கொடிக்கம்பங்கள் அரைக்கம்பத்தில் பறக்க அறிவிப்பு

தலைமை அலுவலக அறிவிப்பு:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
~~~~~~~~~~~~~~~~~~~~~~

கட்சியின் தலைமைநிலைய பொறுப்பாளர் ( தலைவரின் தனி செயலாளர் ) மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன் அவர்களின் இறப்பையொட்டி தமிழகம் முழுவதும் கட்சியின் கொடிகளை ஒரு வார காலத்திற்கு ( மே 20-27 ) அரைக்கம்பத்தில் பறக்க விட வேண்டுமென அறிவிக்கப்பட்டது. அதனை முழுமையாக நடைமுறைப்படுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட செயலாளர்களுக்குத் தெரிவிக்கப் படுகிறது.

இந்த ஒருவார காலத்தில் கட்சிப் பொறுப்பாளர்கள் ஆங்காங்கே வெற்றிச்செல்வன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் வீரவணக்கச் சுவரொட்டிகளை வெளியிடவும் வேண்டுகிறேன்.

துக்கம் கடைபிடிக்கும் இந்த ஒருவார காலத்தில் தங்களுக்கான பிறந்தநாள் இருக்குமெனில், அந்நிகழ்ச்சிகளைத் தவிர்க்குமாறு வேண்டுகிறேன்.

இவண்:
தொல். திருமாவளவன்