தோழர் லாரன்சுக்கு விடுதலைச்சிறுத்தைகளின் வீர வணக்கம்....

விடுதலைச்சிறுத்தைகளின் மூத்த முன்னணி போராளிகளில் ஒருவரான திண்டிவனம் வழக்கறிஞர் தோழர் லாரன்ஸ் இன்று மாலை காலமானார். சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் உடல்நலமின்றி சேர்க்கப்பட்டிருந்த அவரை நம் தலைவர் மாலை சந்தித்து ஆறுதல் சொன்னார். ஆயினும் சிகிச்சை பலனின்றி தோழர் லாரன்ஸ் மரணமடைந்து விட்டார். தொன்னூறுகளின் தொடக்கத்தில் வட தமிழகத்தில் களமாடிய கம்பீரமான சிறுத்தை கண்மூடி கொண்டது.

உரிமைக் களத்தில் எரிமலை வேகம்.-உயிர்மூச்சு முழுவதும் விடுதலை தாகம்.....என வாழ்ந்த தோழர் லாரன்சுக்கு விடுதலைச்சிறுத்தைகளின்
வீர வணக்கம்....

கண்ணீருடன்
சிந்தனைச்செல்வன்..17.10.2015

0 comments:

கருத்துரையிடுக