யார் பிரதமர் என்பதைவிட மோடி பிரதமராக வரக்கூடாது என்பதுதான் முக்கியமானது

தன்னுடைய சொந்த சாதிகாரனை வன்முறைக்கு தூண்டிவிட்டு சிறைசாலைக்கு தள்ளிவிடுகிற ஒரே தலைவர் இந்தியாவிலேயே இவர் தான், தன்னுடைய மகன் மட்டும் தான் மந்திரி ஆகவேண்டும் தன்னுடைய மகன் மட்டும் தான் வெற்றிபெற வேண்டும்.  8 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள் தன்மகன் தொகுதியைத் தவிர்த்து வேறு தொகுதியில் எங்காவது பிரச்சாரத்துக்கு போயிருக்காரா தன்னுடைய மகன் போட்டியிடுகிற தொகுதியிலேயே படுத்துகிடக்கிறார். தன்னுடைய மகன் மட்டும் தான் வெற்றி பெறவேண்டும் இப்படியொரு தலைவனை இந்தியாவிலேயே கிடையாது உலகத்திலேயே கிடையாது .


நான் வன்னியர் சமூகத்திற்கு எதிரி இல்லை எந்த சமுகத்திற்கும் எதிரி இல்லை. என்னுடைய சொந்த சகோதரனாக அன்பு சகோதரர் சிவசங்கரனை பார்க்கிறேன் என்னுடைய உடன்பிறந்த அண்ணனாக அண்ணன் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களை பார்க்கிறேன். இந்தியா, தமிழகம் முழுவதும் இப்படி அனைத்து சமூகத்தினரையும் எனது உடன்பிறப்புகளாக தான் பார்க்கிறேன். ஏன் என்றால் எனக்கு கொள்கை பிடிப்பு இருக்கிறது கோட்பாட்டு பிடிப்பு இருக்கிறது.

பிஜபியோடு நான் சேரவேண்டாம் என்று சொல்கிறேன். ஏன் என்றால் அத்வானியால் நரேந்திர மோடியால் தலித்மக்களின் இடஒதுக்கிட்டிலே கைவைக்க முடியாது. நான் கவலைப்படத் தேவையில்லை சொல்லப் போனால் ராம்விலாஸ் பஸ்வான் போல, அத்வாலே போல, நான் பிஜபியோடு கைகோர்த்து இருக்கமுடியும் .

நான் பிஜபியோடு கைகோர்த்திருந்தால் என்னை தழுவுவதற்கு ஆள் அங்கு உண்டு. எத்தனையோ பேர் என்னை வந்து பார்த்தார்கள் நரேந்திர மோடியை சந்திபதற்கு ஏற்பாடு செய்த்தார்கள் நான் சொன்னேன் உங்கள் நட்புக்கு நான் தலைவணங்குகிறேன், ஆனால் நான் மோடியை பார்க்கமாட்டேன், சந்திக்கமாட்டேன் என்று சொன்னேன் .

ஆனால் கிழக்கே உதிக்கிற சூரியன் மேற்கே உதித்தாலும், உழன்றுக் கொண்டிருகிற மேகம் அப்படியே நின்றாலும், திராவிடக் கட்சிகளோடு கூட்டணி இல்லை, தேசிய கட்சிகளோடு கூட்டணி இல்லை.  தேமுதிக திராவிட கட்சி இல்லையா ,மதிமுக திராவிட கட்சி இல்லையா பிஜேபி தேசிய கட்சி இல்லையா யாரை ஏமாற்றுவது. 

இவ்வளவு நாள் சொந்த சாதி மக்களிடம் போய் யாருடனும் போக மாட்டேன், உங்களைத் தான் நம்பிக் கிடக்குறேன் யார் உடனும் சேரமாட்டேன் உங்களைத் தான் நம்பிக் கிடக்குறேன். இப்படி யாரை எமாற்றினார்கள்? தலித் மக்களை ஏமாற்றவில்லை, முதலாளிகளை ஏமாற்றவில்லை, செட்டியார்களை ஏமாற்றவில்லை, கோனர்களை ஏமாற்றவில்லை சொந்தசாதி மக்களை ஏமாற்றியிருகிறார். ஆக சமூகநீதி கோட்பாட்டுக்கு எதிரியார் ?

அதனால் தலைவர் கலைஞர் 90 வயதை தாண்டிய நிலையிலும் பிரச்சாரம் செய்கிறார் நீங்கள் நினைத்து பார்க்கவேண்டும் காங்கிரசோடு கூட்டணி வேண்டாம் என்று சொன்ன தலைவர் கலைஞர் ஏன் பிஜபியோடு கூட்டணி சேர்ந்து இருக்க கூடாதா?

மோடிக்கு அலை வீசுகிறது, அலை வீசுகிறது என்றார்களே அப்படி அலை அடிக்கிற கட்சியோடு போய் சேர்ந்தால் தானும் வெற்றி பெறலாம் ஆட்சிக்கு வரலாம், அமைச்சர் பதவி பெறலாம் என தலைவர் கலைஞர் ஆசைபட்டால் மோடியோடு கூட்டணி சேர்ந்து இருக்கமாட்டாரா?

ஏன் தலைவர் சேரவில்லை அடுத்த பிரதமர் மோடியோடு சேராத தலைவர் கலைஞர் உங்களின் ஒருவனாக உங்களோடு உழன்றுக் கொண்டிருகிற இந்த சாமானியனான திருமாவளவனை கூட்டணியில் சேர்த்து இருக்கிறார் .

திருமாவளவன் மோடியோடு பெரிய ஆளா? திருமாவளவன் தேசிய முக்கியத்துவம் பெற்ற ஆளா? திருமாவளவனுக்கு ஊடகம் முக்கியத்துவம் உண்டா இந்த செய்தி கூட எந்த பத்திரிகையிலும் போடமாட்டர்கள். பணம் கொடுகிறவர்களுக்கு தான் செய்திவரும் என்னால் பணம் கொடுக்கமுடியாது ஊடகத்துக்கும் பணம் கொடுக்க முடியாது, ஓட்டுக்கு பணம் கொடுக்க முடியாது, ஓடி உழைக்கிற உங்களுக்கே என்னால் பணம் கொடுக்க முடியாவில்லை, உழைக்கிற உங்களுக்கு என்னால் ஒரு தேநீர் கூடவாங்கி கொடுக்க முடியவில்லை எனக்காக நீங்கள் பட்டினி கிடந்தது உழைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் உள்பட அத்தனைபேருக்கும் சொல்லுகிறேன் என்கையால் ஒரு ரூபாய் கூட திமுக தொண்டர்களுக்கு கொடுக்கவில்லை. என் உயிரின் உயிரான விடுதலைச்சிறுத்தைகளுக்கு கொடுக்கவில்லை.

வந்தால் வரட்டும் திருமாவளவன் நல்ல வேட்பாளர் என்று பொதுமக்கள் நினைத்தால் என்னை தேர்வு செய்யட்டும் ,திருமாவளவன் நாடாளுமன்றத்தில் பேசக்கூடிய தகுதியுள்ளவன் என்று மக்கள் நினைத்தால் எனக்கு வாக்கு அளிகட்டும். திருமாவளவனுக்கு மதசார்பின்மையை பற்றி பேசத்தெரியும் சமூகநீதியை பற்றி பேசத்தெரியும் கொள்கைகளை வரையறை செய்யமுடியும் என்று திருமாவளவனுக்கு தகுதி இருக்கிறதா அல்லது என்னை எதிர்த்து போட்டியிடுகிற மற்ற வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறாதா என்பதை பார்கட்டும்.

இன்றைக்கு நான் சொல்லுகிறேன் திராவிட முன்னேற்ற கூட்டணி 40/40 வெற்றிபெறும் அப்படி வெற்றிபெற்றால் யார் பிரதமர் என்பதைவிட மோடி பிரதமராக வரக்கூடாது என்பதுதான் முக்கியமானது அதற்காகத்தான் நான் வாக்கு கேக்குறேன் பதவி சுகத்திற்காக அல்ல. என்னை நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கினீர்கள் இந்த பதவியை பயன்படுத்தி நான் எதையும் செய்துகொள்ளவில்லை. பதவியை ஒரு பொருட்டாக கருதியதில்லை. ஆனால் நம்மை பற்றிய கொள்கை கோட்பாடுகளை வரையறை செய்கிற இடத்தில் இந்த ஏழை எளியவர்களின் குரலாக ஒலிக்கவேண்டும் என்ற அடிப்படையில் என்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப சொல்லி கட்டளையிட்டது யார்?  தலைவர் கலைஞர் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற மாநாட்டிலே தலைவர் கலைஞர் சொன்னார் இங்கே முழங்கிய தம்பி திருமாவளவனின் முழக்கம் நாடாளுமன்றத்தில் ஒலிக்கட்டும் என்று சொன்னார். திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் உயிர்கொடுத்து வேலை செய்தார்கள் சிவசங்கர் உள்பட சிதம்பரம் தொகுதி முழுவதும் ஓடிஆடி உழைத்தார்கள் 4,28,894 வாக்குகள் போனமுறை பெற்றோம் மகத்தான வெற்றி மாபெரும் வெற்றி நம்மை எதிர்த்து போட்டியிட்டவர்கள் வெட்கித்தலைகுனியும்படியான வெற்றி 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றோம் .

தலைவர் கலைஞரால் நமக்கு கிடைத்த மாபெரும் வெற்றி வெற்றிபெற்ற இந்த தொகுதி நாம் இழந்துவிடக்கூடாது இந்த தொகுதியை நாம் தக்கவைத்து கொள்ள வேண்டும் இந்த தொகுதி திராவிட முன்னேற்ற கழகத்திற்கான தொகுதி தொடர்ந்து இந்த தொகுதியை திமுக கூட்டணிதான் வெற்றிபெற்று இருக்கிறது .

சிதம்பரம் தொகுதி என்றாலே அது சிறுத்தைகளின் தொகுதி ஆகவேண்டும் எனது அருமை பெரியோர்களே தாய்மார்களே வாக்காளா பெருமக்களே தலைவர் கலைஞர் கரத்தை வலுப்படுத்துங்கள்.... மோதிரம் சின்னத்தில் வாக்களியுங்கள்... என்று சொல்லி விடைபெறுகிறேன்.எழுச்சித் தமிழரின் ஆற்றிய உரையின் காணொளி காட்சி