ராஜபக்சவை தோற்கடித்த இலங்கை மக்களுக்கு நன்றி!

ராஜபக்சவை தோற்கடித்த இலங்கை மக்களுக்கு நன்றி!
புதிய அரசு தமிழர்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கவேண்டும்!

தொல். திருமாவளவன் வேண்டுகோள்!
=============

இலங்கை அதிபருக்கான தேர்தலில் இனப்படுகொலைக் குற்றவாளியான கொடுங்கோலன் ராசபக்சேவை  தண்டித்த இலங்கை மக்களை குறிப்பாக, தமிழ் மக்களை விடுதலைச்சிறுத்தைகள் பாராட்டுகிறது. தமிழ் மக்களிடையே மட்டுமின்றி சிங்கள மக்களிடையேயும் ராசபக்சே தம்முடைய நடவடிக்கைகளால் வெறுப்பை சம்பாதித்துள்ளார் என்பது தேர்தல் முடிவுகளில் இருந்து நிரூபனமாகியுள்ளது. இனவெறியை வைத்து அரசியல் நடத்த முனையும் எல்லோருக்கும் இதுவொரு பாடமாகும். தற்போது மைதரிபால அதிபராக வெற்றி பெற்றிருப்பது தமிழமக்களுக்கு மகிழச்சியை அளிக்கக்கூடியதோ நம்பிக்கை அளிக்கக்கூடியதோ அல்ல. எனினும்  முதலகட்டமாக சனநாயக வழியில் ராசபகசேவுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்னும் ஆறுதல் கிடைத்துள்ளது.

இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சவை ஆதரிக்கவேண்டாம் எனத் தமிழ் மக்கள் மன்றாடியபோதும் அதை அலட்சியப்படுத்திவிட்டு வெளிப்படையாகவே ராஜபக்சவை நரேந்திரமோடி தலைமையிலான இந்திய ஆட்சியாளர்கள் ஆதரித்தனர். இனியாவது இந்திய நலன்களையும் தமிழ் மக்களின் உணர்வுகளையும் அவர்கள் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகிறது .

அதிபர் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவு சரியானது என்பது நிரூபணமாகியுள்ளது. புதிய அதிபர் தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிற அதேவேளையில் தமிழர்களுக்கான அதிகார பகிர்வைச் செய்வதற்கு முன்வரவேண்டும்.  அத்துடன் முளவேலிமுகாமகளில இன்னும் சிறைப்படுத்தப்பட்டு இருப்பவரகளையும் சந்தேகத்தின் பெயரில் சிறைப்படுத்தப்பட்டு இருப்பவரகளையும் நல்லெண்ணத்துடன் உடனடியாக விடுவிக்க வேண்டும் . மேலும், இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்கவேண்டும். மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரமானத் தீர்வு ஒன்றைக் காணவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

சிங்கள ஆட்சியாளர்களிடமிருந்து அதிகாரம் பெறுவது மட்டுமே தமிழர்களுக்கு சமத்துவத்தை உறுதிசெய்துவிடாது. தமிழர்களிடையே மீண்டும் நிலவும் சாதிய பிரச்சனைகளையும் களைந்து அனைவரும் தமிழர்தான் என்ற உணர்வை ஏற்படுத்தும் பெரும் பொறுப்பு வடக்கு மாகாண அரசுக்கும் தமிழர் அமைப்புகளுக்கும் உள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறோம். தேயிலைத் தோட்டங்களில் அல்லலுறும் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கும், இப்போதும் சாதிய வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் பஞ்சமத் தமிழர்களுக்கும் காணி உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை உறுதிசெய்ய வடக்கு மாகாண அரசும் இலங்கையின் புதிய அரசும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்துகிறோம்!

இவண்
தொல். திருமாவளவன்