கையெழுத்து இயக்கப் போராட்டம்

இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்க வலியுறுத்தி, சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கையெழுத்து இயக்கம் நடத்தினார்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த கையொழுத்துப் போராட்டத்தில் பொதுமக்கள் பலர் ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டனர்.

இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக நீதி விசாரணை நடத்த வேண்டும் என விடுதலைகள் சிறுத்தைகள் சார்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் இந்த கையெழுத்து இயக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புகைப்படங்கள் : அகரன்