ஜி.கே வாசனுடன் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் சந்திப்பு

மக்கள் நலக் கூட்டணியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் சேர வலியுறுத்தி அதன் தலைவர்கள் ஜி.கே வாசனை சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலத்திற்குச் சென்ற மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் வைகோ, தொல்.திருமாவளன் ஜி.ராமகிருஷ்ணன், முத்தரன், ஆகியோர் வாசனை சந்தித்து பேசினர்.

அப்போது, மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க வேண்டும் என வாசனிடம் அவர்கள் வலியுறுத்தினர்.

அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, "2016 ஆம் ஆண்டு விளிம்புநிலை மக்களுக்கான அதிகாரப் பகிர்வு ஆண்டு" என எழுச்சித்தமிழர் அறிவித்தார். அவரது அறிவிப்பை வெற்றிகரமாக நிறைவேற்ற உறுதியேற்போம் !


0 comments:

கருத்துரையிடுக