மத்திய–மாநில அரசுகள் என்எல்சி தொழிலாளர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்:

என்.எல்.சி. ஒப்பந்தப் பணியாளர்கள்கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு மைய, மாநில அரசுகள் 
விரைந்து செயல்பட வேண்டும் 
தொல்.திருமாவளவன் றிக்கை


நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவரும் ஒப்பந்தப் பணியாளர்கள் கடந்த 40 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து அறப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஒப்பந்தப் பணியாளர்கள் அனைவரையும் நிரந்தரப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டுமெனவும்சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் அனைத்துக் கட்சியினரின் ஆதரவோடு போராடி வருகின்றனர்.

நிர்வாகம் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களின் பிரதிநிதிகள் அடுத்தடுத்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டும் அச்சிக்கல் இன்னும் ஒரு முடிவுக்கு வராமலிருக்கிறது.  தற்போதுமுற்றுகைப் போராட்டம் நடத்துவதற்கு ஒப்பந்தப் பணியாளர்கள் மட்டுமின்றி அனைத்துக் கட்சியினரும் அணிதிரண்டு வருகின்றனர்.  இதனால் கடலூர் மாவட்டத்தில் பதற்றம் உருவாகியுள்ளது.  மின் உற்பத்திப் பணிகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  எனவேநிர்வாகம் இதில் மெத்தனம் காட்டாமல் உடனடியாகத் தீர்வு காண்பதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக,விடுமுறை நாட்களையும் சம்பளத்துடன்கூடிய விடுப்பு நாட்களாக ஏற்க வேண்டுமென ஒப்பந்தப் பணியாளர்கள் விடுக்கும் கோரிக்கையினை நிறைவேற்ற தமக்கு அதிகாரம் இல்லையென்று நிர்வாகத் தரப்பில் சொல்லப்படுகிறது.  எனவேஅச்சிக்கலைத் தீர்க்க மைய அரசு உடனடியாகத் தலையிட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.
இந்தியாவிலேயே சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலாக இலாபம் ஈட்டித் தருகிற நவரத்னா’ என்னும் சிறப்பு விருது பெற்றிருக்கிற இந்த நிறுவனத்தில் ஒப்பந்தப் பணியாளர்களை கொத்தடிமைகளைப் போல நடத்துவது வேதனையளிக்கிறது.  ஆகவேஒப்பந்தப் பணியாளர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றுவதற்கு மைய அரசு முன்வர வேண்டுமெனவும்தமிழக அரசு அதற்கான முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

தீபாவளித் திருநாளுக்கு முன்னதாகவே ஒப்பந்தப் பணியாளர்களின் போராட்டம் நிறைவுறும் வகையில் மையமாநில அரசுகள் விரைந்து செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இவண்
தொல்.திருமாவளவன்