Tuesday, September 20, 2011

பரமக்குடி அரசபயங்கரவாத்தைக் கண்டித்து மதுரையில் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

 
மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே இன்று விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பரமக்குடி சம்பவத்தை கண்டித்தும், சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


எழுச்சிதமிழர் திருமாவளவன் கண்டன உரை


ராம்விலாஸ் பாஸ்வான் கண்டன உரை



இந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவன தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். இதில் மாநில பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன், அமைப்பு செயலாளர் ஆற்றலரசு, தலைமை நிலைய செயலாளர் பாவரசு, துணை பொதுச்செயலாளர் கனியமுதன், மதுரை மாவட்டசெயலாளர்கள் பாண்டியம்மாள், எல்லாளன், முற்போக்கு மாணவர் அமைப்பு துணை செயலாளர் இன்குலாப், செய்தித் தொடர்பாளர் அமுதன், மாநில நிர்வாகிகள் மற்றும் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More