எழுச்சித் தமிழர் தொல்.திருமா அவர்களின் வாழ்க்கை குறிப்பு

பிறந்த நாள் : 17.08.1962

குடும்பம் : திருமணமாகாதவர்

அப்பா : இராமசாமி (எ) தொல்காப்பியன்

அம்மா : பெரியம்மாள்

தம்பிகள் : செங்குட்டுவன், பாரிவள்ளல்

அக்கா : வான்மதி

முகவரி : அங்கனூர் & அஞ்சல்
செந்துரை வட்டம்,
பெரம்பலூர் மாவட்டம் - 621 709

கல்வி:

புகுமுக வகுப்பு ‍(பியு.சி) (1978-79)
 • அருள்மிகு கொளஞ்சியப்பர்அரசு கலைக்கல்லூரி, விருத்தாசலம்.
பட்ட வகுப்பு -‍‍‍ இளம்வேதியல்(பி.எஸ்.சி) (1979‍-82)
 • மாநிலக் கல்லூரி, சென்னை.
பட்ட மேற் வகுப்பு முதுகலை குற்றவியல்(எம்‍.ஏ) (1983- 85)
 • சென்னை பல்கலைக் கழகம், சென்னை

சட்ட வகுப்பு இளநிலைச் சட்டம்(பி.எல்) (1985 -88)
 • சென்னை சட்டக் கல்லூரி, சென்னை.

அரசுப்பணி :
 • தமிழக அரசின் தடய அறிவியல் துறையில், அறிவியல் உதவியாளராக 5.4.1988 இல் மதுரையில் பணியமர்த்தம் மதுரை, கோவை,சென்னை ஆகிய இடங்களில் பணி செய்தல். 1999 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதற்காக 17.08.1999 இல் பணி விலகல்.

பொதுவாழ்க்கை:

1983
 • ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வெடித்த மாணவர் போராட்டங்களை ஒருங்கிணைத்து முன்னின்று நடத்தியது.
 • தலித் மாணவர் போராட்டங்கள் மற்றும் அம்பேத்கர் போராட்டங்களில் பங்கேற்பு.

1984
 • 'கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவை' யின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்பு. பேரவையின் சார்பில் 'ஈழ விடுதலை ஆதரவு மாணவர் மாநாட்டை சென்னை பெரியார் திடலில் தலைமையேற்று நடத்தியது.
 • ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக 'விடுதலை புலி' எனும் கையெழுத்து ஏட்டை பொறுப்பேற்று நடத்தியது.

1985
 • கடலோர பகுதியை சார்ந்த தலித் மற்றும் மீனவ இளைஞர்கள் , மாணவர்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட ' இளைஞர் நல இயக்கத்தின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று வழிநடத்தியது. அவ்வியக்கத்தின் சார்பில் ஈழ விடுதலைக்க்கு ஆதரவாக மிதிவண்டிப் பேரணி, ஆர்பாட்டங்கள், கருத்தரங்கள் நடத்தியது.

1986
 • ஈழம் சென்ற இந்திய அமைதிப்படையின் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பை ஒருங்கிணைத்து போராட்டங்களை முன்னின்று நடத்தியது.
 • புதிய கல்வி கொள்கை (நவோதயா) திட்டத்தின் நகலை எரித்து சென்னை சட்டக் கல்லூரி முன் கைதானது.
 • திராவிடர் கழகம் நடத்திய ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான இரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்று சென்னை சைதாபேட்டையில் கைதானது.
 • இந்தி எழுத்து அழிப்பு போராட்டத்தில் பங்கேற்பபு. 1987 ஈழத் தமிழர் பாதுகாப்பு க் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தை பாரிமுனைப் பகுதியில் தலைமை யேற்று நடத்தியது.

1990
 • விடுதலைச்சிறுத்தைகள் இயக்கத்தின் தலைமை பொற்ப்பேற்றது.
1990-99
 • தீவிரமான பல்வேறு போராட்டங்களை வழிநடத்தியது.
1999
 • முதன் முறையாக சிதம்பரம் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மூன்றாவது அணி சார்பில் போட்டியிட்டு 2,25,768 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் வகித்தது.

2001
 • சட்டமன்றப் பொதுதேர்தலில் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு சட்ட பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றது.

2004
 • நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க அணியில் தாழ்தப்பட்ட சமுகத்தினருக்கு உரிய 'அரசியல் மதிப்பு' மறுககப்பட்டதாக சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்.(3.2.2004).
 • நாடாளுமன்ற பொதுத் தேர்தலில்,ஐக்கிய சனதாதளம், புதிய தமிழகம், மக்கள் தமிழ்த்தேசியம் ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து 'மக்கள் கூட்டணி' அமைத்து சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டது. அத்தேர்தலில் சுமார் 2,57,000 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை தக்க வைத்தது. 2006: அ.தி.மு.க கூட்டணியுடன் அமைத்து தமிழகத்தில் 9 இடங்களிலும், புதுச்சேரியில் 2 இடங்களிலும் போட்டியிட்டு, தமிழகத்தில் 2 இடங்களில் (காட்டுமன்னார் கோயில், மங்களூர்) வெற்றிபெற்றது.

2007‍ - 08
 • ஈழத்தமிழர் ஆதரவு, மனித நேயப்பேரணி, கருத்துரிமை மீட்பு மாநாடு உள்ளிட்ட கட்சியின் எண்ணற்ற போராட்டங்கள் மற்றும் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள்.

2009
 • ஈழத்தமிழர்களுக்காக சென்னை மறைமலை நகரில் நான்கு நாட்கள் தொடர் உண்ணாவிரதம்.
 • ஈழத்தில் போர்நிறுத்தத்திற்காக "நாம் தமிழர்" நடைப்பயணம்.
 • நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி.

25 comments:

கருத்துரையிடுக