எழுச்சித்தமிழரை மருத்துவமனையில் நேரில் சந்தித்து தோழமை தலைவர்கள் நலம் விசாரித்தனர்.

எழுச்சித்தமிழர் அவர்கள் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிகளுக்கு ஓய்வில்லாமல் தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருப்பதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி கடந்த மூன்று நாட்களாக மருத்துவப் பரிசோதனைக்காக திருச்சியிலுள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த எழுச்சித்தமிழரை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.


திமுக பொருளாளரும் முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தொலைபேசியில் எழுச்சித்தமிழரை தொடர்புகொண்டு உடல்நலனை விசாரித்தார். டெலோ அமைப்பின் தலைவரும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், திமுக முன்னாள் நடுவண் அமைச்சர் ஆ.இராசா, தமிழக முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கணேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், முன்னாள் திருச்சி துணை மேயர் அன்பழகன், தேசிய லீக் கட்சியின் தலைவர் தாவூத் மியான்கான் ஆகியோர் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களை திருச்சி காவேரி மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

தலைவர் நலமாக இருக்கிறார், மருத்துவர்கள் தலைவரை ஓய்வெடுக்க வலியுறுத்தியிருப்பதால் தோழர்கள் மருத்துவமனைக்கு சென்று தலைவரை சந்திக்க முயற்சிப்பதை தவிர்க்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை நிலையம்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.