இசைஞானி இளையராஜா அவர்களை திருமாவளவன் நேரில் சந்தித்து வாழ்த்து# திருமாவளவன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சொன்னாலும் சொல்வார்கள்- வன்னிஅரசு# சினிமாவை பார்த்து ஏமாறும் காலம் அல்ல: விஜயகாந்த்தின் முதல்வர் கனவு பலிக்காது# தமிழகமெங்கும் முத்துக்குமார் பாசறை தொடங்கப்படும்:தொல்.திருமாவளவன் அறிவிப்பு# இந்திய-இலங்கை அதிபர் தேர்தல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் விடுதலைச்சிறுத்தைகளும்!# கரும்புலி முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் நடந்தது என்ன? -வன்னிஅரசு மாநிலச் செயற்குழுக் கூட்டம் - தீர்மானங்கள் # ''தம்பி உயிரோடு இருக்கிறார்... கனடாவில் என்னை சந்திப்பார்!'' - ஜூ.வி நேர்காணலில்..திருமா# அமரர் வேலுப்பிள்ளைக்கு - தொல்.திருமாவளவன் இறுதி அஞ்சலி#ஒப்புவமை இல்லாத மாவீரரை தமிழினத்துக்குத் தந்த மாவீரர்! திரு. வேலுப்பிள்ளை - தொல். திருமாவளவன் அறிக்கை #தமிழீழமே தீர்வு: தமிழகத்திலும் பொதுவாக்கெடுப்பு! - திருமா அறிக்கை # இரண்டாம் ஆண்டில் www.thiruma.in # இராமன் மிகப்பெரிய பயங்கர‌வாதி நாடாளுமன்ற அவையில் திருமா பேச்சு # ஈழத்தமிழர் பிரச்சனை 10 கோடி தமிழர்களை கொண்ட ஒரு தேசிய இனத்தின் பிரச்சனை -பாராளுமன்றத்தில் திருமா உரை #

Tuesday, November 24, 2009

புது தில்லியில் விடுதலைச் சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மீனவர்களுக்கு எதிரான சட்டம்:


புது தில்லியில் விடுதலைச் சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்
தொல். திருமாவளவன் அறிவிப்பு

மீனவப் பெருகுடி மக்களின் வாழ்வாதார உரிமைகள் கடுமையாகப் பாதிக்கும் வகையில் இந்திய அரசு மீன் பிடிக்கும் தொழில் தொடர்பாக புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. "கடல் மீன்பிடி தொழில் மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம்' என்கிற இந்திய அரசின் இச்சட்டம் இந்திய மீனவர்களின் கடல் உரிமைகளை வெகுவாகப் பாதிக்கச் செய்கிற அச்சத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இந்திய மீனவர்கள் 12 கடல் மைல்களுக்கு அப்பால் மீன்பிடிக்கக் கூடாது என்றும் மீறினால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும், ரூபாய் பத்தாயிரம் மதிப்பு அளவிலான மீன்களைப் பிடிக்கும் படகுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் பல்வேறு கெடுபிடிகள் இச்சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இத்தகைய சட்டப் பிரிவுகள் ஆழ்கடல் மீன்பிடிப்பைத் தடை செய்வதோடு மீனவச் சமூகத்தின் பாரம்பரிய உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளன. எனவே இச்சட்டம் அறிமுகப்படுத்தப்படுவதை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாக எதிர்க்கிறது. அத்துடன் இச்சட்டத்தை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டுமெனவும் வற்புறுத்துகிறது. எமது கோரிக்கையை பொருட்படுத்தாமல் இந்திய அரசு இச்சட்டதை நிறைவேற்றுமேயானால் அதனைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தில்லியில் நடத்தப்படும். தமிழக மீனவ அமைப்புகளையும் ஒருங்கிணைத்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என விடுதலைச் சிறுத்தைகள் எச்சரிக்கிறது.

இவண்

- தொல். திருமாவளவன்

உங்கள் கருத்தை தெரிவிக்க

  © Copyright 2008 - www.thiruma.in All rights reserved. Designed and Hosted by, Sree - Ramanan

TOPO