தமிழர் உரிமைகளை காப்போம் 28ம் தேதி பேரணியை வெற்றி பெறச் செய்வோம்


ஆந்திராவில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களுக்கு நீதி கேட்டும் ஆந்திரச் சிறைகளில் வாடும் ஆயிரக்கணக்கான தமிழர்களை விடுவிக்கக் கோரியும் எதிர்வரும் 28ம் தேதி சென்னையில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்திட தமிழ் அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கிறது. அப்பேரணியில் பெருந்திரளாக கலந்து கொண்டு வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஆந்திர போலீசாரால் படுகொலை செய்யப்பட்ட அனைத்து தமிழகர்களுக்கும் நீதி கேட்டு உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்திட வலியுறுத்தி நான் தொடுத்திருக்கும் வழக்கு வரும் (27-04-15) திங்களன்று விசாரணைக்கு வருகின்றது. இதற்கிடையில் பல்வேறு கட்சிகளும் ஒன்றினைந்து இந்தப் பிரச்சினையில் நீதி வழங்கிடக் கோரி மாபெரும் பேரணி ஒன்றை சென்னையில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பேரணியை வெற்றி பெறச் செய்வது நம் தலையாய கடமையாகும். எனவே விடுதலைச் சிறுத்தை கட்சி தொண்டர்களும் தமிழர் நலனில் அக்கறை உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் பேரணியில் பெருந்திரளாக பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.