எழுச்சித்தமிழரின் மே நாள் வாழ்த்து

குறைந்த கூலிகால வரம்பற்ற உழைப்பு எனும்
கொடூரமான சுரண்டல் முறையை ஒழிப்பதையே
மே நாள் சூளுரையாக ஏற்போம்!
தொல்.திருமாவளவன் மே நாள் வாழ்த்து

உலகத் தொழிலாளர்களின் உன்னத நாளான மே நாளில் உழைக்கும் வர்க்கத்தினர் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

காலவரம்பின்றி கடுமையாக உழைத்து உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பேராற்றல் கொண்ட உழைக்கும் வர்க்கத்தைப் போற்றுவதற்குரிய சிறப்புவாய்ந்த நாளான மே நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.  தொழிலாளர்கள் மற்றும் இதர உழைக்கும் வர்க்கத்தை 8 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்கவோஅவர்களின் உழைப்பையும் ஆற்றலையும் சுரண்டவோ கூடாது என்கிற வரையறையை வகுத்த நாளே மே நாளாகும்.  அமெரிக்காவில் சிகாகோ நகரத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 8 மணி நேரம் மட்டுமே உழைப்பது என்னும் உரிமையை நிலைநாட்டுவதற்காகப் போராடி இரத்தம் சிந்திய நாள்.  இந்த நாளே இப்போது உலகத் தொழிலாளர்களின் உரிமை நாளாகப் போற்றப்படுகிறது.

இந்தியாவில் கோடிக்கணக்கான அமைப்புச்சாராத் தொழிலாளர்கள் எத்தகைய கால வரம்பும் இல்லாமல் உழைக்கும் நிலையில் உள்ளனர். ஒரு நாளைக்கு 20 மணி நேரத்திற்கும் மேலாக உழைக்கும் நிலையில் தொழிலாளர்கள் இங்கே கொத்தடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர்.  இவர்களின் உழைப்பு மிகக் கடுமையாகச் சுரண்டப்படுகிறது.  ஓய்வெடுக்கவோவிடுப்பில் செல்லவோதுக்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவோ அனுமதியின்றி கல் குவாரிகள்செங்கல் சூளைகள்நூற்பு ஆலைகள் எனப் பல்வேறு தளங்களில் தொழிலாளர்கள் கடுமையான வதைகளுக்குள்ளாகி வருகின்றனர்.  அவர்களை மீட்பதற்குஅவர்களின் வாழ்வுரிமைகளைப் பாதுகாப்பதற்கு இயலாத நிலையே இன்னும் இந்தியாவில் நிலவுகிறது.  இந்நிலையில்மே நாள் கொண்டாடுவது ஒரு சடங்காகிவிட்டதோ என்கிற வேதனை மேலிடுகிறது.

எனவேதமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுவதும் கொத்தடிமைகளாக வாழ்ந்துவரும் கோடிக்கணக்கான அமைப்புச்சாராத் தொழிலாளர்களை மீட்டெடுக்க வேண்டியதும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியதும் சனநாயகத்தில் நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரின் கடமையென இந்த மே நாளில் உறுதியேற்போம்குறைந்த கூலிகால வரம்பற்ற உழைப்பு என்னும் கொடூரமான சுரண்டல் முறையை ஒழிப்பதையே மே நாள் சூளுரையாக ஏற்போம் என அனைவருக்கும் வேண்டுகோள் விடுப்பதுடன்அனைத்துத் தரப்புத் தொழிலாளர்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவண்

தொல்.திருமாவளவன்