக்கை உடனே அறிவிக்க வேண்டும் தொல்.திருமாவளவன் வேண்டுகோள்

மதுவிலக்கு கோரி நடைபயணம் மேற்கொண்ட 
குமரிஅனந்தன் உடல்நலக் குறைவு
தமிழக அரசு மதுவிலக்கை உடனே அறிவிக்க வேண்டும்
தொல்.திருமாவளவன் வேண்டுகோள்
 
 
 தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமெனக் கோரி அய்யா குமரிஅனந்தன் அவர்கள் சென்னையிலிருந்து குமரியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டிருந்தார்.  பிப்ரவரி 12ஆம் தேதி அந்தப் பயணத்தை நிறைவு செய்யத் திட்டமிட்டிருந்தார்.  இதனிடையில் அவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு நெல்லையில் மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. அவரது உடல்நிலை சீரடைய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
 
அய்யா குமரிஅனந்தன் அவர்கள் முன்வைத்துள்ள மது ஒழிப்பு என்ற கோரிக்கை தமிழ்நாடு முழுவதுமுள்ள வெகுமக்களின் கோரிக்கையாக மாறியிருக்கிறது.  ஆனால் ஆட்சியாளர்கள் விடாப்படியாக மது விற்பனையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.  தற்போது அய்யா குமரிஅனந்தன் அவர்கள் உடல்நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டிருப்பது வேதனை தருகிறது.  அவரது உடல் நலக்குறைவுக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். 
 
இனியும் தாமதிக்காமல் எதிர்வரும் 16ஆம் தேதி கூடவிருக்கின்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என்ற அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக