வடக்குமாங்குடி தலித் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் - அவதூறு பரப்புகிறவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் - தொல்.திருமா

வடக்குமாங்குடி தலித் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல்
சாதிவெறியர்கள் மீதும்
அவதூறு பரப்புகிறவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து
சமூக அமைதியை நிலைநாட்ட வேண்டும்!
தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் கோரிக்கை

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் சாதிமத வெறியர்களுக்கு ஏமாற்றமளிக்கும் வகையில் அமைதியான முறையில் நடந்தேறியிருக்கிறது.  வன்முறைகளைத் தூண்டிசட்டம்-ஒழுங்கைச் சீர்குலைத்துசாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் வாக்குகளைத் திரட்டி விடலாம் என்ற கனவுகளோடு சிலர் தேர்தல் களத்தில் இறங்கினர்.  அப்பாவி மக்களிடையே வெறுப்பை விதைத்து பகையை மூட்டிவன்முறைகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேட முயற்சித்தவர்களுக்குப் பாடம் புகட்டும் வகையில்மக்கள் தேர்தல் முடிவுகளை வழங்க உள்ளனர். 

சாதிமத வெறியர்கள் நினைத்த அளவுக்கு வன்முறைகள் நடைபெறவில்லை என்றாலும்,குறிப்பிட்ட சில பகுதிகளில் சமூகப் பதற்ற நிலையை உருவாக்கினர்.  சில இடங்களில் வன்முறை வெறியாட்டங்களிலும் ஈடுபட்டனர்.  அருவறுக்கத்தக்க வகையில்வெளிப்படையாகப் பேசவும் ஏசவும் செய்தனர்.  ஆதாரமில்லாத அபாண்டமான அவதூறுகளைப் பரப்பினர்.

சிதம்பரம் தொகுதியின் வேட்பாளர் என்கிற முறையில் திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுடன்அனைத்துத் தரப்பினரிடையேயும் வாக்குச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டேன்.  அப்போது ஒரு குறிப்பிட்ட கட்சியினர் சாதியின் பெயரால் இளம்பிஞ்சுகளிடையே சாதி உணர்வைத் தூண்டி வம்பிழுக்கச் செய்தனர்.  இருட்டில் மறைந்து நின்று கற்களை எறிந்தனர்.   எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டுசகித்துக்கொண்டு அனைத்துத் தரப்பினரையும் நேசித்தவாறு வாக்குச் சேகரித்ததுடன் சட்டம்-ஒழுங்கையும் சமூக அமைதியையும் நிலைநாட்டும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்டுப்பாடாக தேர்தல் பணிகளை ஆற்றினோம். 

எனினும்சிதம்பரம் அருகே வடக்குமாங்குடி என்னும் கிராமத்தில் சுமார் 80 குடும்பங்கள் மட்டுமே உள்ள சிறுபான்மையானராக வாழும் தலித் மக்களைத் தங்கள் சின்னத்திற்கு வாக்களிக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். அதற்கு தலித் மக்கள் உடன்படவில்லை என்பதுடன்கள்ள ஓட்டுப் போட முயற்சித்தவர்களையும் தடுத்துள்ளனர்.  இதனால் ஆத்திரமடைந்த சாதிவெறியர்கள் வழக்கம்போல தெரு விளக்குகளை அணைத்துவிட்டு கொடூரமான ஆயுதங்களுடன் தலித் குடியிருப்புகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.  சுமார் 40 வீடுகளைக் கடுமையாகச் சேதப்படுத்தியுள்ளனர்.  விடுதலைச் சிறுத்தைகளின் பொறுப்பாளர் வீட்டைக் குறிவைத்துதருமபுரி பாணியில்பொருட்களைக் கொள்ளையடித்த பின்னர் தாக்குதல் நடத்திவிட்டுப் பின்னர் குடிசைகளுக்குத் தீ வைத்துள்ளனர்.  காவல்துறையினர் தீயைப் பரவவிடாமல் தடுத்துள்ளனர்.  அந்தத் தாக்குதலில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.  பாப்பா என்பவர் தலையில் கடுமையான காயமுற்று புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்.  மற்றவர்கள் கடலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில்வழக்கம்போல பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழியைப் போடும் வகையில் சிலர் அவதூறு பரப்புகின்றனர்.  பெண்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் தலித் மக்களைத் தாக்கியுள்ள நிலையில்காவல்துறையினர் சுமார் 20 பேரை மட்டுமே கைது செய்துள்ளனர்.  நேரடியாக வன்முறையில் ஈடுபட்டவர்களை இன்னும் கைது செய்யவில்லை.  வடக்குமாங்குடியில் நடந்ததைப் போலவே வடமாவட்டங்களில் பெரும்பாலான கிராமங்களில் சமூகப் பதற்றத்தை உருவாக்கி ஒரு சில இடங்களில் தலித் மக்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.

உண்மை நிலை இவ்வாறிருக்கவிடுதலைச் சிறுத்தைகள் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று மீண்டும் மீண்டும் பழி சுமத்துகின்றனர். இது மேலும் சமூகப் பதற்றத்தை உருவாக்கும்சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைக்கும்வன்முறைகளுக்கு வழிவகுக்கும்.  எனவேதமிழக அரசு இவ்வாறு அவதூறு பரப்புகிறவர்களைக் கட்டுப்படுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  வடக்குமாங்குடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக் குடியிருப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.  அந்தப் பகுதியில் அவர்களால் தங்கியிருந்து வாழ முடியாது என்று பாதிக்கப்பட்ட தலித் மக்கள் அச்சப்படுகின்றனர்.  எனவேவன்முறையில் ஈடுபட்ட சாதிவெறியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன்இவ்வாறு அவதூறு பரப்புகிறவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்துசமூக அமைதியை நிலைநாட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.  வாக்கு எண்ணிக்கையின்போது மீண்டும் அவர்கள் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டு வருகின்றனர். எனவேதமிழகம் முழுவதும் கூடுதல் காவல்துறை பாதுகாப்பு வழங்கிட ஆவன செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்

தொல்.திருமாவளவன்