உலக வர்த்தக அமைப்பின் உயர்கல்வி ஒப்பந்தத்திலிருந்து இந்தியஅரசு வெளியேற வேண்டும்!!

சமூக நீதியை காவு வாங்கும் உலக வர்த்தக அமைப்பின் உயர்கல்வி ஒப்பந்தத்திலிருந்து  இந்தியஅரசு வெளியேற வேண்டும்!!
விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை !!
 
 
 
உலக வர்த்தக அமைப்பின் மாநாடு வரும் டிசம்பர் 15 முதல் 18 வரை கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் நடக்க உள்ளது. உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினராக உள்ள 161 நாடுகளின் வர்த்தக அமைச்சர்களுக்கு இடையில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் சேவைத் துறைகளான கல்வி, மருத்துவம், சுற்று சூழல் போக்குவரத்து, ஆற்றல் மற்றும் தொலைத்தொடர்பு ஆகிய துறைகளில் பன்னாட்டு நிறுவனங்கள்  வர்த்தக நடவடிக்கைகளில்  ஈடுபட  நிபந்தனையற்ற அனுமதி அளிக்கும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது .அதாவது கல்வியை வணிகப் பண்டமாக்கி விற்றுக்கொள்ள  ஒப்புக்கொண்டு இந்திய அரசு அம்மாநாட்டில்  கையெழுத்திட இருக்கிறது.

உலக வர்த்தக அமைப்பு ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள "நிமீஸீமீக்ஷீணீறீ கிரீக்ஷீமீமீனீமீஸீt ஷீஸீ ஜிக்ஷீணீபீமீ வீஸீ sமீக்ஷீஸ்வீநீமீs" என்னும் விதிமுறைப்படி  கல்வி நிறுவனங்களை  வணிகம் நிறுவனங்களாக நடத்திக்கொள்வதற்காக அந்நிய நாட்டுப் பல்கலைக்கழகங்களை இந்திய அரசாங்கம் அனுமதிக்கப்போகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் நிர்பந்தத்திற்கு பணிந்து இந்தியா கையெழுத்திடுமாயின்,  உலக வங்கி கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் பன்னாட்டுக்  கல்வி நிறுவனங்கள் பின்தங்கிய நாடுகளில் தரமற்ற கிளைகளையே நிறுவி உள்ளன என்று அதனுடைய ஆய்வறிக்கையில் தெரிவித்து இருப்பதைப்போல் தரமற்ற பல பன்னாட்டு கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதிக்கும்.

அந்த வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள விதிகளின் படி பன்னாட்டு கல்வி நிறுவனங்களை  இந்திய அரசோ , இந்திய நீதித்துறையோ இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி கட்டுபடுத்த முடியாது. பன்னாட்டு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் பாதிக்கப்பட்டால், அவர்கள் இந்திய  நீதி மன்றங்களை நாட முடியாது. மாறாக வெளி நாடுகளில் அமைக்கப்படும் தீர்ப்பாயங்களை மட்டுமே அணுக வேண்டும் என்பது இயற்கை நீதிக்கும் மனித உரிமைக்கும் எதிரானதாகும்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி  தற்போது வழங்கப்படும் கல்வி உதவித்தொகை,இட ஒதுக்கீடு முறை, கல்வி உதவி பெறும் நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் கல்வி மானியம் ஆகியனவும்  ரத்தாகும். கல்வித் துறைக்கான அரசின் நிதி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் உலக வர்த்தக அமைப்பின் விதிகளின்படி அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலை கழகங்கள், கல்லூரிகள் , பல்கலைகழக மானிய குழு ஆகியனவற்றை இழுத்து மூடும் அபாயம் ஏற்படும். இதனால் பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட அனைத்து வகுப்பினரின்  கல்வி  உரிமை பறிபோகும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது. சமூக நீதியைக்  காவு கொடுக்கும் இந்திய அரசின் இந்த எதேச்சதிகாரப்  போக்கை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது.

இலாபத்தை மட்டும் குறிக்கோளாக கொண்ட பன்னாட்டு வர்த்தக நிறுவன உடன்படிக்கையில் கையெழுத்திட்ட ஜப்பான் நாட்டின் பண்பாடு , கலைமற்றும் இலக்கியங்களை பயிற்றுவிக்கும் பாடப்பிரிவுகள் மற்றும் சமூக அறிவியல் கல்வி நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுவிட்டன .பல்வேறு இனம் மொழி மதம் சார்ந்து வாழும் பன்மைத்துவம் கொண்ட இந்திய சமூக அமைப்பிற்குபன்னாட்டு வர்த்தக நிறுவனத்தின்  இவ்வொப்பந்தம் எதிரானதாகும் என்பதை இந்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டுமென்று    விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.

கல்வியைச் சந்தை பொருளாக்கி வணிக மயமாக்கும் உலக வர்த்தக அமைப்பின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக ஏற்கனவே ஆப்பரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கிளம்பிய எதிர்ப்புகள் போராட்டங்களாக மாறி நடைபெற்று வருகின்றன. 

1991 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட உலகமயம்,தனியார்மயம்,தாராளமயம் என்னும் புதிய பொருளாதாரக் கொள்கையின் படி காங்கிரஸ் அரசும்,பாசக அரசும் சுகாதாரம், நிதி  கட்டுமான துறை, போக்குவரத்து  மற்றும் சுற்றுலா  உள்ளிட்ட முக்கிய துறைகளில் பன்னாட்டு நிறுவனங்கள் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட இந்திய சந்தையை திறந்து விட்டுப்  பொருளாதாரச்  சீரழிவிற்கு வழிகோலியதோடு
காப்பீடு, சேவை துறை, பண்பாட்டு துறை, விமானத்துறை மற்றும் கல்வி துறையில் பன்னாட்டு நிறுவனங்கள் ஈடுபடுவதற்கான எழுத்துப்பூர்வமாக தற்காலிக ஒப்புதலை அளித்தது .

இந்த ஒப்பந்தத்தில் உள்ள விதிமுறைகளின் படி இத்தகைய ஒப்புதல் தற்காலிகமானது என்பதால் ஒப்பந்தத்தை இறுதி செய்ய நடைபெறும் இம்மாநாட்டிற்கு முன்னதாக இந்திய அரசு தனது ஒப்புதலை  திரும்பப்  பெறவேண்டும்.  இறுதி ஒப்பந்த்ததில் இந்திய அரசு கையெழுத்திட்டு விட்டால் பின் எப்போதும் வெளியேற முடியாத நெருக்கடி ஏற்படுவதுடன் அது இந்திய இறையாண்மைக்கு பேராபத்தாய் முடியும். நாட்டை மொத்தமாக 'விற்று  தீர்க்கும்' இக்கொடிய முயற்சியை  கைவிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் இந்திய அரசை வற்புறுத்திக்  கேட்டு கொள்கிறது.

இத்தகைய கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள கட்சியும் முற்போக்கு மாணவர கழகமும் கல்வி உரிமை மாநாடு மற்றும் பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது் 
 
பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களின்  நிர்பந்தங்களுக்குப்  பணிந்து  ஆசிரியர் எண்ணிக்கையைக் குறைத்தல், காலிப்பணி இடங்களை நிரப்பாமை ,என்பன போன்ற திட்டமிட்ட நடவடிக்கைகளால்  படிப்படியாக பள்ளிக் கல்வித் துறையை சீரழித்தப் இந்திய அரசு  தற்போது உயர்கல்வியையும் கைகழுவுவது இந்திய நாட்டிற்கு பேராபத்தை விளைவிக்கும்.ஆகவே சமூக நீதிக்கும் அடித்தட்டு மக்களுக்கும் எதிரான உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்திலிருந்து இந்திய அரசு முற்றாக வெளியேற வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள கட்சி் வற்புறுத்துகிறது.

இவண்
தொல். திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக