சென்னை, நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் பன்னாட்டு தோல் பொருள் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் இலங்கை நிறுவனம் கலந்துகொள்வதைக் கண்டித்தும், அங்கு ஏற்றப்பட்டுள்ள இலங்கைக் கொடியை அகற்றக்கோரியும், இன்று (2-2-2012) காலை 10 மதியளவில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வன்னிஅரசு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் உஞ்சை அரசன், பாலசிங்கம், து.கா. பகலவன், புதியவன் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சிறுத்தைகள் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு ‘அனுமதியோம்! அனுமதியோம்! இலங்கை நிறுவனத்தை அனுமதியோம்! இனவெறி சிங்களக் கொடி தமிழகத்தில் பறக்க அனுமதியோம்! அனுமதியோம்! ஈழத் தமிழரைக் கொன்று குவித்த இனவெறி இலங்கை நிறுவனத்தை தமிழகத்திற்குள் அனுமதியோம்! இலங்கை நிறுவனத்தை அனுமதித்த இந்திய அரசை கண்டிக்கிறோம்!’ என்று முழங்கியவாறே டிரேட் சென்டரை நோக்கி சென்றனர். அப்போது அரங்கினுள் நுழைந்த சிறுத்தைகள் சிலர் அங்கு ஏற்றப்பட்டிருந்த இலங்கைக் கொடியை இறக்கி அதனை தீயிட்டுக் கொளுத்தியபடி முழக்கங்களை எழுப்பினர். காவல்துறை அனைவரையும் தடுத்து நிறுத்திக் கைது செய்து திருமண மண்டபம் ஒன்றில் அடைத்துள்ளது.
- Recent Posts
- Comments
Video of the Week
-
........ஈழ உணர்வாளர்கள் அவசியம் காணவேண்டிய காணொளி.....








