கும்பகோணத்தில் தொழிலாளர் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் துணை நிலை அமைப்பான தொழிலாளர் விடுதலை முன்னணி (AATLLF) ஆர்ப்பாட்டம்

தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் போக்குவரத்துத் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும், பணி ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் பயன்கள் அனைத்தும் அன்றைக்கே வழங்கப்படவேண்டும், 2003 ஆண்டுக்கு பிறகு பணியில் சோந்த தொழிலாளர்களுக்கும் ஓய்வு ஊதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், 12வது ஊதிய ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டபடி தொழிலாளர்களுக்கு சம்பள நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி நிலுவைத்தொகைளை உடனடியாக வழங்க வேண்டும், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி தொகையை தொழிலாளர்களுக்கு கடன் கிடைக்கும் வகையில் வைப்பு நிதி, அறக்கட்டளையிடம் வழங்க வேண்டும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் அரசு பென்சன் வழங்கப்பட வேண்டும், சேம ஓட்டுனர், நடத்துனர்களுக்கு ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டபடி தினச்சம்பளம் வழங்கப்படவேண்டும், ஓட்டுனர்களை டீசல் சிக்கனம் என்றும், நடத்துனர்களை வருவாய் பெருக்கம் என்ற பெயரிலும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் செயலினை கைவிடவேண்டும், ஒய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத்தொகைகள் அனைத்தையும் உடனடியாக வழங்க வேண்டும், போக்குவரத்து தொழிலாளர்களின் வறுமையை போக்கிட அரசு போக்குவரத்துக்கழகங்களுக்கு மானியம் வழங்கிட வேண்டும், ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டபடி தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டியும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தி கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமையக வாயிலில் 08.10.2015 வியாழக்கிழமை மாலை 3.00 மணிக்கு மாநில பேரவை துணை தலைவரும், பொதுசெயலாளருமான வி.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. 

இதில் அரசு ஊழியர்கள் ஐக்கிய பேரவையின் மாநில தலைவர் செ.அரசாங்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சா.விவேகானந்தன், வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், முற்போக்கு மாணவர் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் க.செ.முல்லைவளவன், தலைமை நிலைய தொண்டரணி செயலாளர் பி.டி.தமிழ்கதிர், மாநகர போக்குவரத்து கழக செயல் தலைவர் பொன்.கோ.வி.பரமசிவம், மாநில அமைப்பு செயலாளர் அ.செ.பாலசுந்தரம், மத்திய சங்க தலைவர் துரைமாணிக்கம், திருச்சி மண்டல பொதுச்செயலாளர் சி.சுப்ரமணியன், மேற்கு மாவட்ட செயலாளர் வீரன் வெற்றிவேந்தன், ஊடக மைய மாவட்ட அமைப்பாளர் ருமன் செந்தில், ஓவியரணி மாவட்ட அமைப்பாளர் தமிழ்மணி, முற்போக்கு மாணவர் கழக மாவட்ட துணை அமைப்பாளர் கருப்பூர் அய்யப்பன், ஓன்றிய செயலாளர் முருகப்பன், ஒன்றிய பொருளாளர் பாலகுரு, ஒன்றிய துணை செயலாளர்கள் மா.செ.சக்திவேல், க.செ.சசிக்குமார், போக்குவரத்து தொழிலாளர் சங்க பொறுப்பாளர்கள் கலியமூர்த்தி, காளிமுத்து, மா.கோபு, க.ஜீவராஜ், க.ராஜ்குமார், சி.ஜெகதீசன், எம்.முருகேசன், மு.நாகராஜன், இரா.பிச்சைபிள்ளை, ரெ.ரமேஷ்குமார், இரா.வீரமணி, த.சசிக்குமார் மற்றும் பலர் ஏராளமான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மத்திய சங்க பொருளாளர் வி.சாமிகண்ணு நன்றி கூறினார்.

0 comments:

கருத்துரையிடுக