விஷ்ணுபிரியா, கோகுல்ராஜ் வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரி கடலூரில் பிரமாண்ட ஆர்பாட்டம்

விஷ்ணுபிரியா, கோகுல்ராஜ் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற வேண்டுமென திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

டிஎஸ்பி விஷ்ணுபிரியா மற்றும் கோகுல்ராஜ் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் கடலூரில் பழைய ஆட்சியர் அலுவலகம் எதிரே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாளவன் தலைமை வகித்தார்.


இதில், கட்சியினர் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர் கடலூர் நகரமே  திணறியது .  கோரிக்கையை வலியுறுத்தி பங்கேற்ற அனைவரும் கோஷம் எழுப்பினர்.


அப்போது தலைவர் பேசுகையில், டிஎஸ்பி விஷ்ணுபிரியா சாவில் ஏராளமான சந்தேகம் உள்ளது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் தலைமறைவாக இருப்பவர்கள் வழக்கினை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளி அரசுக்கும், காவல்துறைக்கும் சவால்விடும் வகையில் கடந்த சில மாதங்களாக தலைமறைவாக உள்ளது வெட்கக்கேடானது.

கோகுல்ராஜூம், விஷ்ணுபிரியாவும் தலித் என்ற நோக்கில் வழக்கில் அசட்டையாக இருக்காமல் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.

ஜெகன்நாதன் கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விஷ்ணுபிரியாவை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு மிரட்டல் விடுத்தனர். அதேப்போன்று உயர் அதிகாரிகளும் அவருக்கு அழுத்தம் கொடுத்தனர். குற்றச்சாட்டுக்கு உள்ளான காவல்துறை அதிகாரி அதே இடத்தில் இருக்கும் போது சிபிசிஐடி விசாரணை நேர்மையாக நடக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். எனவே, சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்துகிறோம். முதல்வரும் இதிலுள்ள நியாயத்தை புரிந்துக் கொள்ள வேண்டும்.

விஷ்ணுபிரியா மரணத்தில் காதல் பிரச்னை இருப்பதாக முடிச்சு போடப்பார்க்கிறார்கள். ஆனால், உண்மை வேறுவிதமாக இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள். எனவே, சிபிஐ விசாரணை தேவை.

விஷ்ணுபிரியா சாவு குறித்து அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்தும், அறிக்கைகளும் வெளியிடும் தலைவர்கள் கோகுல்ராஜ் கொலை குறித்து அறிக்கை விடாதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது என்றார்.

***
 
தலைவரின் உரையை ஒலிவடிவில் கேட்க  

0 comments:

கருத்துரையிடுக