தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை விலக்கு: மக்களுக்குக் கிடைத்த வெற்றி

தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட
மரண தண்டனை விலக்கு:
மக்களுக்குக் கிடைத்த வெற்றி
தொல்.திருமாவளவன் அறிக்கை


 தமிழக மீனவர்கள் ஐவருக்கு விதிக்கப்பட்ட மரண தன்டனை ரத்து செய்யப்படுமென சிங்கள அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்திய அரசின் மேல் முறையீட்டு வழக்கைத் திரும்பப் பெற்றதும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்புச் செய்யப்படுமென்றும் இராஜபக்சே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள அரசின் இந்த முடிவு ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்திற்கும் பெரும் ஆறுதலை அளிக்கிறது.

கொழும்பு நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பால் தமிழகம் பெரும் கொந்தளிப்புக்குள்ளானது.  தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் ஒருமித்த குரலில் மரண தண்டனையைக் கைவிட வலியுறுத்தின.  இந்தியப் பிரதமரும் தமிழக மீனவர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யப் போவதாக அறிவித்திருப்பது மக்கள் போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.  மரண தண்டனைக்கு எதிராகப் போராடிய அனைவருக்கும், இந்தியப் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்

தொல்.திருமாவளவன்