மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம்

புலிப்பார்வை திரைப்படத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான காட்சிகள்
கேள்வியெழுப்பிய மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதலுக்கு
விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம்

தொல்.திருமாவளவன் அறிக்கை

திரைப்பட இசை வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட மாணவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.  இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

புலிப்பார்வை என்னும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னை சத்யம் திரையரங்கில் இன்று நடைபெற்றுள்ளது.  அந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள்அத்திரைப்படம் குறித்துச் சில கேள்விகளை எழுப்பியுள்ளனர்.  இதில் ஆத்திரமடைந்த அப்படக் குழுவினரும் அவர்களுக்கு ஆதரவானவர்களும் மாணவர்களை இரும்புக் கம்பிகள்உருட்டுக் கட்டைகள் போன்ற ஆயுதங்களால் மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.  இத்தாக்குதலில் செம்பியன்,மாறன்பிரதீப்பிரபா உள்ளிட்ட சிலர் மிகக் கடுமையான காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.  பின்னர்தாக்குதலுக்குள்ளான மாணவர்களையே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஈழத்தில் தமிழின விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றி தவறான கருத்துக்களைப் பரப்புவது,அண்மைக் காலமாக தமிழகத் திரைப்படத் துறையில் அதிகமாகி வருகிறது.  புலிப்பார்வை திரைப்படத்திலும் விடுதலைப் புலிகளைத் தவறாகச் சித்தரிக்கும் அத்தகைய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிகிறது. அப்படியிருந்தால்அத்தகைய காட்சிகளை நீக்கிவிட்டு படத்தைத் திரையிட வேண்டுமேயொழியஅது பற்றிக் கேள்வி எழுப்புகிறவர்களைஎதிர்ப்புத் தெரிவிப்பவர்களைத் தாக்குவது தமிழினத்திற்கு எதிரான போக்காகும். 

இதனை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். மேலும்கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.


இவண்

தொல்.திருமாவளவன்