ஆசிரியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், தமிழ் வழிக்கல்வியை நடைமுறைப் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ) சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது.

உண்ணாவிரதத்துக்கு ஜாக்டோவின் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் தலைமை தாங்கினர். பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஆசியர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டுமென எழுச்சித்தலைவர் பேசினார்.