கல்வி உரிமை மாநாடு மீதான தடை நீங்கியது


கல்வி உரிமை மாநாடு மீதான தடை நீங்கியது. மாநாட்டிற்கு போடப்பட்டிருந்த 144 (1) (3) தடை நீங்கியது. விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் சேலத்தில் நடைபெறும் கல்வி உரிமை மாநாட்டிற்கு காவல்துறை தடை ஆணை பிறப்பித்ததை ரத்து செய்து கடந்த 15.08.2014 அன்று சென்னை உய்ர்நீதி மன்றம் உத்திரவிட்டது. உத்திரவில் மாநாட்டிற்கு வருபவர்கள் திறந்த வாகனங்களில் வரக்கூடாது, ஆயுதங்களைக் கொண்டுவரக்கூடாது, தவறான முழக்கங்களை எழுப்பக்கூடாது, நீர்நிலைகளை மாசுபடுத்தக் கூடாது, வாகனங்களை தேசிய நெடுஞ்சாலைகளில் நிறுத்தக்கூடாது என்ற நிபந்தனைகளை மட்டும் விதித்தது. வாடகை வண்டிகளில் வரக்கூடாது என்று உத்திரவிட வேண்டும் என கேட்ட அரசுத் தரப்பு வாதத்தை நீதி மன்றம் நிராகரித்து உத்திரவிட்டது.

உத்திரவு கிடைத்த மறுநாளே சேலம் மாவட்ட ஆட்சியர் உயர்நீதி மன்ற உத்திரவையே ரத்து செய்யும் விதமாக மாநாட்டிற்கு வருவோர் வாடகை வண்டிகள் மற்றும் பிற எந்த வாகனங்களும் வரக்கூடாது என்ற கோரிக்கையை அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி இருந்தது. இதனால் மாநாட்டிற்கு வருவோரின் வாகனங்கள் ஆங்காங்கே தடை செய்யப்பட்டன.

இதை எதிர்த்து தலைவர் திருமா அவர்கள் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக கருதி ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு.கவுல் அவர்கள் இன்று சிறப்பு அமர்வில் விசாரிக்கும்படி உத்திரவிட்டார். அதனடிப்படையில் நீதியரசர் திரு.இராமசுப்பிரமணியன் அவர்கள் விசாரித்து மாவட்ட ஆட்சியரின் ஆணை நீதிமன்ற உத்திரவை மீறுவதாக இருக்கிறது என்று கண்டித்ததுடன் மாவட்ட ஆட்சியரின் உத்திரவையும் ரத்து செய்தார். எனவே மாநாட்டிற்கு இருந்த கடைசி தடையும் நீங்கியது.

எனவே மாநாட்டிற்கு வருகை தரும் தோழர்கள் அமைதியுடன், அசம்பாவாதம் நடக்கா வண்ணம் இருக்குமாறும் அறிவுத்தப்படுகிறார்கள்.

நீதிமன்றத்தில் சிறப்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர்கள் திரு.பிரபாரகன், திரு.சங்கர சுப்பு உதவி புரிந்த திரு.பாலகிருஷ்ணன், திரு.செந்தில் ஆகியோருக்கு நன்றி.

இவண்