நடிகை மனோரமா மறைவு தமிழ்த் திரையுலகத்திற்குப் பேரிழப்பாகும்.

திரைப்பட நடிகை மனோரமா மறைவு
தமிழ்த் திரையுலகத்திற்குப் பேரிழப்பாகும்.
விடுதலைச் சிறுத்தைகள் அறிக்கை

 
 
தமிழ்த் திரைப்பட உலகில் சுமார் 1500 படங்களுக்கு மேலாக நடித்து தமிழக மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம் பெற்றவர் நடிகை மனோரமா அவர்கள். அனைவராலும் ஆச்சி என அன்போடு அழைக்கப்படும் பெருமைக்குரியவராக விளங்கினார். அவருடைய திடீர் மறைவு மிகுந்த வேதனையை அளிக்கிறது.  தமிழ்த் திரையுலகில் அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியததாகும்.  
 
நடிகர் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். போன்ற அரும்பெரும் கலைஞர்களின் அன்பிற்க்கும், ஆதரவிற்கும் பாத்திரமாக விளங்கினார்.  கடந்த மூன்று, நான்கு தலைமுறை காலமாக திரையுலகில் அனைத்துத் தரப்பினரின் நல்லாதரவைப் பெற்று புகழொளி வீசினார். அதிகப்படங்களில் நடித்தவர் என்னும் கின்னஸ் சாதனை படைத்து உலகப் பெருமைக்குரிய நடிகையாக விளங்கினார்.  
 
பெரும்பாலும் நகைச்சுவை பாத்திரங்களில் அவர் நடித்திருந்தாலும், ஒரு கதாநாயகிக்குரிய அளவில் மக்கள் செல்வாக்குப் பெற்றவர்.  பொதுவாக திரையுலகில் பெண்கள் நீன்ட காலம் நிலைத்து நிற்க முடிவதில்லை, ஆனால் நெடுங்காலமாக நடிகை மனோரமா அவர்கள் பேரும்புகழும் பெற்று நிலைத்துநின்றார்.  அத்தகைய ஆற்றல் வாய்ந்த பழம்பெரும் நடிகை மனோரமா அவர்கள் மறைவு தமிழ்த் திரையுலகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும்.  அவரை இழந்து வாடுகின்ற குடும்பத்தினர்க்கும், திரையுலகத்தினருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. 


இவண்
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக