இந்திய கம்யூ. தலைவர் பரதன் மறைவு: ம.ந.கூ தலைவர்கள் அஞ்சலி







இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.பி.பரதன் (92) உடல்நலக் குறைவு காரணமாக நேற்றுமுன்தினம் (02.01.2016) டெல்லி மருத்துவமனையில் கால மானார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில பொதுச் செயலாளராகவும், ஏஐடியூசி தலைவராகவும் இருந்தவர் ஏ.பி.பரதன்.

டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தங்கியிருந்த ஏ.பி. பரதனுக்கு கடந்த டிசம்பர் 7-ம் தேதி பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சுயநினைவு இழந்தார். அவர் உடனடியாக மத்திய டெல்லியில் உள்ள ஜி.பி.பந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூத்த மருத்துவர்கள் கண் காணிப்பின் கீழ் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், உடல் நலக் குறைவு காரணமாக ஏ.பி.பரதன் சனிக்கிழமை காலமானார்.

பரதனின் மனைவி, நாக்பூர் பல்கலைக்கழத்தில் பேராசிரியராக பணியாற்றிவர். இவர் கடந்த 1986-ம் ஆண்டு காலமானார். இத்தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

ஏ.பி.பரதனின் உடல் இன்று காலை 10 மணிக்கு கட்சி தலைமை அலுவலகத்துக்கு கொண்டு வரப் படுட்டு அவரது உடலுக்கு அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

மக்கள் நல கூட்டணி தலைவர்கள் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட அய்யா நல்லகண்ணு, அய்யா வைகோ, அய்யா டி.ராஜா, அய்யா முத்தரசன் மற்றும் பல தலைவர்கள் மறைந்த மூத்த தலைவர் ஏ.பி.பரதன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் மதியம் 1.30 மணிக்கு இறுதி ஊர்வலம் நிகழ்விலும், உடல் தகுணம் நிகழ்விலும் பங்கேற்கிறார்கள்.

0 comments:

கருத்துரையிடுக