அவசர அழைப்பு

அவசர அழைப்பு

எதிர்வரும் 24.11.2015 அன்று கோவையில் ‘மக்கள் நலக் கூட்டணி’யின் ‘குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை’ விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இப்பொதுக் கூட்டத்தில் தலைவர் எழுச்சித்தமிழர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

மக்கள் நலக் கூட்டணிக்  கட்சித் தலைவர்கள்  வைகோ (மதிமுக) ஜி.இராமகிருஷ்ணன்(சிபிஎம்) இரா.முத்தரசன் (சிபிஐ) மற்றும் கூட்டணி கட்சிகளின் முன்னணித் தலைவர்களும் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.

இப்பொதுக்கூட்டம் வெற்றிப்பெற முன்னாயத்தப் பணிகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மண்டலச் (கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை, திருப்பூர், நீலமலை) ‘சிறப்புச் செயற்குழு கூட்டம்’ எழுச்சித்தமிழர் தலைமையில் நடைபெற உள்ளது. 14.11.2015 சனி காலை 10மணி அளவில் ஈரோடு, மெரினா திருமண மண்டபத்தில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு மேற்கு மண்டலப் (மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகக் குழுவினர், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகக் குழுவினர்) பொறுப்பாளர்கள் கலந்துக்கொள்ள வேண்டப்படுகிறீர்கள்.

இவண்.
தலைமை நிலையம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

0 comments:

கருத்துரையிடுக