20 தமிழர்கள் படுகொலை- ஆந்திரா அரசை கலைக்க வலியுறுத்தி போராட்டம்: திருமாவளவன் உட்பட 500 பேர் கைது20 தமிழரைப் படுகொலை செய்த ஆந்திரா மாநில அரசை கலைக்க வலியுறுத்தி சிபிஐ விசாரணைக்கு ஆணையிடக் கோரியும் இன்று (9.4.2015) பகல் 10.30 மணியளவில் சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே தொல்.திருமாவளவன் தலைமையில் 500மேற்பட்ட விடுதலைச்சிறுத்தைகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணிநேரம் இப்போராட்டம் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் பதற்றமும் ஏற்பட்டது. பின்னர் அனைவரையும் காவல்துறையினர் கைதுசெய்து கோயம்பேடு அருகேயுள்ள நெற்குன்றம், லட்சுமி திருமண மண்டபத்தில் காவலில் வைத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.