ஈரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் தொல்.திருமாவளவன் பங்கேற்பு


தமிழக மற்றும் கர்நாடக எல்லையில் உள்ள மலைவாழ் மக்கள் மீது பொய் வழக்குகள் போடும் வனத்துறை மற்றும் போலீசாரை கண்டித்தும், தமிழகத்தை சேர்ந்த செட்டிப்பட்டி பழனிசாமி என்பவரை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறையை கண்டித்தும் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் நா.விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட துணை செயலாளர்கள் அரசாங்கம், மதிவாணன், பெ.ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் பா.பாஸ்கர் வரவேற்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி பேசினார். இதில் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் வன்னி அரசு, தனிச்செயலாளர் தகடூர் தமிழ்செல்வன், மாநில துணை செயலாளர் கனியமுதன், திராவிடர் கழக அமைப்பு செயலாளர் சண்முகம், வக்கீல் பிரிவு நிர்வாகி ஆ.ஜுலியஸ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முகமது ரிஸ்வான், மாநகர செயலாளர் அமீன் அகமது உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் தமிழ்தேசிய விடுதலை பேரவை மாநில துணை செயலாளர் சிறுத்தை வள்ளுவன், மாவட்ட செயலாளர் மிசா தங்கவேல், நிர்வாகிகள் கா.பொன்னரசு, கே.கே.மூர்த்தி, ஏ.பி.ஆர். மூர்த்தி, விஜய பாலன், ஜம்பை பேரூர் செயலாளர் பழனிச்சாமி, சேலம் மாவட்ட நிர்வாகிகள் அர்ஜுனன், நாவரசன், பாவேந்தன், குமணன், நாமக்கல் மாவட்ட நிர்வாகி குமணன், தர்மபுரி மாவட்ட நிர்வாகி எழிலன், திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் நா.தமிழ்முத்து, சண்முகம், சேதுபதி, அருணாசலம் உள்பட கட்சியினர், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.