பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்; தொல்.திருமாவளவன் பங்கேற்பு



போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்கவேண்டும், போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியராக்கவேண்டும், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ‘அறிவர் அம்பேத்கார் போக்குவரத்து தொழிலாளர் விடுதலை முன்னணி’ சார்பில் நேற்று பல்லவன் சாலையில் உள்ள பல்லவன் இல்லம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு பேரவை பொதுச்செயலாளர் அர்ச்சுணன் தலைமை தாங்கினார். பொருளாளர் காளிமுத்து, துணை பொதுச்செயலாளர் வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, போக்குவரத்து தொழிலாளர்களின் நலன் கருதி ஊதிய உயர்வு கோரிக்கை தொடர்பான பேச்சுவார்த்தையை அரசு உடனடியாக தொடங்கவேண்டும். சுமார் 1½ லட்சம் ஊழியர்களை அரசு ஊழியர்களாக ஆக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.