மக்கள் நலக் கூட்டணி குறைந்தபட்ச செயல்திட்ட விளக்கப் பொதுக்கூட்டம் ஜனவரி 26 இல் மதுரையில் நடைபெறும்

மக்கள் நலக் கூட்டணி குறைந்தபட்ச செயல்திட்ட விளக்கப்
பொதுக்கூட்டம் ஜனவரி 26 இல் மதுரையில் நடைபெறும்

மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் அறிவிப்புமழை வெள்ளத்தால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதால், மக்கள் நலக் கூட்டணி தொண்டர்கள் வெள்ள நிவாரணப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டனர். மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

எனவே ஒத்தி வைக்கப்பட்ட மதுரை பொதுக்கூட்டம் 2016 ஜனவரி 26 செவ்வாய்க்கிழமை அன்று மாலை நடைபெறும். இக்கூட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி  அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகின்றனர்.


0 comments:

கருத்துரையிடுக