இராஐபக்சே திருப்பதி வருவதை கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்


இலங்கை அதிபர் இராஐபக்சே (இன்று 9.12.14)  திருப்பதி வருவதை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் திருப்பதி பேருந்து நிலையம் அருகே உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அருகில் மாலை 4.30  மணியளவில் நடைபெற்றது. இந்த  ஆர்ப்பாட்டத்தில் இராஐபக்சேவை கண்டித்து விடுதலைச்சிறுத்தைகள் முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டம் செய்த நூற்றுக்கணக்கான விடுதலைச்சிறுத்தைகளை கைது செய்து காவல்துறையினர் பேருந்தில் ஏற்றினர்.

இராஜபக்சே இன்று இரவு திருப்பதியில் தங்கியுள்ள நிலையில் விடுதலைச்சிறுத்தைகளின் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழகத்திலிருந்து காலையில்   இரயிலில் வந்த விடுதலைச்சிறுத்தைகள் ஏராளமானோரை ரேணிகுன்டா இரயில் நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பாலசிங்கம், நீலவானத்து நிலவன், ஆந்திர மாநில அமைப்புச் செயலாளர் வித்யாசாகர் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.