கல்வி உரிமை மாநாடு - தீர்மானங்கள்

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி
கல்வி உரிமை மாநாடு
17.08.2014 மாலை 5 மணி சேலம்

மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்டு 17 தமிழர் எழுச்சி நாளன்று சேலத்தில் கல்வி உரிமை மாநாடு நடைபெற்றது.  தமிழக அரசின் பல்வேறு அடக்குமுறைகளையும் தடைகளையும் தகர்த்து வெற்றிகரமாக நடைபெற்ற இம்மாநாட்டில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கீழ்க்கண்ட தீர்மானங்களைப் படிக்கமாநாட்டிற்கு வந்திருந்த இலட்சக் கணக்கான விடுதலைச் சிறுத்தைகளின் பலத்த கையொலியுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

1.     அறைகூவல்
       ஒருநாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் அந்நாட்டின் அரசாங்கமே தரமான இலவசக்  கல்வியை அளிக்க வேண்டும் என்பதுதான் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை. அதைப் பின்பற்றியே ஐரோப்பிய நாடுகள் செயல்பட்டு வருகின்றன. ஐரோப்பிய நாடுகளில்தனியார் பள்ளிகளில் கல்வி பயிலுவதை மிகவும் குற்ற உணர்வாகவே மக்கள் பார்க்கின்றனர். அங்கு தனியார் பள்ளிகள் மிகவும் குறைவுஅரசுப் பள்ளிகளே அதிகம். ஆனால்இந்தியாவில் இந்த நிலைமை தலைகீழாக உள்ளது.  எனவேகல்வியை மக்கள்மயமாக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் முயற்சிக்குத் துணை நிற்க வேண்டுமென அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இம்மாநாடு அழைப்பு விடுக்கிறது.
       சாதிமத வேறுபாடின்றி சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் அடிப்படைக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை கட்டணமின்றிக் கிடைத்திட வேண்டுமென்கிற குறிக்கோளை எட்ட அனைத்து மக்களும் கல்விக்கான எமது இயக்கத்தில் பங்கெடுக்க வேண்டும் என இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது.

2.     வீரவணக்கம்
       நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 24 அன்று கடலூர் மாவட்டம்சிதம்பரம் அருகே வடக்கு மாங்குடி கிராமத்தில் சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட பெரியவர் பழனிதிருமதி பாப்பா ஆகியோருக்கும்நெல்லை மாவட்டம்சங்கரன்கோவில் அருகே உடப்பன்குளம் கிராமத்தில் ஆதிக்கச் சாதிவெறியர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட காளிராஜ்முருகன்கோவிந்தராஜ் ஆகியோருக்கும்,  நெல்லையில் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் மாநகர் மாவட்டச் செயலாளர் நெல்லை மோகன்சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட கொத்தங்குளம் மந்திரம் ஆகியோருக்கும்சமூக விரோதிகளால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட மாணவி கரூர் வினிதா அவர்களுக்கும்மணல் கொள்ளையைத் தடுத்ததனால் ஆதிக்கவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம்ஈச்சங்கரணை இராசேந்திரன் அவர்களுக்கும்உடல் நலிவுற்று காலமான ஈரோடு மாநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் செந்தில் (எ) செந்தமிழன் அவர்களுக்கும்இம்மாநாடு தமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறது.

3.     நன்றி
       அ)   சேலத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த கல்வி உரிமை மாநாட்டை வெற்றி பெறவிடாமல் தடுக்கும் வகையிலும் ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் வகையிலும் ஆளும் அதிகார வர்க்கம் கடைசி நிமிடம் வரையில் பல்வேறு நெருக்கடிகளைத் திணித்தது.  குறிப்பாகதாழ்த்தப்பட்ட-பழங்குடியினர்சிறுபான்மையினர் உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களுக்காகப் போராடும் விடுதலைச் சிறுத்தைகளின் எழுச்சியை நசுக்கும் வகையில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தமிழக அரசு அடக்குமுறைகளை ஏவியது. எனினும்ஜனநாயகத்தைக் காப்பாற்றும் வகையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையும் வழக்கை விசாரிணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதித்த உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அவர்களுக்கும்தீர்ப்பளித்த நீதியரசர்கள் திரு.இராமசுப்பிரமணியம்திரு. இராஜேஸ்வரன்திரு.தேவதாஸ் ஆகியோருக்கும்விடுதலைச் சிறுத்தைகளின் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் திரு.பிரபாகரன் அவர்களுக்கும் இம்மாநாடு தமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

       ஆ)  பல நூற்றாண்டுகளாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட சமூகத்தின் ஏழை மாணவ-மாணவியருக்கு உரிய கல்வி வழங்கப்பட வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்து பள்ளிகள் மற்றும் விடுதிகளை உருவாக்கிய பண்டிதர் அயோத்திதாசர்கர்னல் ஆல்காட்ரெவரென்ட் ஜான் ரத்தினம்ரெட்டமலை சீனிவாசன் மற்றும் தமிழ்வழி மாணவ-மாணவியருக்கு விடுதிகளை உருவாக்கியதுடன்தமிழ்வழிப் பாடத்திட்டங்களை உருவாக்கிய முன்னோடி பெருந்தலைவர் எம்.சி.ராசா உள்ளிட்டத் தலைவர்களுக்கு இம்மாநாடு தமது நன்றியினை உரித்தாக்குகிறது.

       இ)   இந்தியத் துணைக்கண்டத்தில் வாழும் அனைத்து மக்களும் கல்வி பெறுவதை உறுதிசெய்ய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், தமது வரைவு அரசமைப்புச் சட்டத்தில்கல்வியை அடிப்படை உரிமைகள்’ பகுதியில் உறுப்பு எண் 23 (1)இல் சேர்த்தார்.  அத்துடன்பகுதி 4 அரசு கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள்’ பகுதியில் உறுப்பு எண் 36ல் ஒவ்வொரு குடிமகனும் இலவச தொடக்கக் கல்வி பெற உரிமையுடையவராவர். இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் தொடக்க நிலையிலிருந்து பத்தாண்டுக் கால அளவிற்குள் அனைத்துச் சிறார்களும் பதினான்கு வயது முடியும் வரை இலவச கட்டாயக் கல்வி பெறுவதற்கு அரசு ஆவனசெய்தல் வேண்டும்’ என்று உறுதி செய்தார்.  இதுவே பின்னர் அரசமைப்புச் சட்டம் பிரிவு 45ல் இடம் பெற்றது.  இவ்வாறுகல்வி கற்கும் உரிமையை சாதிமத வேறுபாடின்றி அனைத்து மக்களும் பெறப் பாடுபட்ட புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு இம்மாநாடு நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது.

4.     அனைவருக்கும் இலவசக் கல்வி
       கல்வி யாவருக்கும் பிறப்புரிமை - அந்தக் கல்வியே மானுடத்தின் பெருவலிமை என்கிற முழக்கத்திற்கேற்ப ஒரு நாடு தம் மக்களின் அடிப்படை பிறப்புரிமையான கல்வியை அனைவருக்கும் இலவசமாகக் கொடுக்க வேண்டும்.  அதனால்தான் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 45ஆம் பிரிவில் 14 வயது வரை அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வியை அரசு வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். ஆனால்ரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் அச்சட்டத்தின்படி அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வியை மையமாநில அரசுகள் வழங்கவில்லை.  வளர்ந்த நாடுகள் பலவற்றில் அந்நாட்டு மக்களுக்கு கல்வியை இலவசமாக அவ்வரசுகள் வழங்கி வருகின்றன.  எனவேநம் நாட்டில் 2009ஆம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து அனைவருக்கும் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை மையமாநில அரசுகள் இலவசமாக வழங்க வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

5.     மாணவர்-ஆசிரியர் விகிதம்
       கல்வி உரிமைச் சட்டம் 2005லேயே உருவாக்கப்பட்டு, 4.8.2009 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 1.4.2010 அன்று நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இச்சட்டத்தை நிறைவேற்ற குறைந்தபட்சம் துணைக்கண்டம் முழுவதும், 10 இலட்சம் சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் கூடுதலாகத் தேவை. அப்போதுதான் 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற இலக்கை எட்டமுடியும். ஆனால் இதுவரை முந்தைய அரசும் இன்றைய அரசும் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்பதை இம்மாநாடு பதிவு செய்கிறது.

       மேலும் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த அடுத்த ஐந்தாண்டுகளுக்கு குறைந்தபட்சம் ரூ.லட்சத்து 31ஆயிரம் கோடிகள் தேவை என்று வல்லுநர்கள் தீர்மானித்துள்ளனர். ஆனால்இத்திட்டத்திற்கு மோடி அரசு அலுவலகப் பணிக்காக ரூபாய் 2000 கோடிகள் மட்டுமே ஒதுக்கியுள்ளது. மாறாகநடப்பு ஆண்டில் இராணுவத்திற்கு மட்டும் ரூ.2 லட்சத்து 29 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. இது கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்டதைவிட 12.5 சதவீதம் அதிகமாகும்.  மக்களின் கல்வி வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்காமல் ஆயுத வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் மத்திய அரசை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

6.     நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய வரலாற்று ஆய்வுப் பேரவை’ ((ICHR) என்னும் அமைப்பை முற்றிலும் இந்துத்துவ அடிப்படைவாதிகளின் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவரும்  நோக்கில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினைச் சார்ந்த எல்லபிரகாத சுதர்சனராவ் என்பவர் அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இது இந்திய வரலாற்றைத் திரித்து எழுதும் அடிப்படைவாதிகளுக்கு ஊக்கம் அளிக்கும் செயலாகும்.  எனவேநடுவண் அரசின் உள்நோக்கம் கொண்ட இச்செயல்பாட்டை  இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும்உடனடியாக அவரை அப்பொறுப்பிருந்து விலக்கிடவேண்டுமெனவும் மதச்சார்பற்ற அறிஞர் ஒருவரை அதன் தலைவராக நியமிக்க வேண்டுமெனவும் இம்மாநாடு இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது.

7.     தமிழ் மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்டிருப்பதால்தான் பிள்ளைகள் பெரும்பாலும் தனியார் பள்ளிகளுக்குச் செல்கின்றனர் என்கிற தோற்றத்தை உருவாக்கும் வகையிலும்தனியார் கல்வி நிறுவனங்களின் வணிகப் போக்கை ஊக்கப்படுத்தும் வகையிலும்அரசின் தொடக்கப் பள்ளிகளிலும் ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ள தமிழக அரசின் போக்கை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

8.     இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 86வது திருத்தத்தின்படி இலவச மற்றும் கட்டாயக் கல்வியானது 6 வயது முதல் 14 வயது வரை வழங்கப்படவேண்டுமென உறுப்பு எண் 21ஏ-இல் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால்இப்பிரிவில் பிறப்பு முதல் 6 வயது வரை குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் முன் பருவக் கல்வி தொடர்பாகவும், 14 வயதிலிருந்து 18 வயது வரையிலான மேல்நிலை பள்ளிக்கல்வி தொடர்பாகவும் ஏதும் கூறப்படவில்லை.  எனவேஅரசியலமைப்புச் சட்டத்தில் இது தொடர்பாக மேலும் திருத்தம் செய்யப்பட வேண்டும். அதாவதுபள்ளிக்கல்வி மட்டுமின்றி முதுநிலை பட்டப்படிப்பு வரையில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறும்வகையில்வயது வரம்பினை 6 முதல் 14 வரை என்பதை நீக்கம் செய்து பிறப்பு முதல் 24 வயது வரை என அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டுமென இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

9.     கல்வித் துறைக்கான அதிகாரங்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மாநிலப் பட்டியலில் இடம் பெற்றிருந்ததை மாற்றிஅவரச நிலைச் சட்டம் நடைமுறையில் இருந்தபோது ஒருங்கிணைந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இது மாநில அரசின் உரிமைகளில் தலையிடும் ஆதிக்கப்போக்கு மட்டுமின்றி பல்வேறு மொழிகளை பேசும் மக்களின் உரிமைகளை நசுக்கும் செயலாகும். எனவேகல்வித்துறைக்கான அதிகாரங்களை ஒருங்கிணைந்த பட்டியலில் இருந்து நீக்கிமீண்டும் மாநிலப் பட்டியலில் இணைக்க வேண்டுமென இம்மாநாடு நடுவண் அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

10. 1656 மொழிகள் பேசும் மக்களைக்கொண்ட இந்தியத் துணைக்கண்டத்தில் இந்தியை மட்டுமே முதன்மைப்படுத்துவதுடன் பள்ளிகளில் சமற்கிருத வாரம் கொண்டாடும் நடுவண் அரசின் போக்கை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அனைத்து தேசிய  மொழிகளும் வளம்பெறும் வகையில் இந்திய மொழிகள் வளர்ச்சி ஆணையம் ஒன்றை உருவாக்க வேண்டுமென்று இந்திய அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

11.  தன்னாட்சி அதிகாரமுள்ள கல்வி நிறுவனங்களான  தனியார் பள்ளிகள்தனியார் கல்லுரிகள்தனியார் பல்கலைக்கழகங்கள் என தனியார் கல்வி நிறுவனங்கள் நாடெங்கிலும் தங்களுக்கிடையிலான வணிகப் போட்டியில் கல்வியைக் கடைச் சரக்காக மாற்றிவருகின்றன.  இந்நிலையில், இந்திய அரசு தனியார் மற்றும் அரசு கூட்டுக் கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்கும் தற்போதைய கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் வழிவகுக்கிறது.  இது கல்வித் துறையை முற்றிலும் தனியார்மயப்படுத்துகிற முயற்சியாகும்.  இந்திய அரசு கல்வியைத் தனியார்மயமாக்கும் முயற்சியைக் கைவிட்டுகல்வியை அரசுடைமையாக்க வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

12. குழந்தைகளின் சிந்தனைத் திறன்படைப்புத் திறன் ஆகியவை வளர்ச்சி பெறுவதற்கும் வலுப் பெறுவதற்கும் தாய்மொழி வழியில் கல்வி பெறுவதே ஏதுவானதாக இருக்கும்.  உலகின் மூத்த மொழியும் செம்மொழியுமான தமிழ்மொழியை தொடக்க வகுப்பு முதல் முதுநிலை பட்டப் படிப்பு வரையில் பயிற்றுமொழியாகவும்ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளை விருப்ப மொழிகளாகவும் அங்கீகரிக்க வேண்டுமென தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

13.   தமிழகத்தில் நடைமுறையில் உள்ள சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டம் மேலும் தரமுள்ளதாக செலுமைப்படுத்தப்பட வேண்டுமென கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை ஏற்று தமிழக அரசு சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டத்தை மிகவும் தரமுள்ளதாக வடிவமைக்க வேண்டுமெனவும்அப்பாடத் திட்டத்தில் இயற்கைவிவசாயம் மற்றும் சமூகநீதி குறித்த பாடங்களைச் சேர்க்க வேண்டுமெனவும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. அத்துடன்பாடத்திட்ட வரைவுக் குழுவில் தனியார் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் இடம்பெறுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் இம்மாநாடு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.

14.   அரசு உதவி பெறும் மற்றும் உதவி பெறாத தனியார் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

15.   முதல் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக் கல்வியை முழுமையாகத் தொடர முடியாத நிலை 50 விழுக்காட்டினருக்கு மேல் உள்ளதென புள்ளிவிவரங்களின் மூலம் அறிய முடிகிறது.  இது ஒரு தேச வளர்ச்சிக்கும் சமூக மேம்பாட்டிற்கும் பெரும் சவாலாக உள்ளது. எனவேபள்ளிப் படிப்பைப் பாதியிலேயே கைவிட்டு இடைநிற்கும் அவலத்தைப் போக்குவதற்கு ஏற்ற வகையில்அனைவருக்கும் கல்வி - கட்டாயக் கல்வி - கட்டணமில்லாக் கல்வி என்னும் அடிப்படையில் கல்விக் கொள்கையை வரையறுத்து அவற்றைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டுமென தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

16.   மாணவர் சமூகத்தைப் பாழ்படுத்தும் வகையில் மது உள்ளிட்ட போதைப் பழக்கங்கள் நாடெங்கிலும் வெகுவாகப் பரவி வருகின்றன.  குறிப்பாககல்வி நிறுவனங்களுக்கு அருகிலேயே மது மற்றும் பிறவகைப் போதைப் பொருட்களின் விற்பனை வெளிப்படையாகவே நடைபெற்று வருகின்றன.  மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலன்களே தேசத்தின் நலன் என்பதைக் கருத்தில்கொண்டு போதைப் பழக்கத்திற்குள்ளாகும் மாணவர் சமூகத்தைப் பாதுகாக்கும் வகையில் முழுமையான மது விலக்கு மற்றும் போதை விலக்குக் கொள்கையினை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

17.   குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்னும் அடிப்படையில் முன்பே மழலையர் கல்வி என்னும் பெயரில் 2 வயதிலிருந்தே பெற்றோரிடமிருந்து குழந்தைகளைப் பிரிக்கும் அவலம் பெருகியுள்ளது.  இது குழந்தைகளின் உளவியலைக் கடுமையாகப் பாதிக்கும் என்பது உளவியல் வல்லுநர்களின் கருத்தாகும்.  தாயும் தந்தையும்தான் குழந்தைகளின் பாதுகாப்பு உணர்வுக்கும் தன்னம்பிக்கைக்கும் அடிப்படையாக உள்ளனர். பெற்றோரிடமிருந்தே தமக்கான உறவுச் சூழலையும் சமூகச் சூழலையும் கற்றுக்கொள்கின்றனர். ஆகவேகுழந்தைகளை பெற்றோரிடமிருந்து குறிப்பாகதாயிடமிருந்து 5 வயதுக்கு முன் பிரிக்கும் நிலை கூடாது.  5 வயது நிறைவு பெற்ற பின்னரே குழந்தைகளை கல்வி நிறுவனங்களில் சேர்க்க வேண்டும் என்பதை அரசின் கல்விக் கொள்கையாகத் தீர்மானிக்க வேண்டுமெனவும், 5 வயதுக்கு முந்தைய மழலையர் கல்வி முறையை அறவே கைவிட வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.  மேலும்கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையாக இல்லாமல் 5 வயதுக்கு மேல் எந்த வயதிலும் கல்வி கற்கலாம் என்னும் வகையில் கல்விக் கொள்கையை வரையறுக்க வேண்டுமென மையமாநில அரசுகளை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

18.   குழந்தைகளின் சொந்தக் கிராமம் அல்லது குடியிருப்புப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள அருகமைப் பள்ளிகளில் மட்டுமே கல்வி பெற வேண்டும் என்பதை கோத்தாரி மற்றும் முத்துக்குமரன் ஆணையம் ஆகியவற்றின் பரிந்துரைகள் வலியுறுத்துகின்றன. ஆனால்பல்வேறு காரணங்களை முன்வைத்து பெற்றோர் அல்லது கல்வி நிறுவன உரிமையாளர்கள் குழந்தைகளை அருகமைப் பள்ளிகளில் சேர்ப்பதைத் தவிர்க்கின்றனர்.  குறிப்பாகாதிமதம் மற்றும் பொருளாதாரக் காரணங்களின் அடிப்படையில் அருகமைப் பள்ளிகளில் சேர்ப்பது தவிர்க்கப்படுகிறது.  குழந்தை உளவியலை அடிப்படையாகக் கொண்டு அருகமைப் பள்ளிகளில் கல்வி கற்கும் திட்டத்தை முழுமையாகவும் தீவிரமாகவும் நடைமுறைப்படுத்த வேண்டுமென தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

19.   பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்னும் அடிப்படையில் ஆசிரியர் நியமனங்கள் உறுதி செய்யப்பட வேண்டும். அவ்வாறின்றிமாணவர்-ஆசிரியர் விகித அளவை மீறும் தனியார் கல்வி நிறுவனங்களின் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

20.   தலித் மற்றும் பழங்குடியின மாணவ-மாணவியருக்கு உயர் மற்றும் தொழிற் கல்விக்கு அரசாணை எண் 92ன்படி வழங்கப்படும் நிதி முறையாக அனைத்துக் கல்லூரிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

21.   தமிழகம் முழுவதுமுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.எஸ். மற்றும் எம்.டி. போன்ற முதுநிலை மருத்துவக் கல்விக்கான இடங்கள் மிகமிகக் குறைவான எண்ணிக்கையில் இருக்கின்றன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவம் பயிலகூடுதலாக இடங்களை அரசு உருவாக்க வேண்டும்.

22.   பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்துகொண்டிருப்பதற்கேற்ப புதிய விடுதிகள் கட்டப்பட வேண்டும்.  ஏற்கனவே இருக்கின்ற விடுதிகளின் தரத்தை உயர்த்தி அனைத்து வசதிகளையும் உருவாக்கித் தர வேண்டும்.

23.   அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கையின்போதும் ஆசிரியர் நியமனத்தின்போதும் இடஒதுக்கீட்டுக் கொள்கையை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். 

24.   ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளை சிறப்புப் பள்ளிகளைப் போல தரம் உயர்த்த வேண்டும்.

25.   பழங்குடி மாணவ-மாணவியர் சாதிச் சான்றிதழ் பெறுவதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதற்கு அரசு ஊழியர்களின் அலட்சியப் போக்கே காரணம். இதனால் பழங்குடி மாணவ-மாணவியர் கல்வியைத் தொடரமுடியாமல் இடையிலேயே கைவிடும் நிலை உருவாகியுள்ளதுஎனவே அம்மாணவ- மாணவியரின் அவல நிலையை மனதில் கொண்டு அவர்கள் சாதிச் சான்றிதழைப் பெற அவர்கள் வாழிடத்திலேயே ஆண்டுக்கொரு முறை சாதிச் சான்றுகள் வழங்கும் முகாமை நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

26.   மத்தியஅரசு நடத்தும் குடிமைப் பணிகள் தேர்வுகளில் தமிழ் மற்றும் இதர மொழிகளைச் சார்ந்தவர்கள் தேர்ச்சி பெறாதவண்ணம்ஆங்கிலம் பயின்றவர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ள திறனறித் தேர்வை உடனடியாக அரசு ரத்து செய்யுமாறும்முதல்நிலைத் தேர்வுமுதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளில் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளில் பயின்றவர்களுக்கும் சமவாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு மத்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

27.   தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவ-மாணவியர் தமக்கான கல்வி உதவித் தொகையை ஆண்டுத் தொடக்கத்திலேயே பெறுவதற்கு ஏதுவாக அனைத்துக் கல்வி நிறுவனங்களும் முன்தேதியிட்ட அரசு கருவூலக் காசோலையினை வழங்க வகைசெய்யும்படி இம்மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

28.   மருத்துவம் மற்றும் தொழிற்படிப்புகளில் ஈழத் தமிழர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.