கவிஞர் தணிகைச் செல்வனின் தத்துவ தலைமை வெளியீட்டு விழா

மக்கள் கவிஞர் தணிகைச்செல்வன் அவர்கள் 'நமது தமிழ்மண்' மாத இதழில் கடந்த 27 மாதங்களாக பாட்டாளியம், தலித்தியம், தமிழியம் என்ற தத்துவத்தை மையப்படுத்தி எழுதிய கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து ‘தத்துவத் தலைமை’ என்ற நூலாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கரிசல் பதிப்பகம் சார்பில் வெளியீடப்பட்டது. சென்னை அசோக்நகர் புரட்சியாளர் அம்பேத்கர் திடலில் நடைபெற்ற இவ்விழாவிற்கு  தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார்

சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் அய்யா ஆர்.நல்லகண்ணு, சட்டமன்ற உறுப்பினர் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழர் அ.சவுந்தரராஜன், தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தோழர் தியாகு ஆகியோர் பங்கேற்றனர்.


மக்கள் கவிஞர் எழுதிய தத்துவத் தலைமை நூலை அய்யா நல்லகண்ணு வெளியீட அதனை தோழர் அ.சவுந்தரராஜன் ,தோழர் தியாகு பெற்றுக்கொண்டனர்.

விடுதலைச்சிறுத்தைகள் அரசியல் தளங்களில் மட்டுமல்ல ,பண்பாட்டு தளத்திலும், தத்துவ தளத்திலும் சிறந்து விளங்குகிறது என்பதற்கு இந்நூல் ஒர் சாட்சியமாக இருக்கும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை.


நிகழ்ச்சியில் எழுச்சித்தமிழரின் உரை...