இசைஞானி இளையராஜா அவர்களை திருமாவளவன் நேரில் சந்தித்து வாழ்த்து# திருமாவளவன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சொன்னாலும் சொல்வார்கள்- வன்னிஅரசு# சினிமாவை பார்த்து ஏமாறும் காலம் அல்ல: விஜயகாந்த்தின் முதல்வர் கனவு பலிக்காது# தமிழகமெங்கும் முத்துக்குமார் பாசறை தொடங்கப்படும்:தொல்.திருமாவளவன் அறிவிப்பு# இந்திய-இலங்கை அதிபர் தேர்தல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் விடுதலைச்சிறுத்தைகளும்!# கரும்புலி முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் நடந்தது என்ன? -வன்னிஅரசு மாநிலச் செயற்குழுக் கூட்டம் - தீர்மானங்கள் # ''தம்பி உயிரோடு இருக்கிறார்... கனடாவில் என்னை சந்திப்பார்!'' - ஜூ.வி நேர்காணலில்..திருமா# அமரர் வேலுப்பிள்ளைக்கு - தொல்.திருமாவளவன் இறுதி அஞ்சலி#ஒப்புவமை இல்லாத மாவீரரை தமிழினத்துக்குத் தந்த மாவீரர்! திரு. வேலுப்பிள்ளை - தொல். திருமாவளவன் அறிக்கை #தமிழீழமே தீர்வு: தமிழகத்திலும் பொதுவாக்கெடுப்பு! - திருமா அறிக்கை # இரண்டாம் ஆண்டில் www.thiruma.in # இராமன் மிகப்பெரிய பயங்கர‌வாதி நாடாளுமன்ற அவையில் திருமா பேச்சு # ஈழத்தமிழர் பிரச்சனை 10 கோடி தமிழர்களை கொண்ட ஒரு தேசிய இனத்தின் பிரச்சனை -பாராளுமன்றத்தில் திருமா உரை #
Showing newest 15 of 28 posts from October 2009. Show older posts
Showing newest 15 of 28 posts from October 2009. Show older posts

Saturday, October 31, 2009

அசோக் நகர் நிலம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவை -எதிர் தரப்பிற்கு ஆதரவாக காவல்துறை தொல். திருமாவளவன் கண்டனம்

அசோக் நகர் நிலம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு
எதிர் தரப்பிற்கு ஆதரவாக காவல்துறை
தொல். திருமாவளவன் கண்டனம்




விடுதலைச் சிறுத்த்தைகள் கட்சியின் தலைமை அலுவலகம் கடந்த 2006முதல் சென்னை, அசோக் நகர், நூறடிச் சாலை, முதல் நிழற்சாலை, என்- 4- ஏ ன்ற முகவரியில் இயங்கி வந்தது. அந்த நிலம் திருமதி மீனாட்சி அம்மாள் ன்பவரிடம் கிரையம் செய்யப்பட்டது. மீனாட்சி அம்மாளின் கணவர் பாலகிருஷ்ணன் ன்பவரின் இன்னொரு மனைவியான லட்சுமி தேவி என்பவரின் பெயரில் இருந்த நிலம் அது. லட்சுமிதேவியும், பாலகிருஷ்ணனும் காலமாகிவிட்ட நிலையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தம்முடைய பாதுகாப்பிலிருந்த நிலத்தை பாலகிருஷ்ணனின்
மனைவி விடுதலைச் சிறுத்தைகளுக்கு விற்பனை செய்தார். பாலகிருஷ்ணனின் திர்த்தரப்பான சிவராம பிரசாத் என்பவரின் லட்சுமிதேவியின் ஒன்றுவிட்ட உறவினர்களின் நண்பர்களிடமிருந்து பொது அதிகாரம் பெற்றவர் ன்னும் பெயரில் திர்ப்புத் தெரிவித்து வந்தார். இருவருக்குமிடையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கு நடந்து வருகிறது. அந்நிலத்திற்கான உரிமை மூலம் (டைட்டில்) யாருக்கு ன்பது தொடர்பான வழக்கு இன்னும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில் கடந்த சூலை 23ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகளிடமிருந்து அடமானம் பெற்ற ஒருவர் அந்நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும், அங்கிருந்து வெளியேறும்படியும் அடமானம் பெற்றவருக்கு திராக உயர்நீதிமன்றத்தில் தீர்ப்புச் சொல்லப்பட்டது. அரசுக்கும் காவல்துறையினருக்கும் நெருக்கடி ஏற்படாத வகையில் ஒத்துழைக்க வேண்டும் ன்ற நல்லெண்ணத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைமை அலுவலகத்தை காலி செய்துகொண்டு நிலத்தைக் காவல்துறையிடம் ஒப்படைத்தோம். அந்நிலத்தை திர்த்தரப்பிடம் ஒப்படைக்கும்படி நீதிமன்றத் தீர்ப்பில் துவும் குறிப்பிடப்படவில்லை. ஏனெனில் உரிமை மூலம் தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதே அதற்குக் காரணமாகும். ஆனாலும், சென்னை மாநகரக் காவல்துறை தன்னிச்சையாக அவ்விடத்தை திர்த்தரப்பில் ஒப்படைப்பதில் தொடர்ந்து ஆர்வம் காட்டிவருவது ஏனென்று விளங்கவில்லை.

கடந்த செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் காவல்துறை பாதுகாப்போடு திர்த்தரப்பைச் சார்ந்தவர்கள் அந்நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சித்தனர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றத்தில் வழக்காடியதைத் தவிர அந்நிலத்திற்கும் அவர்களுக்கும் ந்தத் தொடர்பும் இருந்ததில்லை. ஆகவே, மக்கு நிலத்தை விற்பனை செய்த மீனாட்சி அம்மாள் தரப்பினரும் விடுதலைச் சிறுத்தைகளும் திர்த் தரப்பிடம் நிலத்தை ஒப்படைக்கக் கூடாது ன்று திர்ப்புத் தெரிவித்தோம்.

இந்நிலையில் திடீரென இன்று (31Š10Š2009) விடியற்காலை 3.00 மணியளவில் திர்த்தரப்பான சிவராம பிரசாத்திற்கு ஆதரவாக காவல்துறையினரே அந்நிலத்தை ஆக்கிரமித்து மது கட்டடங்களையயல்லாம் இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளனர். ஆனால், நிலத்தை முறைப்படி கிரையம் செய்திருக்கிற விடுதலைச் சிறுத்தைகளை ஆக்கிரமிப்பாளர்கள் ன்று தவறான கருத்தை பரப்புவதில் காவல்துறையினரும் திர்த்தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர். இப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள உரிமை மூலம் தொடர்பான வழக்கு முடியும் வரையில் அந்நிலத்தை திர்த்தரப்பினரிடம் ஒப்படைக்கக் கூடாது ன்பதே விடுதலைச் சிறுத்தைகளின் கருத்தாகும். இதற்காக காவல்துறையின் ஆக்கிரமிப்பு மற்றும் அத்துமீறல் நடவடிக்கைகளை திர்த்த மது தோழர்கள் மீது தடியடி நடத்திக் காயப்படுத்தியுள்ளனர். அப்பகுதியில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து கண்ணில் பட்டவர்களையயல்லாம் தாக்கியுள்ளனர். காவல்துறையினரை ஆயுதங்களால் தாக்க வந்ததாகப் பொய்வழக்குப் புனைந்து 15 பேரை சிறைப்படுத்தியுள்ளனர். இதனைக் கண்டிக்கிற வகையில் தமிழகமெங்கும் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு ஆயிரக் கணக்கில் கைதாகியுள்ளனர். இப்பிரச்சனையை சட்டப்படி திர்கொள்ள உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமாதலால் விடுதலைச் சிறுத்தைகள் மேலும் இத்தகைய போராட்டங்கள் திலும் ஈடுபட வேண்டாம் ன்று கேட்டுக்கொள்கிறேன்.

அசோக் நகர் நிலம் தொடர்பாக மட்டுமின்றி, கடந்த சில மாதங்களில் மட்டும் விடுதலைச் சிறுத்தைகள் 30க்கும் மேற்பட்டவர்கள் குண்டர் தடுப்பு மற்றும் தேசியப் பாதுகாப்புச் சட்டங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் ஆரணி பாஸ்கர் ன்ற பகலவன், மதுரையில் தமிழழகர் உள்ளிட்ட ஒரு சிலர் தடுப்புக் காவலில் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். மரக்காணம் அருகே வண்டிப்பாளையம் இராசா ன்கிற தலித் இளைஞர் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையிலும் தலித் மக்கள் மீதே பொய்வழக்குப் போட்டு பலரைக் கைது செய்து சிறைப்படுத்தியுள்ளனர். தமிழகக் காவல்துறையின் இந்தப் போக்கு விடுதலைச் சிறுத்தைகளுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையிலான நல்லுறவை பாதிப்படையச் செய்யும் சதி முயற்சியோ ன்ற அய்யத்தைப் பரவலாக ஏற்படுத்தியுள்ளது.

இவண்

தொல் . திருமாவளவன்

தமிழக காவல் துறையின் அத்து மீறல் - விடுதலை சிறுத்தைகள் ஆயிரக்கணக்கில் கைது

சென்னை அசோக் நகர் நுறடிச்சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கி வந்தது, இந்த இடம் முறையாக சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு வாங்கப்பட்டது, ஆனால் இந்த இடம் எங்களுக்குதான் சொந்தம் என்று கூறிக்கொண்டு வேறெரரு தரப்பினர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள், அதன் விளைவாக அந்த இடமானது காவல் துறையின் கட்டுபாட்டிற்கு சென்றது, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்,திருமாவளவன் அவர்கள் நேரடியாகவே அதன் சாவியை காவல்துறையினரிடம் ஒப்படைத்தார், இந்நிலையில் 31,1,009 அன்று விடியற்காலை முன்று மணியளவில் எதிர்தரப்பினர் காவல்துறையின் ஒத்துழைப்போடு அந்த இடத்தின் கதவை அத்துமீறி திறந்து உள்ளிருந்த சிமெண்ட் கொட்டகையால் அமைக்கப்பட்டிருந்த கட்சியின் அலுவலகத்தை இடித்து தரை மட்டமாக்கியது,

இதை கேள்விப்பட்ட அப்பகுதியைச் சார்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உடனடியாக அந்த இடத்தில் குவிந்தனர், காவல் துறையினரிடம் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்டவுடன் அவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியுள்ளது, இந்த காவல்துறையின் அடக்குமுறை தமிழகம் முழுவதும் தீயாக பற்றி படர்ந்தது, காவல் துறையின் அடக்குமுறை அத்து மீறலை கண்டித்து பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டார்கள் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர், சென்னையில் சாலைமறியலில் ஈடுபட்ட விடுதலைச்சிறுத்தைகள கட்சியனரை சென்னை கோயம்பேடட்டில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கைது செய்து வைத்துள்ளனர், இதில் பதினைந்து பேர் 15 நாள் காவலில் வைக்கப்படடுள்ளனர், தமிழகம் முழுவதும் காவல்துறையை கண்டித்து சவரொட்டி ஒட்டிய விடுதலைச்சிறுத்தைகளும் கைது செய்ப்பட்டிருக்கிறரர்கள்.

Wednesday, October 28, 2009

முள்வலி - திருமாவளவனின் இரத்தப் பதிவு

2004-ம் வருடம் இதே இலங்கை மண்ணுக்கு நெஞ்சுகொள்ளாத பெருமையோடு சென்ற நினைவுகள் என்னை உடனே ஆக்கிரமித்தன. அங்கே ஒரு இணையற்ற தலைவனுடன் அமர்ந்து, இலங்கைத் தமிழினத்தின் எதிர்காலம் குறித்து நடத்திய கனமான விவாதங்கள் வந்து அலையாக மோதின.

அன்றைக்கு என் சொந்தங்களைக் காண உயிரைப் பணயம் வைத்து செய்த பயணம் அது. அப்போது என் சொந்த தாய்மண்ணில் கால்வைத்தது போன்ற உணர்வு என்னுள் எழுந்தது. அன்றைக்கு எனக்கு அந்த மண்ணில் அளிக்கப்பட்ட வரவேற்பு, என் சொந்தங்களின் பாசம் கலந்த உணர்வுபூர்வமானதாக இருந்தது.

அந்தப் பாசத்தோடு அங்கே சென்று திரும்பியதற்கும், இப்போது கூட்டணிக் குழுவாக அரசு மரியாதையுடன் செல்லும்போது நிலவுகிற சூழ்நிலைக்கும்தான் எத்தனை வேறுபாடுகள். இப்போது நான் அங்கு சென்றபோது அளிக்கப்பட்ட வரவேற்பில் முழுக்க முழுக்க வெறுமையும் போலித்தனமுமே குடிகொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது.

'என் தமிழ்ச் சொந்தங்களைப் பார்க்கப் போகிறேன்... எண்ணற்ற இன்னல்களில் சிக்கி, இறுதி நம்பிக்கைகளை இழந்து, எந்த திசையிலிருந்தாவது கடைசியாகவேனும் ஓர் உதவிக் கரம் நீளாதா என்று முள்வேலிகளுக்குப் பின்னால் வலியோடு காத்திருக்கும் அந்த மக்களின் கண்ணீரைத் துடைக்க முடிகிறதோ இல்லையோ... அவர்களுக்கு சில ஆறுதல் மொழிச் சொல்லவேனும் இப்போது வாய்ப்பு அமைந்ததே...' என்ற எண்ணம் மட்டுமே என்னுள் பொங்கியது.

குழுவாகத்தான் கிளம்பினோம். ஆனால், நான் அந்த மேடையின் நெரிசலிலும் தனித்து விடப்பட்டதுபோல் உணர்ந்தேன்.

தொடர்ந்து ஜீனியர் விகடனில் படியுங்கள்

-

Tuesday, October 27, 2009

எது பௌத்தம் - திருமாவளவன் விளக்க உரை

அக் 25, 2009 காஞ்சிபுரத்தில் நடந்த
பௌத்த விழாவில் திருமாவின் எழுச்சி உரை


-

-

-

-

-

-

திருமாவை விமர்சிக்கும் முண்டங்களுக்கு.....



தலைப்பு கடுமையா இருக்கா…. கண்டிப்பா பகுதி 2 &3 பாருங்க….
இராஜபக்சே சகோதரர்களை சர்வதேச போர்க்குற்றவாளிகளாக அறிவிக்க கோரியும், சிங்கள அரசுக்கு அனைத்துலக அளவில் பொருளாதார தடை விதிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி சென்னை மெமோரியல் அரங்கம் முன்பு 22/10/2009 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. அந்த ஆர்பாட்டத்தில் எழுச்சித் தமிழரின் உரை…














Sunday, October 25, 2009

தமிழ்நெட் இனையதளத்திற்கு திருமாவளவன் அளித்த செவ்வி

Tamil Nadu must recognize and support establishment of Tamil Eelam: Thirumavalavan


Stating that there was a total violation of human rights in the Sri Lankan Government's camps for Internally Displaced Persons, Viduthalai Chiruthaigal Katchi President Thol.Thirumavalavan, told TamilNet Friday in an exclusive interview of the "appalling conditions" prevalent in these "barbed-wire concentration camps" which he witnessed firsthand as one of the ten-member parliamentary delegation from Tamil Nadu. Pointing out that Tamil people could not become a "permanent slave society" and "live as second class citizens in Sri Lanka," Thirumavalavan sought to emphasize that Tamil Eelam was the only solution to a struggle that had claimed the lives of nearly fifteen hundred thousand Tamils civilians and more than thirty thousand Tamil Tiger fighters.


Mr. Thirumavalavan called upon the people of Tamil Nadu to be the first to recognize and support the establishment of an independent and sovereign state of Tamil Eelam. Moreover, the VCK leader came down heavily on Sri Lankan President Mahinda Rajapaksa and demanded the International Community not only clamp sanctions on Colombo, but also make Rajapaksa stand trial for war crimes.

Recalling the cramped, over-crowded atmosphere in the camps that were filled five-six times their capacity, he said that the people were stashed away like cows and dogs and pigs, and he recounted their misery in fulfilling their requirements of food, water, clothing and sanitation even as they lived in an atmosphere of fear.

Full text of the interview follows:

TamilNet: During your recent visit to Sri Lanka as a part of the parliamentary delegation from Tamil Nadu, did you get to see every camp? Were you allowed to choose the camps that you would visit, did you have sufficient freedom of movement, could you talk to the people at length? As it is being widely reported, did you see the people in the camps suffer? What is your conclusion based on what you saw?

Thol. Thirumaavalavan

Thirumavalavan: Regarding the conditions prevailing in these camps that I did visit, I feel that it is total violation of human rights. The people are stashed away like cows and dogs and pigs in barbed wire camps. There are about 45,000 to 55,000 people in the six main camps. In some cases, where the overcrowding is simply unbearable, they have created additional camps for about 5,000 to 15,000 people. Only the Zone 0 and Zone I camps, built by the Government of Sri Lanka as early as January 2009, have asbestos roofing. In the other camps people live in appalling conditions. They live within rexin enclosures that are 10 ft x 20 ft, and hemispherical in shape. These enclosures are partitioned, and about 5 to 10 people stay on each side in extremely cramped circumstances. All of them have to share a common bathroom, and of course these toilets are totally unusable.

One of the major problems that people face is to get water for drinking and bathing purposes. The water supply is extremely irregular and insufficient. I heard the people tell me that they had to keep awake for a whole week in order to get five liters of water, which is supposedly their daily ration. Even though water is being distributed through borewells and tanks, it is never enough. There are five or six times more people than the camps can actually contain. People also complained that since the water is not clean and hygienic they have developed jaundice and skin diseases. A woman came up to me and complained that she had no change of clothes at all. A young boy pointed to his T-shirt and told me, “They said that this came from your Tamil Nadu. I have been wearing only this for the past two months.” This is the abject reality.


I also observed that people were not allowed to move from one concentration camp to another. Every camp was within a barbed wire. People were not able to meet their relatives in another camp. I heard them complain that someone who went to collect firewood for cooking was shot dead by the soldiers. The army follows extreme rigor in allowing visitors who are merely allowed to stand on the other side of a barbed wire fence. People also were worried with the food situation. They had earlier been given cooked food, but now they were being given only rice and lentils. They were not provided with any vegetables, or oil, or milk. All of them pleaded that they be sent back. Their unanimous appeal was, “What wrong have we done, please send us back.”

People are also afraid of speaking freely since they were being photographed. The fear of monitoring has certainly silenced them. The government is quick to point out that they have more than a hundred doctors and teachers and so on. The Government Agent said that all the Internally Displaced Persons will be eventually returned. But, overall, I feel that the Government of Sri Lanka will not follow the six-month deadline which it assured to New Delhi for letting these people return. I feel that even ten percent of the people are yet to be sent back, and no effort seems to have been taken in that direction.

Initially, no restriction was imposed on the parliamentary team from visiting the camps. The Government Agent declared that we were free to go where we wanted to. I had already expressed my desire to necessarily visit the Ramanathan and Zone IV camps to T.R. Balu, the chief of this delegation. He conveyed this to the officials who were with us: Indian High Commissioner Alok Prasad, Vikram Mizri, Sri Lankan Deputy High Commissioner to India Vadivel Krishnamoorthy, First Secretary Shyam, and the local Government Agent Sarojini Charles. I visited four of the six camps in Menik Farm. In my observation, when I went to see the people, I was taken away by the Indian High Commission authorities, citing security reasons and lack of time. That was inconvenient.

Further, I reliably knew that more than 11,000 people who were suspected of being Tamil Tiger fighters (and their relatives) were housed in special camps in Oamanthai and Poonthoaddam, in the schools there. I wanted to meet them badly since they would be the ones subjected to utmost torture. However, they said that we could not visit them since it was not part of the schedule, and hence I couldn't go there. Likewise, I also wanted to visit the infamous Fourth Floor in Colombo which is the office of the crime branch. I expressed my wish to T.R. Balu. I was however told that no one is kept there on a permanent basis and that it was used only for questioning. Again, I was handed out the excuse that this was not a part of the programme schedule.

TamilNet: The delegation consisted only of members of parliament drawn from the ruling parties. Why was this not a broader parliamentary group?

Thirumavalavan: In the third week of September, a group of M.Ps from the ruling parties called on the Prime Minister and placed this demand to visit the camps in Sri Lanka, so these arrangements were carried out. This was not an authorized selection of a Parliamentary Delegation by the Government of India. I feel that the absence of the opposition parties from this delegation is certainly a drawback.

TamilNet: What is your opinion about a certain comment towards you from the Sri Lankan President Mahinda Rajapakse that has attracted a lot of attention in the Tamil media?

Thirumavalavan: After the meeting, during a group photo session, I was standing to the left of T.R.Balu, who was standing next to Rajapakse. I heard Rajapakse tell T.R.Balu, “He's very close to Pirapaharan you know. Luckily he was not there.” I felt that he was in fact saying, “It is not that I let you here without knowing that you are a Tamil Tiger supporter. I am letting you here with full awareness of that fact.” I realized that he had judged me appropriately, that he was not seeing me as a DMK-Congress combine representative, but as a 'representative' of the Tamil Tigers.

Importantly, our Tamil people are caught in the hands of our enemies and traitors. There are three hundred thousand people who are stuck in these camps. Moreover, all the people in the North-East are in the grip of the vicious army. Without meeting the enemies and traitors, we cannot meet the people, we cannot save them. During such a meeting, even if they speak in a manner that hurts us, we have to accept it for the sake of the people. I had to handle the situation for the sake of the people. I didn't react adversely to that remark since it would only affect my people.

TamilNet: You organized a conference last year to recognize Tamil Eelam. What was the aim of your conference and what is your present stand?


Thirumavalavan: We conducted the Thamizh Eezha Angeekaara Maanaadu in Chennai on 26 December 2008, and the single point resolution was to recognize the existence of an independent and sovereign Tamil Eelam. In spite of their valorous and dedicated liberation that lasted for more than a quarter century, not a single country had recognized the sole demand of the Tamil Tigers. In my opinion, the people of Tamil Nadu should be the first to recognize this and press it upon the people of the world. I believed that before the nations of the world recognized this independent state, before India itself recognized and lent its support to this, it was necessary that all the people in Tamil Nadu voice in favour of Tamil Eelam.


In my opinion, Tamil Eelam is the only solution. Thousands of civilians and more than thirty thousand fighters is the price we have paid so far in this struggle. The Tamil people cannot live as second class citizens in Sri Lanka. Hence, Tamil Eelam is the only solution. The Indian-origin upcountry Tamils, the North-East Tamils, Muslim Tamils and the Diaspora Tamils should establish a collective leadership. This is the immediate challenge. Otherwise, we will become a permanent slave society. To get the support of the International Community, they need to take up a democratic process. They should never get diluted from the goal of Tamil Eelam. They should move towards earning the approval of the International Community. The sympathy that has been generated towards the Tamils should go towards exposing the Government of Sri Lanka. The International Community should clamp sanctions on Sri Lanka and the present leadership that heads the GoSL should be tried for war crimes.

TamilNet: So long you showed yourself as a supporter of the LTTE, which led people to see you as a supporter of Tamil Eelam. In the future, would you continue to support Tamil Eelam which was the goal of the Tigers, or would you be supporting both?


Thirumavalavan: I feel that the armed struggle was just one tool of the Tigers and that has been destroyed not just by the GoSL, but by all the nations of the world collectively, including India and the International Community. There is a necessity to change the form of the struggle, but no need to change the aim of the struggle. The VCK will always support Tamil Eelam and the Tamil Tigers. The Tigers will rise again, but their forms of struggle could change. This is the belief of the VCK.


Thanks to : www.Tamilnet.com

"அழைப்பு இல்லாததால் பிரதமரை சந்திக்கவில்லை" திருமா விளக்கம்




இலங்கை சென்று வந்த இந்திய நாடாளுமன்ற குழுவில் இடம் பெற்ற விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் அங்கு நடக்கும் கொடுமைகளையும் , மனித உரிமை மீறல்களையும் வெளிச்சம் போட்டு காட்டினார்,அங்கு இருக்கும் எமது சொந்தகளின் கதறல்களை கண்ணீராக எடுத்துரைத்தார்.அவர்கள்படும் பெரும் துயரங்களை எடுத்துகூற யாரும் இல்லா நிலையில் அந்த கொடுமைகளை கண்டு வேதனையோடு தாயகம் திரும்பினார்.

அந்த கொடுமைகளை கண்டு மனம் வெதும்பி அங்கு நடக்கும் னித உரிமை மீறல்களுக்கு காரணமான ராஜபக்சே மற்றும் அவர்களது சகோதரர்களை போர் குற்றவாளியாக கருதி கைது செய்து விசாரிக்கவேண்டும் எனவும் இலங்கைக்கு உலக நாடுகள் பொருளாதார தடையை விதிக்கவேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகளை திரட்டி போராட்டத்தை நடத்தினார்..

இந்நிலையில் இலங்கை பயணம் செய்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய பிரதமரையும் , காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து இலங்கை பயணம் குறித்து விவாதித்தனர்.

இந்த பயணத்தின் போது தொல். திருமாவளவன் அவர்கள் கலந்து கொள்ளவில்லை ....

மேம்பால பணிகளை பார்வையிட அரியலூர் சென்ற அவரிடம் இதை பற்றி கேட்க பட்டது..

அழைப்பு இல்லாததால் பிரதமரை சந்திக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்று திருமாவளவன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார் ...

Saturday, October 24, 2009

வதை முகாம்களில் நடப்பது என்ன ? திருமாவளவன் காணொளி

தீவிரமான விடுதலை புலிகளின் ஆதரவாளன்



எதிரிகளின் கைகளிலும், துரோகிகளின் கைகளிலும் நம் தமிழ் சொந்தகள்



உங்களை நம்பி இருக்கிறோம் - யாழ் மாணவர்கள் நம்பிக்கை



என்னையும்
அறியாமல் கண்கலங்கி போனேன் - திருமா






ராஜபக்சேவிற்கு தெரிகிறது திருமாவளவன் பிரபாகரனின் நண்பன் என்று...




Friday, October 23, 2009

டெல்லி சென்ற நாடாளுமன்ற குழுவில் திருமா கலந்துகொள்ளவில்லை

இலங்கை பயணம் செய்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று இந்திய பிரதமரையும் , காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து இலங்கை பயணம் குறித்து விவாதித்தனர்.

இந்த பயணத்தின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இலங்கை சென்று அங்கு இருக்கும் உண்மை நிலையை எடுத்து கூறிய நாடாளுமன்ற உறுபினர்களில் ஒருவருமான தொல். திருமாவளவன் அவர்கள் கலந்து கொள்ளவில்லை ....



Thursday, October 22, 2009

போர்க்குற்றவாளியாக ராஜபக்செவை விசாரணை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!






போர்க்குற்றவாளியாக ராஜபக்செவை விசாரணை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!

சர்வதேச போர்க்குற்றவாளியாக ராஜபக்செவை அறிவிக்கவேண்டும் என்று வலியுறுத்தி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. சென்னை மெமோரியல்ஹால் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் தலைமைவகித்தார்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பேசிய தொல். திருமாவளவன்,

"நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் வலியுறுத்தும் கோரிக்கைகளே எங்கள் கட்சியின் நிலைப்பாடு. இதற்கும் சமீபத்திய இலங்கைக்கு பயணம் செய்த இந்திய நாடாளுமன்ற குழு சமர்பித்த அறிக்கைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

நாடாளுமன்ற அறிக்கையில் கூறுப்பட்டது அனைத்தும் உண்மையே. நாடாளுமன்ற குழுவின் பயணத்தைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த கோரிக்கைகளை விடுதலை சிறுததைகள் கட்சி முன்வைக்கிறது. அதே தருணத்தில் நான் இலங்கைக்குச் சென்று, எம்முடைய தொப்புள் கொடி உறவுகளைச் சந்தித்து, ஆறுதல் கூறியபோது, அங்குள்ளவர்கள் ஒருமித்த குரலில் தெரிவித்த கருத்து என்னவெனில், தம்மைத் தமது சொந்த இடத்திலேயே மீள குடியமர்த்தவேண்டும் என்பதே.

அதே தருணத்தில் இந்திய அரசுக்கு ஒரு கோரிக்கையை முன் வைக்கிறோம். எக்காரணத்தை முன்னிட்டும், ஈழத்தமிழர்களின் மறுவாழ்வுக்கென்று கூறி, இலங்கை அரசுக்கு நிதி உதவி அளிக்கக்கூடாது. காரணம் அவை யாவும் முறையாக ஈழத்தமிழர்களுக்குச் சென்றடைவதில்லை என்பதை கண்கூடாக நான் கண்டிருக்கிறேன். எனவே நேரடியாகத் தமிழ் மக்களுக்கு உதவுவதே நல்லது. தற்போது அறிவித்துள்ள 500 கோடி ரூபா நிதி உதவியை விடுதலை சிறுத்தை கட்சி வரவேற்கவில்லை" என்றார்

இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், பொதுச்செயலாளர் கா.கலைக் கோட்டுதயம், பொருளாளர் முகமது யூசுப், மாவட்டச் செயலாளர் கபிலன், தலைமை நிலையச் செயலாளர்கள் வன்னியரசு, பாவரசு, பாவலன், வீரமுத்து, இளஞ்செழியன், கிள்ளிவளவன், வழக்கறிஞர் பிரிவு  எழில்கரோலின், செய்தித் தொடர்பாளர் ஆர்வலன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் 5000 க்கும் மேற்பட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் கலந்துகொண்டனர்.

ஆர்பாட்ட படங்கள் 
.

Monday, October 19, 2009

இலங்கை முகாம்களில் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் -திருமா அறிக்கை


தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் கொண்ட குழு முன்னாள் அமைச்சர் டி.ஆர். பாலு தலைமையில் கடந்த 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரையில் ஈழத் தமிழர்களின் வாழ்நிலைகளை நேரில் சென்று கள ஆய்வு செய்தது. யாழ்ப்பாணம், வவுனியாவில் உள்ள வதை முகாம்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களை இக்குழு நேரில் சந்தித்தது. அத்துடன் தமிழினத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளின் தலைவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அமைச்சர்களையும் சந்தித்து அங்குள்ள நிலைமைகளைக் கேட்டறிந்தது. மலையகப் பகுதிகளுக்கும் சென்று இந்திய வம்சாவளித் தமிழர்களின் நிலைமைகளையும் இக்குழு ஆராய்ந்தது. நிறைவாக, சிங்கள ஆட்சியாளர்களையும், எதிர்க்கட்சித் தலைவர்களையும் தனித்தனியே சந்தித்து அவர்தம் கருத்துக்களையும் அறிந்தது. 14Š-10Š-2009 அன்று மாலை சென்னை திரும்பிய இக்குழு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களிடத்தில் தமது ஆய்வறிக்கையை அளித்தது. தமிழக எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் முன்கூட்டியே பரப்பிவிட்ட அவதூறுகளுக்கு மாறாக, அந்த அறிக்கை ஈழத் தமிழர்களின் அவலங்களை உள்ளது உள்ளபடியே உண்மைகளை வெளிப்படுத்தியது. இக்குழு மேற்கொண்ட பயணத்தின் விளைவாக சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் இறுக்கம் நிறைந்த மமதைப் போக்கில் சிறிய அசைவும் தளர்வும் ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் ஊடகங்களையோ அல்லது அரசியல் கட்சித் தலைவர்களையோ சர்வதேச அளவிலான மனிதஉரிமை ஆர்வலர்களையோ அப்பகுதிக்குள் அனுமதிக்காமல் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக இரும்புத் திரையிட்டு சிங்கள ஆட்சியாளர்களால் மூடி வைக்கப்பட்டிருந்த உண்மைகளை முதன்முறையாக இக்குழு வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் அங்கே தலைவிரித்தாடுகின்றன. வதைமுகாம்களில் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஈழத் தேசமே இராணுவத்தின் கெடுபிடிக்குள் சிக்கிச் சிதைந்து வருகிறது. மக்களிடையே மன அழுத்தங்களும் அச்சமும் பீதியும் மேலோங்கி நிற்கின்றன. அகில உலகத்தையே வியக்க வைத்த Š அதிர வைத்த வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த எம் தமிழ் மக்களிடையே அச்சத்தாலான அடிமைத்தனமும் பரவுவதை அவர்கள் கால் வயிற்றுக் கஞ்சிக்காகக் கையேந்தி நிற்கும் நிலைமைகளிலிருந்து அறிய முடிகிறது.

ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு தமது உறவினர்களைச் சந்திக்கக்கூடப் போக முடியாதபடி முள்வேலிக் கம்பித் தடுப்புகளும் இராணுவத்தின் கெடுபிடிகளும் வாய் திறக்க முடியாத வகையில் அவர்களை வாட்டி வதைக்கிறது. மெலிந்த நலிந்த உடல்களிலிருந்து ஏக்கப் பெருமூச்சுகளும், முனகல்களும் மட்டுமே வெளிப்படுகின்றன. நாவிலிருந்து வார்த்தைகள் வராமல் விழிகளிலிருந்து தாரைதாரையாய் நீர் கொட்டுவதைக் காண முடிகிறது. இரு கைகளையும் கூப்பிக் குனிந்து கும்பிடு போட்டு, ""எங்களை ஒட்டுமொத்தமாக நஞ்சு வைத்துக் கொன்று விடுங்கள் அய்யா!'' என்று கண்ணீரைக் கொட்டியபடி சிலர் கதறி அழுதனர். இரண்டு பேர் மட்டுமே படுத்து எழக்கூடிய கூடாரங்களில் எட்டுப் பேர், பத்துப் பேர்களை அடைத்து வைத்திருக்கும் மனிதநேயமற்ற கொடுமைகள் திணிக்கப்பட்டுள்ளன. தண்ணீருக்காக அவர்கள் படும்பாட்டைச் சொற்களால் விவரிக்க முடியாது. இந்த மனித அவலங்களை மனிதநேயமுள்ள எவராலும் சகித்துக்கொள்ள முடியாது. ஆனால், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இந்தக் கொடுமைகளை எப்படி வேடிக்கை பார்க்கின்றன என்பதுதான் புரிந்துகொள்ள முடியாத பெரும் கொடுமையாக உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இக்குழு ஈழத்தில் நடக்கும் சிங்கள இராணுவ ஆட்சியின் அரச வன்கொடுமைகளை உலகரங்கில் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. இந்நிலையில் இந்திய அரசு சிங்கள அரசோடு கொண்டிருந்த நட்புறவின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக மேலும் ரூ. 500 கோடி வழங்கத் தீர்மானித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வதைமுகாமில் சிக்கி அவதிப்படுவோரை உடனடியாக மீள்குடியேற்றம் செய்ய வேண்டுமென்பதும், அவர்தம் மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமானப் பணிகளுக்கு உதவ வேண்டுமென்பதும் இன்றியமையாத ஒன்று என்றாலும், தவிர்க்க முடியாத உடனடித் தேவைகள்தான் என்றாலும், சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் ஈவிரக்கமற்ற மனித உரிமை மீறல்களை உலக அரங்கில் அம்பலப்படுத்த வேண்டியதும் அத்தகைய இனவெறியாளர்களை தண்டிக்க வேண்டியது மிக மிக இன்றியமையாத ஒன்றாகும்.

அந்த வகையில் நெஞ்சிலே ஈரமில்லாத ஈவிரக்கமேயில்லாத சிங்கள இனவெறி ஆட்சியாளர்களை குறிப்பாக, இராஜபக்சே சகோதரர்களை சர்வதேசப் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டுமெனவும் சிங்கள அரசுக்கு அனைத்துலக அளவில் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமெனவும் இந்தியா உள்ளிட்ட அனைத்துலக நாடுகளை விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் 22Š-10Š-2009 அன்று சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஒட்டுமொத்தத் தமிழர்களும் மனிதநேய ஆர்வலர்களும் மேற்சொன்ன இரு கோரிக்கைகளை மையப்படுத்தி சர்வதேசச் சமூகத்தை தொடர்ந்து வற்புறுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.


இவண்
தொல் .திருமாவளவன்

Sunday, October 18, 2009

தேர்தலுக்குபின் அதிமுக, பாமக, மதிமுக மவுனம் ஏன் திருமாவளவன் கேள்வி?

மக்களவை தேர்தலுக்கு பின்னர் அதிமுக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் இலங்கை தமிழர்கள் குறித்து பேசாதது ஏன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு.தொல் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பல்வேறு கட்சிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 500 பேர் வடபழனி பெ.ஜெயபால் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணையும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. சென்னை அசோக் நகரில் உள்ள அண்ணா சமூகநலக்கூடத்தில் நடைபெற்ற விழாவில் கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் முன்னிலையில் அவர்கள் தங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைத்துக் கொண்டனர். கட்சியில் இணைந்தவர்களை வாழ்த்தி வரவேற்ற திரு.தொல்.திருமாவளவன் பின்னர் விழாவில் பேசும் போது, மக்களவை தேர்தலுக்கு பிறகு அதிமுக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் இலங்கை தமிழர்கள் குறித்து பேசியதுண்டா என்று கேள்வி எழுப்பினார். தேர்தலுக்கு முன்பு ஒரு முறை போராட்டம் நடத்திய செல்வி ஜெயலலிதா, தேர்தலுக்கு பிறகு ஒரு முறையாவது பேசியதுண்டா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்து விட்டது என்று மக்களவையில் தாம் பேசியதாக குறிப்பிட்ட அவர், இலங்கை தமிழர்கள் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று தாம் கேட்டுக்கொண்டதையும் சுட்டிக்காட்டினார். இலங்கை பயணத்தின்போது முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் தங்களை சொந்த இடங்களில் குடியமர்த்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்தார். இலங்கை பயணத்தின்போது டக்ளஸ் தேவானந்தா தமது அருகில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டதை தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் கொச்சைப்படுத்தியதாக அவர் கூறினார். திருமாவளவன் யார் என்பது எதிரியான ராஜபக்சேவுக்கு தெரிகிறது என்றும் ஆனால் தமிழக அரசியல் கட்சிகளுக்கு தெரியவில்லையே என்றும் அவர் தெரிவித்தார். ஆளும் கூட்டணியில் இருந்து கொண்டே இலங்கை தமிழர்களுக்கு தாம் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும், ஆனால் எதிர்க்கட்சியினர் வாய் மூடி மவுனியாக இருப்பதாகவும் அவர் கூறினார். அதிமுகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் இலங்கை தமிழர்களுக்காக மக்களவையில் ஒரு முறையாவது பேசியதுண்டா என்று அவர் கேள்வி எழுப்பினார். தாம் இலங்கை சென்றிருந்த போது அவை நாகரிகம் கருதியே தம்முடைய முழு உணர்ச்சிகளையும் வெளிகாட்ட முடியவில்லை என்று அவர் கூறினார். இலங்கையில் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாமை தாம் படம்பிடித்துள்ளதாகவும் திரு. திருமாவளவன் தெரிவித்தார்.

.

Saturday, October 17, 2009

நக்கல் சிரிப்பு ராஜபக்‌ஷே...நொறுங்கிப்போன திருமாவளவன்!


லங்கைத் தமிழர்களின் நிலைமையை அறியும் விதமாக ஐந்து நாள் பயணமாக இலங்கைக்குப் போன தமிழக எம்.பி-க்கள் குழு கடந்த 14-ம் தேதி ரிட்டர்ன் ஆனது. முதல்வரே சென்று இந்தக் குழுவை விமான நிலையத்தில் எதிர்கொண்டார். ''எம்.பி-க்கள் குழு இலங்கையின் நிஜமான நிலையைக் கண்டிப்பாக வெளிப்படுத்தாது. பொருத்தமற்ற சாக்குபோக்குகளைச் சொல்லி சமாளிக்கும் விதமாகத்தான் அந்தக் குழு அறிக்கை சமர்ப்பிக்கும்!'' என ஜெயலலிதா, வைகோ உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் சொல்லிக் கொண்டிருக்க... இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை சந்தித்தோம். பயணக் களைப்பு அகலாத நிலையில், நெஞ்சறையும் நிஜங்களை கொஞ்சமும் மறைக்காமல் குமுறலும் கொந்தளிப்புமாக நம்மிடம் கொட்டத் தொடங்கினார் திருமாவளவன்.

''தமிழர்களுக்கு தனி நாடு உருவாக்கப் போராடிய கூட்டம் வேரோடு சாய்க்கப்பட்ட வேதனை எனக்குள் இன்றளவும் விம்மி வெடித்துக் கொண்டிருக்கிறது. அந்த பாரத்து டன், மிச்சமிருக்கும் உறவுகளையாவது பார்த்துவிடுகிற துடிப்பிலேயே விமானத்தில் அமர்ந்தேன். சக எம்.பி-க்கள்
முகங்களிலும் இறுக்கம்... சோகம். இலங்கையில் போய் கால் வைத்தபோதே, ஒரு விதமான நடுக்கம் என்னை ஆட்கொண்டது. முதலில் மரியாதை நிமித்தமான பணிகளை முடித்துவிட்டு, நம் சொந்தங்களைப் பார்க்கக் கிளம்பினோம்.
எங்களை வரவேற்கும் விதமாக சிங்களப் பெண்களும் ஆண்களும் நடமாடினார்கள். அவர்களின் வெற்றியைக் கொண்டாடுவது போல் ருத்ரதாண்டவமாக இருந்த அந்த நடனத்தைக் கண்டு எனக்கு பற்றிக் கொண்டு வந்தது. மாகாணங்கள், முகாம்கள் என சுற்றி வந்த ஐந்து நாள் பயணத்தில் மொத்தமாக நான் உடைந்துபோனதே நிஜம். தமிழகத்தில் எழுந்த பேரெழுச்சிகளை எல்லாம் தாண்டியும், இப்படியான கதிக்கு தமிழினம் ஆளாகிவிட்டதே என்கிற வேதனை சாகும் காலம் வரை என்னை சங்கடப்படுத்திக் கொண்டேதான் இருக்கும்...'' என்று குரல் உடைந்து கூறிய திருமாவிடம்...
''முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் நிலை எப்படி இருக்கிறது?'' என்று கேட்டோம்.



''மிகுந்த கவலைக்கிடமாகவே இருக்கிறது. 2,500 ஏக்கர் காட்டைச் சீரமைத்து நிலமாக்கி, அதில்தான் எட்டு முகாம்களை அமைத் திருக்கிறது சிங்கள அரசு. அதில் ஆறு முகாம்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொட்டடியில் பரிதாபமாக முடங்கிக் கிடந்தனர். முகாம்களுக்கு 'கதிர்காமர், அனந்த குமாரசாமி, அருணாசலம்' என தமிழர்களின் பெயரையே வைத்திருப்பதை சிங்கள அதிகாரிகள் எங்களிடம் பெருமிதமாகச் சுட்டிக் காட்டினார்கள். 'நாங்கள் எந்தளவுக்கு தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம்' என்பதற்காகவே சொன்னது அது!
ஆனால், தலைவாழை இலைச் சோற்றில் அரளியை அரைத்து ரசம் ஊற்றிய கணக்காக, தமிழர்களின் பெயர் களை முகாம்களுக்கு பெருமையாகச் சூட்டிவிட்டு, உள்ளே உருத்தெரியாத அளவுக்கு தமிழ் மக்களைச் சிதைக்கிற வேலையையே சிங்கள அரசு செய்து கொண்டிருக்கிறது. முகாம்களில் தங்கி இருக்கும் நம் உறவுகளிடம் பேசியபோது, அனைவருமே கண்ணீருடன், 'பச்சத் தண்ணிகூட கிடைக்கலே... எங்க தொண்டையை நனைக்கவாவது வழி பண்ணிட்டு போங்க' என்று கதறுகின்றனர். ஓர் ஆளுக்கு ஐந்து லிட்டர் வீதம் தண்ணீர் கொடுப்பதாக சிங்கள அரசு எங்களிடம் சுட்டிக் காட்டியது. ஆனால், ஒரு வாரத்துக்கும் மேலாக அந்த பாவப்பட்ட மக்களுக்கு தண்ணீரையே கண்ணில் காட்டவில்லையாம். சில சிறுவர்களிடம் பேசியபோது, 'குளோரின் கலந்த தண்ணீரைக் குடிக்கப் பிடிக்கலை' என்றார்கள். படுக்கைக்கும் கழிப்பிடத்துக்கும் வழியில்லாத நிலையைச் சொல்லியழுத தாய்மார்கள், 'இப்படியெல்லாம் நாங்க அவமான வாழ்க்கை முன்பு வாழ்ந்ததே கிடையாது' என வீறிட்டனர். மந்தைகளாக மனிதர்களை அடைத்து வைத்திருக்கும் கொடுமையை உலகத்தின் பெருந் துயரக்காரனாகப் பார்த்துவிட்டு வந்தேன்!''
''முகாமில் உள்ள இளைஞர்கள் சித்ரவதைக்கு ஆளாக்கப்படுவதாகவும், இளம் பெண்கள் பாலியல் கொடூரங்களுக்கு உள்ளாவதாகவும் சொல்லப் படுகிறதே... அது குறித்து விசாரித்தீர்களா?''
''முகாமில் உள்ளவர்கள் எங்களிடம் மனசுவிட்டுப் பேச அச்சப்பட்டு ஒதுங்கியே நின்றார்கள். முகாம்களில் நிலவும் நிஜமான நிலைகுறித்து விசாரிப்பதற்காக தனிப்பட்ட சிலரிடம் நான் பேச முற்பட்டபோது, இந்திய தூதரக அதிகாரிகளே அதனைத் தடுக்க மெனக் கெட்டார்கள். அதையும் தாண்டி சிலரிடம் பேசியபோது, 'முகாம்களில் இருந்தவர்களில் சந்தேகத்தின் பேரில் 11,000 பேர்களை பிரித்து ரகசிய முகாம்களுக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள். வவுனியாவில் உள்ள வாணி மகா வித்யாலயா, முஸ்லிம் மகா வித்யாலயா ஆகிய பாடசாலைகளிலும், கண்டி, கொழும்பு, ஓமந்தை மன்னார், திரிகோணமலை பகுதிகளில் உள்ள ரகசிய முகாம்களிலும் வைத்து அவர்களை விசாரணை என்கிற பெயரில் ராணுவம் படாத பாடுபடுத்திக் கொண்டிருக்கிறதாம். 11,000 பேரில் எத்தனை பேர் மிச்சமிருக்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது' எனச் சொன்னார்கள்.


எங்களோடு சகஜமாக பேச முடியாத அந்தச் சூழலிலும், 'தயவுசெய்து எங்களை சொந்த மண்ணுக்கு அனுப்புங் கள். கையேந்திப் பிழைக்கும் வாழ்க்கை எங்களை கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று கொண்டிருக்கிறது' என பலரும் ஓலமிட்டு அழுதார்கள். ஒரு பெரியவர் என்னிடம் ஓடிவந்து, 'ஒரே ஒரு வேட்டியை ஒரு மாசத்துக்கும் மேலா உடுத்திக்கிட்டு இருக்கேன்' என்றவர் கைவிரித்துக் கதறினார். பல தாய்மார்கள், 'எங்களோட பொடியன்களைக் காணோம். அவங்க எங்கே இருக்காங்களோ, எப்படி இருக்காங்களோ...' என்று மாலை மாலையாகக் கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தார்கள்.
முகாம்களுக்கு இடையே முள்வேலிக் கம்பி போடப் பட்டு இருப்பதால், தங்களின் சக ரத்த உறவுகளைக்கூட சந்திக்க முடியாமல், கம்பி வேலிக்கு அப்பாலிருந்து தவிக் கிற அவர்களின் கொடுமையைக் காட்டிலும் வேறேதும் பெரிய சித்ரவதை இருக்கிறதா? குடிக்கவும் குளிக்கவும் வழியில்லாமல் தவிக்கும் நம் சொந்தங்கள், இன்னும் ஒரு மாதம் அந்த முகாமுக்குள்ளேயே நீடிக்கிற நிலை வந்தால், இன்னொரு சோமாலியா சோகம் அங்கே உருவாகிவிடும்! இப்போதே முகாம்களுக்குள் சரியான மருத்துவ வசதிகள் இல்லை. அதனால் மஞ்சள் காமாலை, தோல் நோய்கள் போன்றவை வருத்திக் கொண்டிருக்கின்றன. சீக்கிரமே வரப் போகும் மழைக்காலமும் தொற்று வியாதிகளைப் பெரிதாகப் பரப்பிவிடக் கூடிய அபாயமிருக்கிறது. இத்தகைய இக்கட்டான சூழலிலும் முகாமுக்குள்ளேயே பிள்ளையார் கோயில் ஒன்றைக் கட்டி, 'நீயாச்சும் எங்களைக் காப்பாத்து சாமி!' என நம் உறவுகள் கதறுவதையும் பார்த்தேன்.''
''எம்.பி-க்கள் குழுவுக்கு பல இடங்களிலும் எதிர்ப்பு கிளம்பியதாகச் சொல்லப்படுகிறதே?''
''அதனை எதிர்ப்பு என்பதைவிட, அடக்க முடியாத ஆதங்கம் என்று சொல்லலாம். யாழ் பல்கலைக்கழகத்துக்கு நாங்கள் சென்றிருந்தபோது, தமிழ் மக்கள் பெருந்திரளாகக் கூடி வரவேற்றார்கள். நான் அங்கே பேச முடியாத சூழல் உண்டானது. பல இளைஞர்கள் என்னிடம் ஓடிவந்து, 'நீங்கள் கட்டாயம் ஏதாவது பேசுவீர்கள் என எதிர்பார்த்தோம்' எனச் சொன்னார்கள். சிலர், 'நாங்க என்ன பாவம் பண்ணினோம்? இந்தியாவும் கைகோத்து எங்களை அழிச்சிடுச்சே... கலைஞரய்யா எங்களை காப்பாத்துவார்னு நினைச்சோமே...' என அபயக் குரல் எழுப்பினார்கள். 'எங்களின் நிலைமையை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் இருக்கி றோம். நீங்கள்தான் கலைஞரய்யாவிடம் நிஜமான நிலைமையைச் சொல்லி அவரை உதவச் சொல்ல வேண்டும்' என்றார்கள்.
சில இளைஞர்கள், 'இங்கே நீங்கள் போட்டியிட்டால் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் யாழ்ப்பாண எம்.பி-யாக ஜெயிப்பீர்கள். நாங்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை அப்படிப்பட்டது' என்றார்கள். என்னை நானே நொந்துகொண்ட நேரமது. 'எப்படியும் தொப்புள்கொடி உறவு நம்மைக் காப்பாற்றும்' என நம்பிக்கை பூண்டிருந்தவர்களுக்கு நம்மால் ஏதும் செய்ய முடியாமல் போய்விட்டதே என்கிற வருத்தத்தில் கண் கலங்கி விட்டேன். அந்த வருத்தத்திலேயே சக எம்.பி-க்களுடன்கூட என்னால் இயல்பாகப் பேச முடியவில்லை.''
''சிங்கள அரசுடன் நெருக்கம் பாராட்டும் டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான் போன்றோர்தான் உங்களை வழிநடத்திச் சென்றார்களாமே...?''
''சில மாகாணப் பகுதிகளுக்கு மட்டும் அவர்களோடு செல்ல வேண்டியிருந்தது. ஒரு மேடையில் என்னருகே அமர்ந்திருந்த கனிமொழி எழுந்ததும் அங்கே ஓடிவந்த டக்ளஸ் தேவானந்தா, 'என்னைப் பற்றி நீங்கள் தவறான அபிப்பிராயம் கொண்டிருக்கிறீர்கள். என்னதான் போராடினாலும், இறுதியில் இப்படியான துயரம்தான் நடக்கும் என்பது எங்களுக்குத் தெரிந்ததால்தான், நாங்கள் அரசோடு அனுசரித்து நடக்க ஆரம்பித்தோம். ஆனாலும், அரசுக்கு ஆதரவாக நாங்கள் யாரையும் காட்டிக் கொடுக்கவில்லை' என்றார். 'நடந்தது நடந்துவிட்டது... மிச்சமிருக்கும் தமிழ்த் தலைவர்களாவது ஒற்றுமையாகக் கைகோத்து, தமிழ் மக்களின் வாழ்வுக்கு வழி செய்யலாமே' என அவரிடம் கேட்டேன். அவர் மீதான கோபங்களுக்கு எல்லாம் விடை கேட்கிற நிலையில் அப்போது அங்கே நான் இல்லை.''
''நான்காம் நாள் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்தீர்களே... அப்போது எப்படி இருந்தது உங்களின் மனநிலை?''
''அதிபர் ராஜபக்ஷேவை சந்திக்கும் முன்னரே, முகாம்களின் நிலை குறித்துப் பேசுவதற்காக பாதுகாப்புத் துறை ஆலோசகரான கோத்தபய ராஜ பக்ஷேவைச் சந்தித்தோம். 'எனக்கு பாதுகாப்பு பணி மட்டும்தான் தெரியும். முகாம் நிலை குறித்து அறிய நீங்கள் அதிபரின் அரசியல் ஆலோசகரான பசில் ராஜபக்ஷேயை பாருங்கள்' எனச் சொன்னார். பசில் ராஜபக்ஷேயிடம் பேசியபோது, 'முகாம்களில் தற்போது 3,000-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் இருக்கிறார்கள். அவர்களில் பலரையும் சொந்த இடங்களுக்கு அனுப்ப முடிவெடுத் தோம். ஆனால், 268 கர்ப்பிணிகளைத்தான் அனுப்ப முடிந்தது' என்றார். இதற்கெல்லாம் பிறகே அதிபருடனான சந்திப்புக்கு ஏற்பாடானது.

அனைத்து எம்.பி-க்களையும் மரியாதையோடு வரவேற்ற ராஜபக்ஷே, என்னைச் சுட்டிக்காட்டி, 'நீங்கள் எனக்கு எதிராகத் தமிழகத்தில் கடுமையாக முழங்கி வருகிறீர்கள்' எனச் சிரித்தார். உலகத்தையே ஜெயித்துவிட்டது போல இருந்தது அவருடைய அந்தச் சிரிப்பு. அமைதிக் காலத்தில் நான் ஒரு முறை ராஜபக்ஷேயை சந்தித்துப் பேசி இருக்கிறேன். அதை நினைவுகூர்ந்து பேசிய அதிபர், 'நீங்கள் என்னை சந்தித்தபோது, பிரபாகரனை நீங்கள் அழைத்து வந்தால், மீடியாக்களுக்குத் தெரியாமல் நமக்குள்ளேயே சமரசம் பேசி தக்க தீர்வுக்கு வழி வகுக்கலாம்' என நான் சொன்னேனே, நினைவிருக்கிறதா? இப்போது நீங்கள் வந்திருக்கிறீர்கள்... பிரபாகரனை காணவில்லையே..? அவரை உங்களுடன் அழைத்து வரவில்லையா?' எனக் கேட்டு மீண்டும் சிரித்தார்.
சபைக்கு நடுவே சாட்டையடிபட்ட வேதனையில் துடித்துப் போனேன். சூழல் என்னை அமைதி காக்கச் செய்தது. கனிமொழி, டி.ஆர்.பாலுவிடம் என்னை சுட்டிக்காட்டி பேசிய ராஜபக்ஷே, 'இவர் பிரபாகரனின் மிக நெருங்கிய கூட்டாளி. இக்கட்டான நேரங்களில் பிரபாகரனின் பக்கத்தில் நின்றவர். நல்லவேளை... கடைசி நேர இக்கட்டில் இவர் பிரபாகரனுடன் இல்லை. அப்படி இருந்திருந்தால் இந்நேரம்...' என்று வார்த்தையை முடிக்காமல் நிறுத்தினார். ஆணவமும் அகம்பாவமும் மதியை மறைக்க, சிறு எறும்புக்கும் தீங்கு விளைவிக்காத பாவனையில் அவர் பேசிக் கொண்டிருந்தார். அவருடைய நக்கலான பேச்சு என்னை மட்டுமல்லாது, இதர எம்.பி-க்களையும் முகம் சுளிக்கவே வைத்தது. அப்போதும், 'நீங்கள் ஒரு பௌத்தர். உங்களிடமிருந்து கருணையையும் இரக்கத்தையும்தான் எம்மக்கள் எதிர்பார்க்கிறார்கள்' என ராஜபக்ஷேயிடம் சொன்னேன். 'ரெண்டு வருடங்களுக்கு முன்பு அனைத்துக் கட்சி நிர்ணயக் குழு அமைச்சர் திசவிதாரன தலைமையில் தயாரித்த அறிக்கையின்படி, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கலாமே' என நான் சொன்னபோது, முகத்தில் அடித்தாற் போல, 'அது என்னோட பார்ட்... நான் பார்த்துக்கிறேன்' எனச் சொல்லிச் சிரித் தார் ராஜபக்ஷே. அதற்கு மேலும் என்னால் அங்கே நிற்க முடியவில்லை.''
''பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என அடித்துச் சொல்பவர் நீங்கள். இலங்கைக்குப் போய் வந்த பிறகும் அந்தக் கருத்தில் உறுதியாக இருக்கிறீர்களா?''
''கொழும்பில் உள்ள சில முக்கியஸ்தர்களிடத்தில் தலைவர் பிரபாகரனின் நிலை பற்றி விசாரித்தேன். அவர்கள் ஏதும் பேசுகிற நிலையில் இல்லை. ஒரு விதமான பயமும் பாரமும் அவர்களைப் படபடப்போடு தவிக்க வைத்திருந்தது. அதனால் தலைவர் பிரபாகரன் பற்றிய விவரங்களை என்னால் சரியாக அறிய முடிய வில்லை. ஆனால், பசில் ராஜபக்ஷேயுடன் பேசிக் கொண்டிருந்தபோது, 'பொட்டு அம்மானின் உடல் மட்டும் கிடைக்கவில்லை' என அவர் சொன்னார்.''
''பிரபாகரன் பெற்றோரின் நிலை குறித்து ஏதாவது தெரிந்ததா?''
''அதிபரின் அரசியல் ஆலோசகரான பசில் ராஜபக் ஷேயிடம் பிரபாகரன் பெற்றோரின் நிலை குறித்து நான் விசாரித்தேன். 'அவர்கள் பத்திரமாக இருக்கிறார்கள். உணவு, மருந்து என அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன' எனச் சொன்னார் பசில். 'பிரபாகரனின் பெற்றோரையும், பிரபாகரனின் மாமியாரையும் தயவு செய்து விடுதலை செய்யுங்கள்' என நான் வேண்டியபோது, 'அவர் களின் உறவு வழியிலானவர்கள் விருப்பப்பட்டால், தாராளமாக அழைத்துச் செல்லலாம். ஆனால், அவர் களை இந்தியாவுக்கு அனுப்ப மட்டுமே நாங்கள் அனுமதிப்போம்' எனச் சொன்னார் பசில். எப்படியாவது அவர்களை விரைவிலேயே அங்கிருந்து மீட்க அனைத்து முயற்சிகளையும் நான் தொடர்ந்து எடுப்பேன்.''
''எம்.பி-க்கள் குழுவின் அறிக்கை இலங்கைத் தமிழர்களின் நிஜமான நிலையை இருட்டடிப்பு செய் வதாக இருக்கும் என எதிர்க்கட்சியினர் அடித்துச் சொல்கிறார்களே?''
''அப்படி இருக்காது என நம்புவோம். ஜூ.வி.யிடத்தில் நான் சொல்லி இருக்கும் இலங்கைத் தமிழர்களின் அத்தனை விதமான துன்பங்களையும் எங்கள் கட்சி மக்கள் மத்தியில் எதற்கும் தயங்காமல் எடுத்துவைக்கும்!''

-

Friday, October 16, 2009

''எனக்கு எதிர்ப்பு பிடிக்கும்!'' - திருமா

ளும் அணியில் அங்கம் வகித்தாலும், எதிர்க்கட்சிகளுடன் இணைந்திருந்தாலும் எதிர்நீச்சல்காரர் திருமாவளவன். அடங்க மறுப்பார். அத்துமீறுவார். எப்போதும் சீறிக்கொண்டே இருக்கும் சிறுத்தை இவர்!

-

''அடங்க மறு... அத்து மீறு...
திமிறி எழு... திருப்பி அடி!

நான் எழுப்பிய இந்த நான்கு முழக்கங்கள்தான் போராட்டக்காரனாக அடையாளப்படுத்தி உங்கள் முன்னால் உட்காரவைத்திருக்கிறது. அடக்கப்பட்ட சமூக மக்கள், தங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளைச் சலுகைகளாக யாசித்துப் பெற்ற காலம் ஒன்று இருந்தது. அது ஏதோ பிச்சைப் பொருளாக வழங்கப்பட்டது. ஆனால், தங்கள் உரிமைகளை அடித்துப் பறித்தால் மட்டும்தான் முழுமையானதாகப் பெற முடியும் என்பதுதான் இன்றைய யதார்த்தம். எனவேதான், எதிர்ப்பு என்னுடைய ரத்தம் கலந்த குணமானது.

ஆடுகள் எல்லாவற்றுக்கும் தலையாட்டும். சிங்கம் சீறும். இதை உன்னிப்பாகக் கவனித்த அம்பேத்கர் சொன்னார், 'ஆடுகளைத்தான் பலியிடுகிறார்கள்... சிங்கங்களை அல்ல'. தலையாட்டிப் பொம்மைகளுக்கு இந்தச் சமூகத்தில் எந்த மரியாதையும் கிடையாது என்பதை நன்கு உணர்ந்தவன் நான். 'நன்றி கொன்றவர்களால் நீ ஒதுக்கப்பட்டாலும், உனக்கு உரிய சிறப்பு மறுக்கப்பட்டாலும் திருப்பித் தாக்கிடும் உன் போர்க் குணத்தை நழுவவிடாதே' என்று எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் அம்பேத்கர் சொன்னதுதான் என் ஆதியும் அந்தமும்.

18 ஆண்டுகளுக்கு முன்னால் சிறு இயக்கமாகத் தொடங்கப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள், இன்று தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்திருக்கிறது. இதற்கு வேரும் விழுதுமாக அமைந்தவை அதன் எதிர்ப்பு உணர்வுதான். மகாராஷ்டிரா மரத்வாடா பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் பெயர் வைக்கக் கூடாது என்று பால்தாக்கரே மிரட்டிக்கொண்டு இருந்தார். அதைக் கண்டித்து மதுரை ரயில் நிலையத்தில் மறியல் தொடங்கினேன். திடீரென்று அவசியமே இல்லாமல் போலீஸ் எங்களது தோழர்கள் மீது தடியடி நடத்தியது. ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக 50 பேர் ரத்தம் ஒழுக உதைக்கப்பட்டார்கள். இதைப் பார்த்த எங்களது தொண்டர்கள் உணர்ச்சியால் போலீஸின் சட்டையைப் பிடித்து அடிக்க ஆரம்பித்தார்கள். அநியாய அக்கிரமத்தை கலர் சட்டை செய்தால் என்ன... காக்கிச் சட்டை செய்தால் என்ன? அடித்தால் திருப்பி அடிக்கலாம் என்பதை மதுரை வீதியில் நிரூபித்தோம். அதுவரை போலீஸைப் பார்த்தால் பயந்து நடுங்கிய சமூகத்தில், சாமி என்று அழைத்த மக்கள் முன்னால் பதிலடிதான் நம்முடைய மொழி என்று நிரூபித்தோம்.

விடுதலைச் சிறுத்தைகளின் எதிர்ப்பலை ஆதிக்கச் சாதிகளுக்கு எதிராகவும் அரச வன்முறைக்கு எதிராகவும் கிளர்ந்தெழ ஆரம்பித்த பிறகுதான் அடக்குமுறைகள் கொஞ்சம் அடங்க ஆரம்பித்தன. நீ உன்னுடைய கோபத்தை ஓர் இடத்தில் காண்பித்தால், அது அங்கு மட்டுமல்ல, அதைப் போலவே அநியாயம் நடக்கும் மற்ற இடங்களையும் சேர்த்தே மாற்றுகிறது. மதுரை கரும்பாளையில் தலித் சமூகத்துக்குச் சேர வேண்டிய நிலத்தை 25 ஆண்டுகளாக தனியார் ஒருவர் தன்வசப்படுத்தி வைத்திருந்தார். அதைப் போராடிப் பறித்த பிறகு, இது போல் வைத்திருந்த ஏழெட்டு மனிதர்கள் தங்களது ஆக்கிரமிப்புகளை அமைதியாக விட்டு விலகினார்கள். பொது இடத்தில் நடக்கக் கூடாது, பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாது, கோயிலுக்குள் நுழையக் கூடாது, ஒரே குவளையில் டீ குடிக்கக் கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகளைக் கெஞ்சிக் கெஞ்சி ஒழிக்க முடியாது. பலவந்த எதிர்ப்பால் மட்டும்தான் உடைக்க முடியும்.

இது சில நேரங்களில் வன்முறையாக மாறும். அதைத் தவிர்க்க முடியாது. எதிர்ப்பு என்பதே வன்முறை கலந்த வார்த்தைதான். ஆனால், வன்முறை என்ற வார்த்தையை வித்தியாசப்படுத்திப் பார்க்க வேண்டும். ரவுடித்தனத்தையும் நான் சொல்வதையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது. எந்தப் பொது நோக்கமும் இல்லாமல் சுயநலத்துடன், உள்நோக்கத்துடன் சில போக் கிரிகள் செய்யும் வன்முறை வேறு. பொது நோக்கத்துடன் ஒரு சமூகம் தன் னுடைய அடக்குமுறையை எதிர்த்துப் போராடும் போது வெடிக்கும் வன்முறை வேறு. இந்தியாவின் விடுதலை வேள்வியின்போது கிளர்ந்தெழுந்த மக்கள் நடத்திய தாக்குதல்களை யாரும் வன்முறை என்று கொச்சைப்படுத்த முடியுமா? அது நாட்டு விடுதலை என்றால், நாங்கள் நடத்துபவை சமூக விடுதலை.

எதிர்ப்பில் பிறந்து, எதிர்ப்பில் வளர்ந்து, எதிர்ப்பில் வாழ்ந்த மூன்று தலைவர்களை இந்த இடத்தில் நினைத்துப் பார்க்கிறேன். முதலாவது மனிதர், அம்பேத்கர். சாதியின் காரணமாக அடக்கப்பட்ட தன்னுடைய தனி வாழ்க்கையை எதிர்த்துக் கிளம்பி, அதுவே தலித் மக்களின் தலைவிதியாக இருப்பதை உணர்ந்து எதிர்க் குரலை எழுப்பியவர். ஆதிக்கச் சக்திகளின் அத்தனை முகங்களையும் ஒருசேர எதிர்த்தவர் அவர். ஏக இந்தியாவும் மகாத்மா என்று கொண்டாடிய காந்தியால்கூட தனது சாதி இழிவுகளைத் துடைக்க முடியாது என்று தெரிந்ததும் அவரையே எதிர்த்தார். ''விரைவில் மறைந்துபோகும் மாய உருவங்களைப் போல மகாத்மாக்கள் என்பவர்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பிக்கொண்டு வருகிறார்கள். ஆனால், அவர்களால் எந்த உயர்வும் ஏற்படவில்லை என்பதை வரலாறு கூறுகிறது'' என்று காந்திக்கு முன்னால் உட்கார்ந்துகொண்டு முகத்துக்கு நேராகவே தன் எதிர்ப்பைப் பதிவு செய்தவர் அம்பேத்கர். எல்லாப் பீடங்களையும் தகர்த்தது அம்பேத்கரின் எதிர்ப்பு.

அடுத்து நான் சொல்வது, பெரியாரை. யாரைத்தான் நான் எதிர்க்கவில்லை என்று கேட்டவர் அவர். 'இந்தச் செயல் செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ, யாரும் அதைச் செய்ய முன்வராததால் செய்தேன்' என்று துணிச்சலாகக் களம் இறங்கியவர் பெரியார். அவர் நடத்திய போராட்டங்கள், முதுமையிலும் அவர் காட்டிய துணிச்சலான எதிர்ப்புகள் இன்றைய இளைஞர்கள் படிக்க வேண்டிய பாடப் புத்தகங்கள்.

மூன்றாவதாக என் கண் முன்னால் வருகிறார் மாவீரர் பிரபாகரன். இரண்டு முறை அவரைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஆன்ம பலம் மட்டும் இருந்தால் ஒரு நாட்டை மட்டுமல்ல, 20 நாடுகளையும் ஒரே நேரத்தில் எதிர்க்க முடியும் என்று காட்டிய தலைவர் அவர். 'திண்ணியத்தில் நடந்த சாதிக் கொடுமையைத் தாங்கிக்கொண்டு எப்படி இருக்கிறீர்கள்?' என்று கேட்டார் பிரபாகரன். 'இல்லை, திருப்பி அடித்துக்கொண்டு இருக்கிறோம்' என்றேன். 'உங்களுக்கு இங்கே ஒரு அண்ணன் இருக்கிறான் என்ற தைரியத்தில் எதிர்த்துப் போராடுங்கள்' என்று அவர்தான் என்னை முன்னிலும் வேகமாக முடுக்கிவிட்டார்.

எந்த அடக்குமுறை மிரட்டல்கள் வந்தாலும் ஏற்றுக்கொண்ட கொள்கையை விட்டுத்தர மாட்டேன். ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்தாலும் இந்திய அரசாங்கத்தின் தமிழர் விரோதப் போக்கைக் கண்டிப்பதில் முதல் ஆளாக இருக்கிறேன். நடுத்தெருவில் அல்ல... நாடாளுமன்றக் கட்டடத்திலேயே என்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறேன். பட்டப் பகலில்... வெட்டவெளியில் ஓர் இனத்தை அழித்தொழித்த காட்டுமிராண்டிச் சிங்களவனுக்குத் துணை போன துரோகம் மன்னிக்க முடியாது என்பதை எல்லா மேடைகளிலும் சொல்லி வருகிறேன். இடம், பொருள், அரசியல் சூழல், தொகுதிப் பங்கீடு பார்த்து நான் பேசுவதில்லை. எதிர்ப்பு என்பது இது எதையும் பார்க்காமல் கொடுமை நடந்தவுடன் பீறிட்டுக் கிளம்ப வேண்டும். நிர்பந்தங்கள் எல்லாக் காலங்களிலும் இருக்கும். அதைப் பார்த்தால் எதையும் எதிர்க்க முடியாது.


மீண்டும் சொல்கிறேன், ஆடுகளைத்தான் பலியிடுகிறார்கள். சிங்கங்களை அல்ல!''


நன்றி : ஆனந்த விகடன் (21-10-2009)

Thursday, October 15, 2009

வவுனியா தடுப்புமுகாம் மக்களின் நிலையைப் பார்த்து நான் பல தடவை கண்கலங்கினேன்: திருமாவளவன்

வன்னி தடுப்பு முகாம்களில் வாழும் தமிழர்களின் நிலை தொடர்பாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் கூட திருப்தி தெரிவிக்கவில்லை. வவுனியா முகாம்களுக்கு நாம் மேற்கொண்ட பயணம் மிகவும் வேதனையையும், கடினமான வலியையுமே எமக்கு ஏற்படுத்தியது அந்த மக்களின் நிலையைப் பார்த்து நான் பல தடவைகள் கண்கலங்கிவிட்டேன் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஐந்துநாள் பயணமாக இலங்கை வந்து வவுனியா முகாம்கள் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ, பிரதமர், அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்க் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து உரையாடிய திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவில் இடம்பெற்றிருந்த திருமாவளவன் தமிழகம் திரும்ப முன்னர் கொழும்பிலிருந்து வெளியாகும் நாளேடு ஒன்றுக்களித்த பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இந்தப் பேட்டியில் திருமாவளவன் மேலும் முக்கியமாகத் தெரிவித்ததாவது:

"வவுனியா தடுப்புமுகாம்களை பார்வையிட்டது மிகவும் வேதனையானதாகவும், கடினமான வலியைத் தருவதாகவும் அமைந்திருந்தது. மக்களை ஏன் இந்தளவுக்குப் போட்டு வதைக்கின்றார்கள் என்ற கேள்வி நமக்குள் எழுந்தது. அங்குள்ள மக்கள் கூட அந்தக் கேள்வியைத்தான் எழுப்பினார்கள். நாம் என்ன பாவம் செய்தோம்? ஏன் எங்களைப் போட்டு வதைக்கின்றார்கள்? இதற்குப் பதிலாக விஷம் கொடுத்து ஒட்டுமொத்தமாகக் கொலை செய்துவிடலாமே என பெணகள் தலையிலடித்துக்கொண்டு அழுதவாறு சொன்னார்கள். மூன்று நான்கு சந்தர்ப்பங்களில் நானே கண்கலங்கிப் போனேன்.

பெரும்பாலான இளைஞர்கள் பேசுவதற்கே அஞ்சினார்கள். எங்களுடன் பேசினால் பின்னர் அடையாளம் கண்டு ஏதாவது செய்துவிடுவார்களோ என்று பயமாக இருப்பதாக அவர்கள் சொன்னார்கள். எங்களை வெளியில் அனுப்பி சொந்த வாழ்விடங்களுக்கு அனுப்ப ஏதாவது செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள். இப்போதுதான் புலிகள் இல்லையே, பிறகு எதற்காக எங்களைப் பிடித்து வைத்திருக்கின்றார்கள்? என்றெல்லாம் அங்குள்ள மக்கள் கதறினார்கள்.

அத்துடன் பெரும்பாலான மக்கள் குளிக்க, குடிக்க போதிய தண்ணீர் இல்லை என்றும் தண்ணீர் பிடிப்பதற்காக ஒரு வார காலம் வரிசையில் காத்திருக்க வேண்டியிருப்பதாகவும் வருத்தத்துடன் சொன்னார்கள். இது மிகவும் உச்சமான குறையாக அங்கு வெளிப்ப்பட்டது. அதேவேளையில் எங்களை எங்களுடைய சொந்த வாழ்விடங்களுக்கு அனுப்புங்கள், அது போதும். அரசாங்கம் எமக்கு எதையுமே செய்ய வேண்டாம். நாங்கள் உழைத்துப் பிழைத்துக்கொள்கின்றோம் என்பதையே அங்குள்ள மக்கள் ஒட்டு மொத்தமாக ஒருமித்த குரலில் தெரிவித்தார்கள்.

முகாம் நிலைமைகள் திருப்திகரமாக இருக்கின்றது என இந்தக் குழுவில் எவரும் தெரிவிக்கவில்லை. எந்த அடிப்படையில் இவ்வாறான ஒரு தகவல் வெளியிடப்பட்டது என்பது தெரியவில்லை. பயண ஏற்பாடுகள் குறித்து நன்றியை மட்டுமே சிறிலங்கா அரசாங்கத்துக்கு நாம் தெரிவித்தோம்.

முகாம்களில் மக்கள் கடுமையாக வதைபடுகின்றார்கள். அவர்களை விடுவிக்க வேண்டும் என்பதே அனைவரினதும் ஒருமித்த குரலாக அமைந்திருந்தது. அங்கு போதிய குடிநீர் இல்லை. மருத்துவ மற்றும் சுகாதார வசதிகள் இல்லை என்பதை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷவிடம் ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் அழுத்தமாகக் குறிப்பிட்டோம். இதுதான் நடந்தது.

இது தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றை தமிழக முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கின்றோம். அதன் அடிப்படையில் முதல்வர் ஆவன செய்வார் என நம்புகின்றோம்.

எங்களுடைய கருத்துக்களை சிறிலங்கா ஆட்சியாளர்களுக்குக் கூறியிருந்தோம். அவர்கள் அதனைக் கேட்டுக்கொண்டனர். உங்களுடைய கோரிக்கைகளைப் பரிசீலிக்கின்றோம் என அவர்கள் தெரிவித்திவித்திருந்தார்கள். அரசாங்கத் தரப்பினருடனான பேச்சுக்களின் போது முகாம்களிலுள்ள மக்களை மீள்குடியேற்ற வேண்டும். குறிப்பாக பருவப் பெயர்ச்சிக்கு முன்னதாதக இவர்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்பதையே நாம் ஒட்டுமொத்தமான கோரிக்கையாக முன்வைத்தோம்.

இருந்தபோதிலும் கண்ணி வெடிகளை அகற்றிய பின்னரே மீள்குடியேற்றம் செய்ய முடியும் என்பதே அரசாங்கத்தின் பதிலாக அமைந்திருந்தது. அதற்கான பணிகள் இப்போது நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரியப்படுத்தினார்கள்" என திருமாவளவன் மேலும் தெரிவித்தார்.

நன்றி : புதினம்

  © Copyright 2008 - www.thiruma.in All rights reserved. Designed and Hosted by, Sree - Ramanan

TOPO