அரசுப் பேருந்துகள், இரயில்களில் பயணம் செய்து மாநாட்டில் பங்கேற்க தொல்.திருமாவளவன் வேண்டுகோள்!

கல்வி உரிமை மாநாடு - வாகனங்களுக்குத் தடை
சேலம் மாவட்ட ஆட்சி நிர்வாகத்துக்கு எதிராக அவமதிப்பு வழக்குத் தொடருவோம்
அரசுப் பேருந்துகள்இரயில்களில் பயணம் செய்து மாநாட்டில் பங்கேற்க தொல்.திருமாவளவன் வேண்டுகோள்!


ஆகஸ்டு 17 அன்று சேலத்தில் நடைபெறவுள்ள விடுதலைச்சிறுத்தைகளின் கல்வி உரிமை மாநாட்டுக்கு காவல்துறை தடைவிதித்தது.  இதனை எதிர்த்து விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில்உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆகஸ்டு 14 அன்று அவ்வழக்கை விசாரித்த நீதியரசர் திரு.இராமசுப்ரமணியன் அவர்கள் மாநாட்டுக்கு அனுமதி வழங்கியதுடன்உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு ஆணையிட்டுள்ளார். இந்நிலையில்மாநாட்டுக்கு தமிழகம் தழுவிய அளவில் விடுதலைச்சிறுத்தைகள் அணிதிரண்டு வருகின்றனர். தற்போது உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் அவமதிக்கும் வகையில் சேலம் மாவட்ட ஆட்சி நிர்வாகம்திடீரென ஓர் ஆணை பிறப்பித்துள்ளது. மாநாட்டுக்கு வருவோர் வாடகை வண்டிகளில் வரக்கூடாதுசொந்த வண்டிகளில் மட்டுமே வரவேண்டுமென்று அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது. இதுதமிழக அரசியல் வரலாற்றில் முன்னெப்போதும் நடந்திராத புதுவகையான ஒடுக்குமுறையாகும்.  அத்துடன்,தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஏவப்படும் உச்சபட்சமான வன்கொடுமையாகும். 

நீதிமன்றத்தில் எமக்கு எதிராகஅரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாடகை வண்டிகளில் மாநாட்டுக்கு வரக்கூடாது’ என்று வாதாடியதை நீதியரசர் ஏற்றுக்கொள்ளவில்லை. திறந்த வண்டிகளில் வரக்கூடாது’ என்கிற வழக்கமான நிபந்தனையை மட்டுமே விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.  எனினும்தமிழக அரசு விடுதலைச்சிறுத்தைகளின் மாநாடு வெற்றி பெற்றுவிடக்கூடாது என்கிற உள்நோக்கத்தோடு இத்தகைய அடக்குமுறையை ஏவியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சேலம் மாவட்ட ஆட்சியரின் 144 (1), (2) மற்றும் (3) ஆணையைச் சுட்டிக்காட்டி மாநாட்டுக்குச் செல்வோரைத் தடுக்கின்றனர். மாவட்ட ஆட்சியரின் ஆணை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எந்த வகையில் கட்டுப்படுத்தும் என்று புரியவில்லை. அத்துடன்ஒரு மாவட்ட அளவிலே பிறப்பிக்கப்படும் ஆணை பிற மாவட்டங்களுக்கெல்லாம் எவ்வாறு பொருந்தும் என்றும் விளங்கவில்லை. முன்பணம் கொடுத்து உறுதிப்படுத்திவைத்த வாடகை வண்டி ஓட்டுநர்களையும் உரிமையாளர்களையும் காவல்துறையினர் அச்சுறுத்துகின்றனர்.   இதனால்மாநாட்டுக்கு வருவோரின் எண்ணிக்கையைக் குறைத்துக்காட்ட ஆட்சியாளர்கள்அதிகாரிகள் திட்டமிடுவதாகத் தெரிகிறது.  சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதைவிட அரசியல்ரீதியாகப் பழிவாங்க வேண்டுமென்பதில் குறியாகவுள்ளனர் என்பது வெளிப்படுகிறது.  

எனவேவிடுதலைச்சிறுத்தைகள் கட்டுப்பாடு காத்துமாநாட்டை வெற்றிபெறச் செய்யவேண்டும். அடக்குமுறைகளுக்காக அஞ்சுவதோ பின்வாங்குவதோ இல்லாமல் அரசுப் பேருந்துகள்இரயில்களில் பயணம் செய்து அமைதியான முறையில் மாநாட்டில் பங்கேற்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். உயர்நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் ஆணை பிறப்பித்துள்ள சேலம் மாவட்ட ஆட்சி நிர்வாகத்துக்கு எதிராக அவமதிப்பு வழக்குத் தொடருவோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். 

இவண்
தொல்.திருமாவளவன்