அண்ணலும் அண்ணனும்...


www.thiruma.in சார்பில் மாதந்தோறும் நடத்த தீர்மானிக்கபட்டு நடந்து வரும் கருத்தரங்கம் மற்றும் விவாதத்தின் இரண்டாம் நிகழ்வு இன்று எழும்பூர் ICSA அரங்கில் நடந்தேறியது. நமது அரசியலை நுண்மைப்படுத்துவது மற்றும் நமது அரசியல் விவாதங்களின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது . இன்று 'அண்ணலை தொடரும் அண்ணன்' என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. 


தஞ்சாவூர் , விருதுநகர், தருமபுரி , விழுப்புரம், திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து தோழர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

தோழர் கௌதம சன்னா, பேரா.குடியரசன், பேரா. சுரேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். 

பேரா.சுரேஷ் அவர்கள் நடைமுறை தேர்தல் அரசியலில் நாம் செய்யவேன்டுவன குறித்த தனது கருத்துக்களை முன்வைத்தார். தமிழ்மண் நாளிதழை அதிகமாக சுற்றுக்கு விடுவது மற்றும் அடுத்த வரும் தேர்தலுக்காக நாம் இப்பொழுதே திட்டமிட்டு பணியாற்றுவது குறித்து வலியுறுத்தி பேசினார்.

பேரா.குடியரசன், பாபாசாகேப் மற்றும் அண்ணன் திருமாவளவன் ஆகியோரின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் பாடங்கள் குறித்து உரையாற்றினார். அண்ணல் குறித்தான இதுவரை அறிந்திராத அரிய செய்திகளை பல்வேறு புதிய தகவல்களை சிறப்பான உத்வேகமூட்டும் வகையில் உரையை நிகழ்த்தினார். 

தோழர் சன்னா அவர்கள், அண்ணல் குறித்து, எழுச்சி தலைவர்,பண்டிதர் அயோத்திதாசர் குறித்து, பூர்வகுடி மக்கள் குறித்து, அன்றைய பிரிட்டிஷ் ஆட்சிமுறை குறித்து, பல்வேறு அன்றைய இன்றைய உலக நிகழ்வுகள் குறித்து மிகச் சிறப்பான உரையை வழன்கினார் .

இருவரின் உரைகளும் கலந்து கொண்ட தோழர்களுக்கு ஓர் புத்துணர்வை அளித்தது. எங்களுக்கும் மிகுந்த நிறைவைத் தந்தது. 


*தொடர்ந்து இக்கலந்துரையாடல் - கருத்தரங்கை நடத்துவது.
*அண்ணலின் சிந்தனைகளை கிராமங்கள் தோறும் கொண்டுசெல்வது.
*அண்ணன் அம்பேத்கரின் திரைப்படத்தை தமிழகம் முழுக்க திரையிடுவது.
*தமிழ்மண் இதழின் சந்தாதாரர்களை அதிகப்படுத்துவது. 
*கட்சிக்கும் , தலித் மக்களுக்கும் எதிராகாக பரப்பப்படும் அவதூறுகளை முறியடிப்பது 
*நமது பண்பாட்டு, கலாச்சார வேர்களையும் வரலாற்றையும் கண்டுபிடித்து ஆவணப் படுத்துவது.
*இதன் மூலம் கட்சியை வளப்படுத்தி எளிய மக்களை அதிகாரத்தை நோக்கி நகர்ந்துவது.

போன்ற தீர்மானங்கள் கருத்தரங்கின் முடிவில் நிறைவெற்றப்பட்டன.

****

எதிர்வரும் கருத்தரங்குகளில் நீங்களும் எங்களோடு கலந்துகொள்ள தொடர்புகொள்ள வேண்டிய எண்கள் 
ஸ்ரீதர் - 9841544115, தேவசுந்தரதாஸ் - 9500773995