மைய மாநில அரசுகளை கண்டித்து மக்கள் நலக் கூட்டணி ஆர்பாட்டம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான நிவாரணங்கள் வழங்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மக்கள் நல கூட்டணி சார்பில் வள்ளுவர் கோட்டம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில் தலைவர் திருமா பேசியதாவது:–
 
மழை வெள்ளத்தில் சென்னையே ஸ்தம்பித்த போது மக்கள் நலனே பிரதானமென்று கருதி முதலமைச்சர் ஜெயலலிதா களப்பணி ஆற்றவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டினார்.

 
ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேசியதாவது:–


மக்கள் நல கூட்டணியை கண்டு அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பயப்படுகிறார்கள். தேர்தலின் போது மக்கள் கூட்டணியின் செல்வாக்கை அவர்கள் உணருவார்கள். ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் நலக் கூட்டணி ஒரு உந்து சக்தியை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் பேசினார். 

0 comments:

கருத்துரையிடுக