சட்டம் - விதிகள்இயக்க விவரம்
இயக்கத்தின் குறிக்கோள்
இயக்கத்தின் நோக்கங்கள்
தலைமைச் செயலகம்
பொதுப்பேரவை
மையப்பேரவை
மாநிலப் பொதுக்குழு
மாநில செயற்குழு
மாவட்டப் பொதுக்குழு
மாவட்டச் செயற்குழுக்கள்
வட்டார அமைப்புகள்
அடிப்படை அமைப்புக் குழு
அணிகள்
மையங்கள்
துணைநிலை அமைப்புகள்
உறுப்பியம்
உறுப்பினர் பதிவு
உறுப்பினர் படிவம்
உறுதிமொழி
உறுப்பினர் கட்டணம்
கட்டணப் பங்கீடு
வருவாய்ப் பங்களிப்பு
உறுப்பினர் உரிமைகள்
உறுப்பினர் கடமைகள்
உறுப்பினருக்கான இயக்கத்தின் பொறுப்பு
உறுப்பினர் தகுதி இழப்பு
பொறுப்பாளர் தகுதி
முழுநேரப் பணியாளர்
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள்
இயக்கத் தேர்தல்
பணிக் குழுக்கள்
ஒழுங்கு நடவடிக்கை
முதுபெரும் இயக்க உறுப்பினர்கள்
துணைவிதிகள்
திருத்தங்கள்
முதல் திருத்தம் (2007 -2008)அரசியமைப்புச் சட்டம் மற்றும் விதிகள்

உறுதிமொழி

இந்திய அரசியமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள சமத்துவம், சனநாயகம், மதச்சார்பின்மை ஆகியவற்றிற்கு உண்மையாகவும், நம்பிக்கையாகவும், நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை உறுதியாகக் கடைப்பிடிப்போமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுதி அளிக்கிறது.

உறுப்பு எண் 1 - இயக்க விவரம்
இயக்கத்தின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றைப் பற்றிய விவரங்களை விளக்குவதாகும். சின்னம் என்பது கட்சியின் அடிப்படை முழக்கத்தைக் கொண்ட குறியீட்டைக் குறிக்கும்.

பிரிவு 1: பெயர்
இயக்கத்தின் பெயர் 'விடுதலைச் சிறுத்தைகள்' என்பதாகும். இயக்கம் என்பது 'கட்சி' என்றும் பொருள்படும்.

பிரிவு 2: சின்னம்
சீறும் சிறுத்தையை மையமாகக்கொண்டு, அதைச் சுற்றிலும் மேல்பாகத்தில் “சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை” என்றும், கீழ்ப்பாகத்தில் “விடுதலைச் சிறுத்தைகள்” என்றும் கருப்பு பின்னணியில் வெள்ளை எழுத்தில் எழுதப்பட்டிருக்கும்.

பிரிவு 3: கொடி
கட்சியின் கொடி நீலமும் சிவப்பும் கலந்த இருவண்ணங்களைக் கொண்டதாகும். கொடியின் மேல் பகுதியில் வானத்தின் நீல வண்ணமும், கீழ்ப்பகுதியில் குருதியின் சிவப்பு வண்ணமும், சம அளவுகளில் இருக்கும். கொடியின் மையத்தில் ஐந்து முனைகளையுடைய வெள்ளை விண்மீன் பொறிக்கப்பட்டிருக்கும். கொடி மூன்று பங்கு நீளமும் இரண்டு பங்கு அகலமும் கொண்ட அளவுகளில் இருக்கும்.

பிரிவு 4: கொடி விளக்கம்
நீல வண்ணம் - உழைக்கும் மக்களின் விடுதலையைக் குறிக்கும்
சிவப்பு வண்ணம் - புரட்சிகர நடவடிக்கைகளைக் குறிக்கும்
விண்மீன் - விடியலை அடையாளப்படுத்தும் விடிவெள்ளியைக் குறிக்கும்.
விண்மீனின் ஐந்து முனைகள் - இயக்கத்தின் இலக்கை அடைவதற்கு கீழ்வரும் ஐவகை நோக்கங்களின் அடிப்டையில், கட்டமைக்கப்படும் போராட்டக் களங்களைக் குறிக்கும்.
1. சாதி, மதம் ஒழித்து சமத்துவம் படைப்போம்.
2. வர்க்க அமைப்பை உடைத்து வறுமையைத் துடைப்போம்.
3. மகளிர் விடுதலை வென்று மாண்பினைக் காப்போம்.
4. தேசிய இன உரிமைகள் மீட்டு, ஐக்கியக் குடியரசு அமைப்போம்.
5. வல்லரசிய ஆதிக்கம் ஒழித்து வாழ்வுரிமைகள் மீட்போம்.

உறுப்பு எண் 2 இயக்கத்தின் குறிக்கோள்
தமிழக மற்றும் இந்திய அளவில், உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை வென்றெடுப்பதே இயக்கத்தின் குறிக்கோளாகும்.

உறுப்பு எண் 3 இயக்கத்தின் நோக்கங்கள்
  1. புரட்சியாளர் அம்பேத்கர் வழியில், உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களை அமைப்பாக்கி 'அரசியல் சக்தி' யாக வளர்த்தெடுப்பது.
  1. அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் தாழ்த்தப்பட்டோர் அல்லது சாதியற்றோர் தலைமையை நிறுவுவது.
  1. இந்திய தேசியம் என்னும் பெயரில் மொழிவழி தேசிய இனங்களின் மீது திணிக்கப்படும் ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றிற்கு எதிராகப் போராடி, தேசிய இன உரிமைகளை நிலைநாட்டுவதுடன், ஒவ்வொரு மாநிலத்திலும் தேசிய அரசுகளையும், இந்திய அளவில் தேசிய இனங்களின் சனநாயக ஐக்கியக் குடியரசையும் நிறுவுவது.
  1. சாதி மற்றும் மதத்தின் பெயரால் உழைக்கும் மக்களின் மீது திணிக்கப்படும் தீண்டாமை உள்ளிட்ட இழிவுகள் மற்றும் வன்கொடுமைகளுக்கெதிராகப் போராடி, சாதி, மத ஒழிப்பை வென்றெடுப்பது.
  1. ஊழைக்கும் பாட்டாளி வர்க்கத்தினரை அணி திரட்டி, சாதிய நிலவுடைமை மற்றும் முதலாளித்துவத்தின் அடிப்படையிலான வர்க்க ஒடுக்குமுறைகளையும் சுரண்டலையும் ஒழிப்பது.
  1. மகளிருக்கெதிரான ஆணாதிக்கம் உள்ளிட்ட அனைத்து வகை ஒடுக்குமுறைகளையும் ஒழித்து, பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவது.
  1. வல்லரசிய ஆதிக்கத்தையும், பன்னாட்டுப் பொருளாதாரச் சுரண்டலையும் ஒழித்து, இந்திய அளவில் தன்னிறைவுப் பொருளாதாரத்தை உருவாக்குவது.

உறுப்பு எண் 4: தலைமைச் செயலகம்
கட்சியின் தலைமைச் செயலகம் சென்னை மாநகரத்தில் அமைந்திருக்கும், மாநிலங்களுக்கான தலைமைச் செயலகங்கள் அந்தந்த மாநிலங்களின் தலை நகரங்களில் அல்லது முகாமையான நகரங்களில் இயங்கும்.


உறுப்பு எண் 5: பொதுப்பேரவை
இயக்கத்தின் உச்சநிலை அதிகாரங்களைக் கொண்டப் இப்பேரவையானது, பொதுச் செயலாளரின் தலைமையில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கூட்டப்படும். இடைப்பட்டக் காலங்களில் தேவையினடிப்படையில் பொதுச் செயலாளர் சிறப்புப் பொதுப்பேரவையைக் கூட்டலாம். அத்துடன், மையப்பேரவையின் வழிகாட்டுதலின் அடிப்படையிலோ அல்லது பொதுப் பேரவையின் உறுப்பினர்களில் மூன்றிலொரு பங்கினர் கையெழுத்திட்டுக் கேட்டுக் கொள்வதின் அடிப்படையிலோ சிறப்புப் பேரவையைக் கூட்டலாம்.


பிரிவு 1: பொதுப் பேரவையில் இடம் பெறும் உறுப்பினர்கள்

• மையப்பேரவை உறுப்பினர்கள்

• மாநில மற்றும் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் பொதுப்பேரவை உறுப்பினர்கள்.

• தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர்கள்.

• தமிழ்நாடு மற்றும் பிறமாநில அமைப்புக்குழு நிர்வாகிகள்

• மாவட்ட, மாநகர, மாவட்ட நிர்வாகிகள்

• ஒன்றியம், நகரம், நகரியம் மற்றும் பகுதி அமைப்பாளர்கள்.

• அணிகள் மற்றும் துணைநிலை அமைப்புகளின் மாநில நிர்வாகிகள்


• மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்மன்றத் தலைவர்கள், ஒன்றியப் பெருந்தலைவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாநகரத் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

• பொதுச்செயலாளரால் நியமிக்கப்படும் பொதுப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள்.

பிரிவு2: பொதுப்பேரவை மற்றும் சிறப்புப் பொதுப்பேரவைக் கூட்டங்களுக்கான இடம் மற்றும் நாள் ஆகியவை மையப்பேரவையின் வழிகாட்டுதலின் பேரில் முடிவு செய்யப்படும்.

பிரிவு 3: பொதுப்பேரவையின் பணிகள்


1.மையப்பேரவையால் முன் வைக்கப்படுகின்ற இயக்கத்தின் அரசியலறிக்கைகள், செயலறிக்கைள், இயக்கத் தொடர்பான பிற அறிக்கைகள், செயல்திட்டங்கள் முதலியன குறித்துத் திறனாய்வு செய்தல் மற்றும் அவை மீதான நடவடிக்கைகளை மேற் கொள்ளுதல்.

2.இயக்கத்தின் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் விதிமுறைகளைத் திருத்துதல் மற்றும் மாற்றுதல்.

3.மையப்பேரவைக்கான உறுப்பினர்களைத் தேர்வு செய்தல்.

4.தணிக்கைக் குழுவின் அறிக்கையைத் திறனாய்வு செய்து ஒப்புதல் அளித்தல்.

விதி 1: பொதுப்பேரவையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பங்கேற்றால்தான் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் விதிமுறைகளை திருத்தவோ அல்லது மாற்றவோ முடியும்.

விதி 2: பொதுப்பேரவையை நடத்துவதற்கு மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பங்கேற்க வேண்டும். இவ்வெண்ணிக்கைக்குக் குறைவாக இருப்பின், பொதுப்பேரவையை நடத்தக் கூடாது.

விதி 3: பொதுப்பேரவையில் கலந்தாய்வு மற்றும் திறனாய்வு செய்ய வேண்டிய இயக்கத்தின் முன்வரைவு ஆவணங்கள் அனைத்தையும் முப்பது நாட்களுக்கு முன்னதாகவே பொதுப்பேரவையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் மையப்பேரவையின் வழிகாட்டுதலின்படி பொதுச் செயலாளர் அனுப்பிவைக்க வேண்டும்.

உறுப்பு எண் 6: மையப்பேரவை
இயக்கத்தின் அரசியல் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்கள், இயக்கத்தின் சட்டம் மற்றும் விதிமுறைகள், பொதுப் பேரவையின் முடிவுகள் உள்ளிட்ட அனைத்தையும் நடைமுறைப்படுத்தவும், அவ்வப்போது எழும் அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ப முடிவுகள் எடுக்கவும், இயக்கத்தை வழிநடத்தவும், முழுமையான அதிகாரம் கொண்டப்பேரவையே மையப் பேரவையாகும்.

இப்பேரவை ஆறு திங்களுக்கொருமுறை பொதுச் செயலாளரின் தலைமையில் கூடும். தேவையையொட்டி, பொதுச் செயலாளரோ அல்லது மையப்பேரவையின் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கையெழுத்திட்டு கேட்டுக் கொள்வதன் அடிப்படையிலோ இடைப்பட்டக் காலங்களில் கூட்டப்படும்.


பிரிவு 1: மையப்பேரவையில் இடம்பெறும் உறுப்பினர்கள்

வ. பொறுப்பு எண்ணிக்கை
எண்.
1. பொதுச் செயலாளர் 1
2. துணைப் பொதுச் செயலாளர்கள் (2+1) 3
3. பொருளாளர் 1
4. அரசியல் தலைமைக்குழுச் செயலாளர்,
துணைச் செயலாளர் 2
5. மாநில அமைப்புச் செயலாளர்கள் 9
6. தலைமை நிலையச் செயலாளர்கள் 2
7. கருத்தியல் பரப்புச் செயலாளர் 1
8. தேர்தல் பணிக்குழு செயலாளர் 1
9. செய்தித் தொடர்பாளர் 1
10. அணிகள், மையங்கள், பிறதுணைநிலை
அமைப்புகளின் மாநிலச் செயலாளர்கள். 17
11. பிற மாநில நிதிச் செயலாளர்கள் 5
12. சட்டமன்ற, நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் 5
13. மாவட்ட அமைப்புச் செயலாளர்கள் 32
14. பொதுச்செயலாளரால் நிரூபிக்கப்படும் உறுப்பினர்கள்
மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் (5+15) 20

பிரிவு 2: மையப்பேரவையின் பணிகள்
1. அரசியல் தலைமைக்குழு, பொதுச் செயலாளர் உள்ளிட்ட ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் தலைமைக்குழு மையப் பேரவையால் அமைக்கப்டும். அவ்வுறுப்பினர்களில், அரசியல் தலைமைக்குழுச் செயலாளர் மற்றும் துணைச் செயலாளர் ஆகியோர் மையப் பேரவையிலிருந்தும், அரசியல் தலைமைக்குழுவிற்கான மற்ற ஆறு உறுப்பினர்கள் மையப்பேரவையின் வழிகாட்டுதலின்படியும் பொதுச் செயலாளரால் நியமிக்கப்படுவர்.

2. இயக்கத்தின் அரசியலறிக்கைகள், செயலறிக்கைகள், இயக்கத்தொடர்பான பிற அறிக்கைகள், செயல்திட்டங்கள் முதலியவற்றை திறனாய்வுக்கும், கலந்தாய்வுக்கும் ஒவ்வொரு பொதுப்பேரவையிலும் மையப் பேரவை முன் வைக்கும்.

3. அரசியல் சூழல்கள் மற்றும் இயக்கத் தொடர்பானச் சிக்கல்கள் குறித்து அவ்வப்போது கலந்தாய்வுகள் செய்யவும், முடிவுகள் எடுக்கவும், அம்முடிவுகளினடிப்படையில் இயக்கத்தை வழி நடத்தவுமானப் பணிகளை மையப்பேரவைச் செய்யும்.

4. ஒழுங்கு நடவடிக்கைக்குழு, தணிக்கைக்குழு, தேர்தல் பணிக்குழு மற்றும் தேவையினடிப்படையிலான இடைக்காலக் குழுக்கள் ஆகியவற்றை, மையப் பேரவையின் உறுப்பினர்களிலிருந்தே மையப் பேரவை அமைக்கும்.

5. மையப் பேரவையின் மொத்த உறுப்பினிர்களில் மூன்றில் இரண்டு பங்கினரின் ஒப்புதலோடு, இயக்கத்திற்கு எதிரான வகையில் சட்ட விதிமுறைகளை மீறும் மையப் பேரவையின் உறுப்பினர்கள் மீது மையப்பேரவை ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கும். அத்துடன், ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிற்கு மேல் சீராய்வுக்கான மேல் முறையீட்டுக் குழுவாகவும் மையப் பேரவை இயங்கும்.

6. மையப்பேரவையின் ஒழுங்கு நடவடிக்கையினாலோ அல்லது வேறு காரணங்களாலோ காலியாகும் இடங்களுக்கு உரிய உறுப்பினர்களை மையப்பேரவைத் தெரிவு செய்யவும்.

7. ஆண்டுக்கொருமுறை தணிக்கைக்குழு முன்வைக்கும் வரவு, செலவு அறிக்கைகளை மையப்பேரவை ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கும்.

8. இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல உறுதுணையாக அமையும் வகையில் இயக்கக் கருத்தியலைப் பரப்பவும், இயக்கத்தின் போராட்ட நடவடிக்கைகளைப் பதிவு செய்யவும், இயக்கத்தின் ஆவணங்களாக நாளேடுகள், பருவ ஏடுகள், வெளியீடுகள் மற்றும் மின்னணு ஊடகங்கள் ஆகியவற்றை நிறுவிட, மையப்பேரவை பொதுச் செயலாளருக்கு ஒப்புதல் வழங்கும்..


9. இயக்கத்தின் அரசியல் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குள் ஆகியவற்றுக்கான செயல் திட்டங்களை மையப்பேரவை வரையறுக்கும்.


விதி 1: மையப்பேரவையை நடத்துவதற்கு மையப்பேரவையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பங்கேற்க வேண்டும். இவ்வெண்ணிக்கைக்குக் குறைவாக இருப்பின், பேரவையை நடத்தக்கூடாது.

விதி 2: மையப்பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றவோ அல்லது வேறு ஏதேனும் முடிவுகளை எடுக்கவோ, மையப்பேரவையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பங்கேற்க வேண்டும். இவ்வெண்ணிக்கைக்குக் குறைவாக இருப்பின், பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றவோ, முடிவுகளை எடுக்கவோ கூடாது.

விதி 3: பொதுச்செயலாளரோ அல்லது பொதுச்செயலாளரின் வழிகாட்டுதலின் படியோ, வழக்கமாகக் கூட்டப்படும் மையப்பேரவையின் கூட்டத்திற்கான அறிவிப்பைப் பதினைந்து நாட்களுக்கு முன்னதாகவும், இன்றியமையாதச் சூழல்களில் கூட்டப்படும் மையப்பேரவையின் கூட்டத்திற்கான அறிவிப்பை இரண்டு நாட்களுக்கு முன்னதாகவும் பேரவை உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.


விதி 4: தவிர்க்கமுடியாதக் காரணங்களால் மையப்பேரவையில் கலந்து கொள்ள இயலாதவர்கள் அதற்கானத் தகவலைப் பேரவையின் கூட்டத்திற்கு முன்னதாகவோ அல்லது கூட்டத்தின்போதோ பொதுச்செயலாளரிடம் அல்லது தலைமைச் செயலகத்தில் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் கொடுக்க இயலாதவர்கள் அதற்கான விளக்கத்தை மையப்பேரவைக் கூட்டம் நடைபெற்ற ஏழு நாட்களுக்குள் எழுத்தில் வழங்க வேண்டும்.

விதி 5: 1. மையப்பேரவைக் கூட்டத்தில் தொடர்ந்து மூன்று முறை பங்கேற்காதவர்கள் மையப்பேரவை உறுப்பினர் தகுதியைத் தானாகவே இழந்து விடுவர். அத்துடன் அவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கான நடைமுறைகளுக்கும் ஆளாக்கப்படுவர்.

2. மையப்பேரவைக் கூட்டத்திற்குக் குறித்த நேரத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக்கப்படுவர்.

விதி 6: மையப்பேரவையின் நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக 'நிகழ்க் குறிப்பேட்டில்' பதிவு செய்யப்பட வேண்டும். மையப் பேரவையில் பங்கேற்போர் கையொப்பமிடும் 'வருகைப் பதிவேட்டையும்' உறுப்பினர்கள் ஒப்படைக்கும் செயலறிக்கைகளுக்கான 'கோப்புகளையும்' மையப்பேரவைக் கையாள வேண்டும்.

விதி 7: 1. மையப்பேரவை கூடும் ஒவ்வொரு முறையும், அதற்கு முன்னதாக நடைபெற்ற மையப்பேரவையின் நடவடிக்கைகளையும், முடிவுகளையும் பொதுச் செயலாளர் அறிக்கையாக முன் வைக்க வேண்டும்.

2. பொதுச் செயலாளர் உட்பட மையப்பேரவையின் உறுப்பினர்கள் அனைவரும், வழக்கமாகக் கூட்டப்படும் ஒவ்வொரு மையப்பேரவையிலும், இரண்டு மையப்பேரவைக் கூட்டங்களுக்கு இடைப்பட்டக் காலத்திற்குரிய முறையான செயலறிக்கைகளையும், வரவு-செலவு அறிக்கைகளையும் மையப்பேரவையில் ஒப்படைக்க வேண்டும். தவறினால், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக்கப்படுவர்.

3. மையப்பேரவையின் வழிகாட்டுதலின்படி, மாநில அளவில் ஒருங்கிணைக்கப்படும் மாநாடுகள், கருத்தரங்குகள், பேரணிகள், போராட்டங்கள் மற்றும் பிற பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கான வரவு - செலவு அறிக்கைகளை தொடர்புடைய பொறுப்பாளர்கள் மையப்பேரவையில் ஒப்படைக்க வேண்டும்.

4. இயக்கத்தின் மையப்பேரவை, பொதுப்பேரவை, சிறப்பு அமர்வுகள் ஆகியவற்றுக்கான வரவு - செலவு அறிக்கைகளை அதற்கடுத்துக் கூடுகிற மையப்பேரவையில் பொருளாளர் ஒப்படைக்க வேண்டும்.

பிரிவு 3: அறக்கட்டளை

1. இயக்கத்தின் சொத்துக்களைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் இயக்கத்திற்கென அறக்கட்டளையை நிறுவ மையப்பேரவை ஒப்புதல் வழங்கும். பொறுப்பினடிப்படையில் இயக்கத்தின் பொதுச் செயலாளர், அறக்கட்டளையின் நிலையானத் தலைவராகவும், பொருளாளர் அறக்கட்டளையின் நிலையான உறுப்பினராகவும் இருப்பர்.

2. அறக்கட்டளையின் தலைவரே, தேவையான மற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை முடிவு செய்வார். அவர்களை நியமனம் செய்யவும், நீக்கவும் தலைவருக்கு அதிகாரம் உண்டு. நியமனம் செய்யப்படும் உறுப்பினர்களின் பொறுப்புக்காலம் மூன்றாண்டுகளாகும்.


உறுப்பு எண் 7: மாநிலப் பொதுக்குழு


இது மாநில அளவில் இயக்கத்தின் உச்சநிலை அதிகாரங்களைக் கொண்ட குழுவாகும். இக்குழுவானது, பொதுச் செயலாளரின் தலைமையில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கூடும். தமிழகத்தில் பொதுச் செயலாளராலும், பிற மாநிலங்களில் மாநில அமைப்புச் செயலாளர்களாலும் இக்குழுக் கூட்டப்படும்.

இடைப்பட்டக் காலங்களில் தேவையினடிப்படையில் தமிழகம் தவிர பிற மாநிலங்களில் அந்தந்த மாநில அமைப்புச் செயலாளர்கள் பொதுச்செயலாளரின் ஒப்புதலோடு சிறப்புப் பொதுக்குழுவைக் கூட்டலாம். அத்துடன், மையப் பேரவை அல்லது மாநிலச் செயற்குழுவினர் வழிகாட்டுதலின் அடிப்படையிலோ அல்லது மாநிலப் பொதுக்குழுவின் உறுப்பினர்களில் மூன்றிலொரு பங்கினர் மையெழுத்திட்டுக் கேட்டுக் கொள்வதின் அடிப்படையிலோ சிறப்புப் பொதுக்குழுவைக் கூட்டலாம்.

பிரிவு 1: மாநிலப் பொதுக்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள்
1. அந்தந்த மாநிலங்களிலுள்ள மையப்பேரவை உறுப்பினர்கள்
2. மாநில செயற்குழு உறுப்பினர்கள்
3. மாவட்ட, மாநகர மாவட்ட நிர்வாகிகள்
4. ஒன்றியம், நகரம், நகரியம் மற்றும் பகுதி அமைப்பாளர்கள்
5. அணிகள் மற்றும் துணைநிலை அமைப்புகளின் அந்தந்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள்
6. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள், நகர்மன்றத் தலைவர்கள், ஒன்றியப் பெருந்தலைவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாநகரத் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
7. பொதுச் செயலாளரால் அனுமதிக்கப்டும் சிறப்பு அழைப்பாளர்கள்.
8. மாவட்ட அளவில் தெரிவு செய்யப்படும் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள்.

பிரிவு 2: மாநிலப் பொதுக்குழு மற்றும் மாநில சிறப்புப் பொதுக்குழுக் கூட்டங்களுக்கான இடம் மற்றும் நாள் ஆகியவை மையப்பேரவையின் வழிகாட்டுதலின்படி மாநிலச் செயற்குழுவால் முடிவு செய்யப்படும்.

பிரிவு 3: மாநிலப் பொதுக்குழுவின் பணிகள்
1. மாநிலச் செயற்குழுவால் முன்வைக்கப்படுகின்ற இயக்கத்தின் செயலறிக்கைகள், இயக்கத் தொடர்பான பிற அறிக்கைகள், செயல்திட்டங்கள் முதலியன குறித்துத் திறனாய்வு செய்தல் மற்றும் அவை மீதான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

2. மாநிலச் செயற்குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்தல்.

3. தணிக்கைக் குழுவின் அறிக்கையைத் திறனாய்வு செய்து ஒப்புதல் அளித்தல்.

விதி 1: மாநிலப் பொதுக்குழுவின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பங்கேற்க வேண்டும். அதற்குக் குறைவாக இருப்பின், அக்கூட்டத்தில் முகாமையான முடிவுகளோ, தீர்மானங்களோ நிறைவேற்றக்கூடாது.

விதி 2: மாநிலப் பொதுக்குழு நடைபெறும் இடம், நாள், நேரம் மற்றும் கூட்டத்திற்கான நோக்கங்கள் ஆகியவற்றை, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மாநில அமைப்புச் செயலாளர் இருவாரங்களுக்கு முன்னதாக தெரியப்படுத்த வேண்டும்.

உறுப்பு எண் 8 : மாநில செயற்குழு


பொதுப்பேரவை, மையப்பேரவை மற்றும் மாநிலப் பொதுக்குழு ஆகியவற்றின் முடிவுகள் அனைத்தையும் நடைமுறைப்படுத்தவும், அவ்வப்போது மாநில அளவில் எழும் அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ப முடிவுகளை மேற்கொள்ளவும், இயக்கத்தை வழிநடத்தவும், அதிகாரம் கொண்ட குழுவே மாநிலச் செயற்குழுவாகும்.

 இச்செயற்குழு நான்கு திங்களுக்கொருமுறை மாநில அமைப்புச் செயலாளரின் தலைமையில் கூடும். தேவையையொட்டி, பொதுச் செயலாளர் அனுமதியோடு மாநில அமைப்புச் செயலாளரோ அல்லது மாநில செயற்குழு உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கையெழுத்திட்டுக் கேட்டுக் கொள்வதன் அடிப்படையிலோ இடைப்பட்டக் காலங்களில் சிறப்பு மாநிலச் செயற்குழு கூட்டப்படும்.

பிரிவு 1: மாநிலச் செயற்குழுவில் இடம்பெரும் உறுப்பினர்கள்
1. மாநில அமைப்புச் செயலாளர்
2. மாநிலச் செயலாளர்கள்
3. மாநில பொருளாளர்
4. மாநில துணைச் செயலாளர்கள்
5. மாநிலச் செய்தித் தொடர்பாளர்
6. அணிகள், பிறதுணைநிலை அமைப்புகளின் மாநிலச் செயலாளர்கள்
7. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்
8. மாவட்ட அமைப்புச் செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள்
9. பொதுச் செயலாளரின் ஒப்புதலோடு மாநில அமைப்புச் செயலாளரால் அனுமதிக்கப்படும் சிறப்பு அழைப்பாளர்கள்.

பிரிவு 2: மாநிலச் செயற்குழுவின் பணிகள்


1. பொதுப்பேரவை, மையப்பேரவை மற்றும் மாநிலப் பொதுக்குழுவில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளையும் மாநிலச் செயற்குழு நடைமுறைப்படுத்தும்.

2. இயக்கத்தின் மாநில அளவிலான செயலறிக்கைகள், இயக்கத் தொடர்பான பிற அறிக்கைகள் மற்றும் செயல் திட்டங்கள் முதலியவற்றை திறனாய்வுக்கும், கலந்தாய்வுக்கும் ஒவ்வொரு மாநிலப் பொதுக்குழுவிலும், மாநில செயற்குழு முன்வைக்கும்.

3. அரசியல் சூழல்கள் மற்றும் இயக்கத் தொடர்பானச் சிக்கல்கள் குறித்து அவ்வப்போது கலந்தாய்வுகள் செய்யவும், முடிவுகள் எடுக்கவும், அம்முடிவுகளினடிப்படையில் இயக்கத்தை வழிநடத்தவுமானப் பணிகளை மாநிலச் செயற்குழு செய்யும்.

4. மாநிலச் செயற்குழுவின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினரின் ஒப்புதலோடு, இயக்கத்திற்கு எதிரான வகையில் சட்ட விதிமுறைகள் மீறும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மீது மாநிலச் செயற்குழு ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கும். அத்துடன், மாவட்ட அளவில் எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைகளின் மேல்முறையீட்டுக் குழுவாகவும் மாநிலச் செயற்குழு செயல்படும்.

5. மாநிலச் செயற்குழுவின் ஒழுங்கு நடவடிக்கையினாலோ அல்லது வேறு காரணங்களாலோ காலியாகும் இடங்களுக்கு உரிய உறுப்பினர்களை மாநிலச் செயற்குழுத் தெரிவு செய்யும்.

6. வழக்கமான மாநிலச் செயற்குழு கூடும் ஒவ்வொரு முறையும், மாநிலப் பொருளாளர் முன்வைக்கும் வரவு, செலவு அறிக்கைகளை மாநிலச் செயற்குழு ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கும்.

7. இயக்கத்தின் மாநில அளவிலான அரசியல் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் ஆகியவற்றுக்கான செயல் திட்டங்களை மாநிலச் செயற்குழு வரையறுக்கும்.

விதி 1: மாநிலச் செயற்குழுவை நடத்துவதற்கு, செயற்குழுவின் மொத்த
உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பங்கேற்க வேண்டும்.
இவ்வெண்ணிக்கைக்குக் குறைவாக இருப்பின், முகாமையான
முடிவுகள் மற்றும் தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது.

விதி 2: வழக்கமாகக் கூட்டப்படும் மாநிலச் செயற்குழுவின் கூட்டத்திற்கான அறிவிப்பைப் பத்து நாட்களுக்கு முன்னதாகவும், இன்றியமையாதச் சூழல்களில் கூட்டப்படும் மாநிலச் செயற்குழுவின் கூட்டத்திற்கான அறிவிப்பை ஐந்து நாட்களுக்கு முன்னதாகவும் மாநிலச் செயற்குழு உறுப்பினர்களுக்கு மாநில அமைப்புச் செயலாளர் தெரியப்படுத்த வேண்டும்.

விதி 3: தவிர்க்கமுடியாதக் காரணங்களால் மாநிலச் செயற்குழுக் கூட்டங்களில் கலந்து கொள்ள இயலாதவர்கள் அதற்கானத் தகவலை மாநிலச் செயற்குழுக் கூட்டத்திற்கு முன்னதாகவோ அல்லது கூட்டத்தின் போதோ மாநில அமைப்புச் செயலாளருக்குத் தெரிவிக்க வேண்டும். அல்லது கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாமைக்கான விளக்கத்தை மாநிலச் செயற்குழுக்கூட்டம் நடைபெற்ற ஏழு நாட்களுக்குள் மாநில அமைப்புச் செயலாளரிடம் எழுத்தில் வழங்க வேண்டும்.

விதி 4: 1. மாநிலச் செயற்குழுக் கூட்டத்திற்குக் குறித்த நேரத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவர்.

2. மாநிலச் செயற்குழுக்கூட்டத்தில் தொடர்ந்து மூன்று முறை பங்கேற்காதவர்கள் மாநிலச் செயற்குழு உறுப்பினர் தகுதியைத் தானாகவே இழந்து விடுவர். அத்துடன் அவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கான நடைமுறைகளுக்கும் ஆளாவர்.

விதி 5: மாநிலச் செயற்குழுவின் நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக
'நிகழ்க் குறிப்பேட்டில்' பதிவு செய்யப்பட வேண்டும். 'வருகைப் பதிவேட்டையும்' உறுப்பினர்கள் ஒப்படைக்கும் செயலறிக்கைகளுக்கான கோப்புகளையும் மாநிலச் செயற்குழுக் கையாள வேண்டும்.

விதி 6: 1. மாநிலச் செயற்குழு கூடும் ஒவ்வொரு முறையும், அதற்கு முன்னதாக நடைபெற்ற மாநிலச் செயற்குழுவின் நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் குறித்துச்சுருக்க அறிக்கையினை மாநில அமைப்புச் செயலாளர் செயற்குழுவின் மீள்பார்வைக்கு முன்வைக்க வேண்டும்.

2. மாநில அமைப்புச் செயலாளர் உட்பட மாநிலச் செயற்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும், வழக்கமாகக் கூட்டப்படும் ஒவ்வொரு மாநிலச் செயற்குழுவிலும், இரண்டு மாநிலச் யெற்குழுவின் கூட்டங்களுக்கு இடைப்பட்டக் காலத்திற்குரியச் செயலறிக்கை களையும்,வரவு - செலவு அறிக்கைகளையும் மாநிலச் செயற்குழுவில் ஒப்படைக்க வேண்டும் தவறினால், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவர்.

3. மாவட்ட அளவில் நடைபெறும் நிகழ்ச்சிகள் தொடர்பான புகைப்படங்கள், துண்டறிக்கைள், ஒட்டிகள், ஒலி-ஒளி நாடாக்கள், செய்தி நறுக்குகள் மற்றும் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் மாவட்ட அமைப்புச் செயலாளர்கள் மாநிலச் செயற்குழுவில் ஒப்படைக்க வேண்டும்.

4. மாநிலச் செயற்குழுவின் வழிகாட்டுதலின்படி, ஒருங்கிணைக்கப்படும் மாநாடுகள், கருத்தரங்குகள், பேரணிகள், போராட்டங்கள் மற்றும் பிற பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கான வரவு - செலவு அறிக்கைகளை தொடர்புடைய பொறுப்பாளர்கள் பதினைந்து நாட்களுக்குள் பொதுச் செயலாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.

5. மாநிலப் பொதுக்குழு, மாநிலச் செயற்குழு மற்றும் சிறப்பு அமர்வுக்கான வரவு - செலவு அறிக்கைகளை அதற்கடுத்துக் கூடுகிற மாநிலச் செயற்குழுவில் பொருளாளர் ஒப்படைக்க வேண்டும்.

உறுப்பு எண் 9: மாவட்டப் பொதுக்குழு


ஒருங்கிணைந்த மாவட்ட அளவில் உயர்நிலை அதிகாரங்களைக் கொண்ட இப்பொதுக்குழு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மாவட்ட அமைப்புச் செயலாளரின் தலைமையில் மாநில அமைப்புச் செயலாளர் அல்லது மாநில பொறுப்பாளர் முன்னிலையில் கூடும்.

இடைப்பட்டக் காலங்களில் தேவையினடிப்படையில் மாநில அமைப்புச் செயலாளரின் ஒப்புதலோடு மாவட்ட அமைப்புச் செயலாளர் மாவட்டச் சிறப்புப் பொதுக்குழுவைக் கூட்டலாம். அல்லது, மாவட்டச் செயற்குழுவின் வழிகாட்டுதலின் அடிப்படையிலோ, மாவட்டப் பொதுக்குழுவின் உறுப்பினர்களில் மூன்றிலொரு பங்கினர் கையெழுத்திட்டுக் கேட்டுக் கொள்வதன் அடிப்படையிலோ மாவட்டச் சிறப்புப் பொதுக்குழுவைக் கூட்டலாம்.

பிரிவு 1: மாவட்டப் பொதுக்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள்

1. ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்கப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்கள்.

2. ஒன்றியம், நகரம், நகரியம், பெருநகரம் மற்றும் மாநகரப் பகுதி பொறுப்பாளர்கள்.

3. மாவட்ட அளவில் தெரிவு செய்யப்படும் அல்லது தேர்ந்தெடுக்கப்படும் மாநிலப் பொதுக்குழு மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள்.

4. அணிகள் மற்றும் துணைநிலை அமைப்புகளின் மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர்கள்.

5. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஒன்றிய, மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்.

6. முகாம் செயலாளர்கள்

7. மாநில அமைப்புச் செயலாளரின் ஒப்புதல் பெற்ற சிறப்பு அழைப்பாளர்கள்.
பிரிவு 2: மாவட்டப் பொதுக்குழுவிற்கான இடம், நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை கூட்டம் நடத்துவதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்னதாக மாவட்ட அமைப்புச் செயலாளர் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

பிரிவு 3: மாவட்டப் பொதுக்குழுவின் பணிகள்

1. பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் செயற்குழுக்களால் முன் வைக்கப்படுகின்ற இயக்கத்தின் செயலறிக்கைகள், இயக்கத்தொடர்பான பிற அறிக்கைகள், செயல்திட்டங்கள் முதலியன குறித்துத் திறனாய்வு செய்தல் மற்றும் அவை மீதான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

2. மூன்றாண்டுகளுக்கொருமுறை மாவட்டப் பொறுப்பாளர்களாக மாவட்ட அமைப்புச் செயலாளர்கள் ஒருவர், பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கான செயலாளர்கள், துணைச்செயலாளர்கள் மூவர், நிதிச்செயலாளர் ஆகியோரையும், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் (பிரதிநிதிகள்) ஆகியோரையும் தெரிவு அல்லது தேர்வு செய்தல்.

3. செயற்குழுக்கள் முன்வைக்கும் மூன்றாண்டுகளுக்கான செயல்திட்டங்களை ஆய்வு செய்து ஒப்புதல் அளித்தல்.

4. தணிக்கைக் குழுவின் அறிக்கையைத் திறனாய்வு செய்து ஒப்புதல் அளித்தல்.

5. சிறப்புப் பொதுக்குழுவில் காலியாகவுள்ள இடங்களுக்கு பொறுப்பாளர்கள் நிரப்புதல் அல்லது நிரப்பியதற்கு ஒப்புதல் அளித்தல்.

விதி 1: மாவட்டப் பொதுக்குழுவின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பங்கேற்க வேண்டும். அதற்குக் குறைவாக இருப்பின், அக்கூட்டத்தில் முகாமையான முடிவுகள் எடுக்கவோ அல்லது தீர்மானங்களை நிறைவேற்றவோ கூடாது.

விதி 2: மாவட்டப் பொதுக்குழு நடைபெறும் இடம், நாள், நேரம் மற்றும் கூட்டத்திற்கான நோக்கங்கள் ஆகியவற்றை, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் ஒருமாதத்திற்கு முன்னதாக தெரியப்படுத்த வேண்டும்.

உறுப்பு எண் 10 : மாவட்டச் செயற்குழுக்கள்


மேலமைப்புகளின் வழிகாட்டுதல்கள், மாவட்ட பொதுக்குழுவின் முடிவுகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தவும், பிரிக்கப்பட்ட மாவட்ட அளவில் எழும் அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ப முடிவுகளை மேற்கொள்ளவும், இயக்கத்தை வழிநடத்தவும், அதிகாரம் கொண்ட குழுவே மாவட்ட செயற்குழுவாகும்.

 இச்செயற்குழு மூன்று மாதங்களுக்கொருமுறை மாவட்டச் செயலாளரின் தலைமையில், மாவட்ட அமைப்புச் செயலாளரின் முன்னிலையில் கூடும். தேவையையொட்டி, மாவட்டச் செயலாளர் மாவட்ட அமைப்புச் செயலாளரின் அனுமதி பெற்றோ அல்லது மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கையெழுத்திட்டுக் கேட்டுக் கொள்வதன் அடிப்படைகிலோ இடைப்பட்டக் காலங்களில் சிறப்புச் செயற்குழு கூட்டப்படும்.


பிரிவு 1: மாவட்ட செயற்குழுவின் பணிகள்

1. மேலமைப்புகளின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஒருங்கிணைந்த மாவட்டப் பொதுக்குழுவின் முடிவுகள் அனைத்தையும் செயற்குழு நடைமுறைப்படுத்தும்.

2. இயக்கத்தின் மாவட்ட அளவிலான செயலறிக்கைகள், இயக்கத்தொடர்பான பிற அறிக்கைகள் மற்றும் செயல்திட்டங்கள் முதலியவற்றை திறனாய்வுக்கும், கலந்தாய்வுக்கும் ஒவ்வொரு பொதுக்குழுவிலும், செயற்குழு முன்வைக்கும்.

3. மாவட்ட அளவிலான அரசியல் சூழல்கள் மற்றும் இயக்கத் தொடர்பானச் சிக்கல்கள் குறித்து அவ்வப்போது கலந்தாய்வுகள் செய்யவும், முடிவுகள் எடுக்கவும், அம்முடிவுகளினடிப்படையில் இயக்கத்தை வழிநடத்தவுமானப் பணிகளை செயற்குழு செய்யும்.

4. இயக்கத்திற்கு எதிராகச் செயல்படுகிற, சட்ட விதிமுறைகளை மீறுகிற மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் மீது மாவட்டச் செயற்குழுவின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினரின் ஒப்புதலோடு செயற்குழு ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கும்.

5. செயற்குழுவின் ஒழுங்கு நடவடிக்கையினாலோ அல்லது வேறு காரணங்களாலோ காலியாகும் இடங்களுக்கு உரிய உறுப்பினர்களை செயற்குழுத் தெரிவு செய்யும்.

6. வழக்கமான மாவட்ட செயற்குழுவில், நிதிச் செயலாளர் முன்வைக்கும் வரவு, செலவு அறிக்கைகளை செயற்குழு ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கும்.

7. மாவட்ட அளவிலான அரசியல் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்கான செயல் திட்டங்களை செயற்குழு வரையறுக்கும்.

8. இயக்கத்தின் அதிகாரப+ர்வமான ஏடுகள், ஒலி-ஒளிப்பேழைகள் மற்றும் பிற வெளியீடுகள் ஆகியவற்றின் மூலம் பொதுமக்களிடையே கொள்கைகளைப் பரப்பிடவும், ஆதரவை பெருக்கிடவும் தேவையான செயல்திட்டங்களை மாவட்ட செயற்குழு வரையறுக்கும்.

பிரிவு 2: செயற்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள்
1. மாவட்ட அமைப்புச் செயலாளர்

2. மாவட்டச் செயலாளர், துணைச் செயலாளர்கள் மூவர் மற்றும் நிதிச் செயலாளர்.

3. மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள்.

4. மாநில அமைப்புக்கான செயற்குழு உறுப்பினர்கள் (மாநிலப் பிரதிநிதிகள்)

5. மாவட்ட அளவிலான அணிகள் மற்றும் துணைநிலை அமைப்புகளின் செயலாளர்கள்.

6. மாவட்ட அளவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

7. மாவட்ட அமைப்புச் செயலாளரின் ஒப்புதலோடு மாவட்டச் செயலாளரின் அனுமதி பெற்ற சிறப்பு அழைப்பாளர்கள்.


விதி 1: மாவட்டச் செயற்குழுவை நடத்துவதற்கு, செயற்குழுவின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பங்கேற்க வேண்டும். இவ்வெண்ணிக்கைக்குக் குறைவாக இருப்பின், அக்கூட்டத்தில் முகாமையான முடிவுகளை எடுக்கவோ அல்லது தீர்மானங்களை நிறைவேற்றவோ கூடாது.

விதி 2: வழக்கமாகக் கூட்டப்படும மாவட்டச் செயற்குழுவினர் கூட்டத்திற்கான அறிவிப்பை ஏழு நாட்களுக்கு முன்னதாகவும், இன்றியமையாதச் சூழல்களில் கூட்டப்படும் மாவட்டச் செயற்குழுவின் கூட்டத்திற்கான அறிவிப்பை மூன்று நாட்களுக்கு முன்னதாகவும், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களுக்கு மாவட்டச் செயலாளர் தெரியப்படுத்த வேண்டும்.

விதி 3: தவிர்க்கமுடியாதக் காரணங்களால் மாவட்டச் செயற்குழுக் கூட்டங்களில் கலந்து கொள்ள இயலாதவர்கள் அதற்கானத் தகவலை மாவட்டச் செயற்குழுக் கூட்டத்திற்கு முன்னதாகவோ அல்லது கூட்டத்தின்போதோ மாவட்டச் செயலாளருக்குத் தெரிவிக்க வேண்டும். அல்லது கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாமைக்கான விளக்கத்தை மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்ற ஏழு நாட்களுக்குள் மாவட்டச் செயலாளரிடம் எழுத்தில் வழங்க வேண்டும்.

விதி 4: 1. மாவட்டச் செயற்குழுக் கூட்டத்திற்குக் குறித்த நேரத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவர்.
2. மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் தொடர்ந்து மூன்றுமுறை பங்கேற்காதவர்கள் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தகுதியைத் தானாதவே இழந்து விடுவர். அத்துடன் அவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கான நடைமுறைகளுக்கும் ஆளாவர்.

விதி 5: மாவட்டச் செயற்குழுவின் நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக 'நிகழ்க்குறிப்பேட்டில்' பதிவு செய்யப்பட வேண்டும். மாவட்டச் செயற்குழுவில் பங்கேற்போர் கையொப்பமிடும் 'வருகைப் பதிவேட்டையும்', மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஒப்படைக்கும் செயலறிக்கைகளுக்கான 'கோப்புகளையும்' மாவட்டச் செயற்குழுக் கையாள வேண்டும்.

விதி 6: 1. மாவட்டச் செயற்குழு கூடும் ஒவ்வொரு முறையும், அதற்கு முன்னதாக நடைபெற்ற மாவட்டச் செயற்குழுவின் நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் குறித்தச் சுருக்க அறிக்கையினை மாவட்டச் செயலாளர் செயற்குழுவின் மீள்பார்வைக்கு முன்வைக்க வேண்டும்.

2. மாவட்டச் செயலாளர் உட்பட மாவட்டச் செயற்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும், வழக்கமாகக் கூட்டப்படும்
ஒவ்வொரு மாவட்டச் செயற்குழுவிலும், செயற்குழுவின் இரண்டு கூட்டங்களுக்கு இடைப்பட்டக் காலத்திற்குரியச் செயலறிக்கைகளையும், வரவு - செலவு அறிக்கைகளையும் மாவட்டச் செயற்குழுவில் ஒப்படைக்க வேண்டும். தவறினால், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவர்.

3. தேவையெனில், மாவட்ட அமைப்புச் செயலாளர், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அணிகள், துணைநிலை அமைப்புகளின் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டலாம்.

4. தேவையெனில், மாவட்டச் செயலாளர் வட்டார அமைப்புகளின் செயலாளர்கள் மற்றும் அணிகள், துணைநிலை அமைப்புகளின் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டலாம்.

5. மாவட்ட அளவில் நடைபெறும் நிகழ்ச்சிகள் தொடர்பான புகைப்படங்கள், துண்டறிக்கைகள், ஒட்டிகள், ஒலி - ஒளி நாடாக்கள், செய்தி நறுக்குகள் மற்றும் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் மாவட்டச் செயலாளர் மாவட்ட அமைப்புச் செயலாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.

6. மேலமைப்புகளின் வழிகாட்டுதல் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்படும் அரசியல், பண்பாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் பிற பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கான வரவு - செலவு அறிக்கைகளை தொடர்புடைய பொறுப்பாளர்கள் பதினைந்து நாட்களுக்குள் மாவட்டச் செயலாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.

உறுப்பு எண் 11: வட்டார அமைப்புகள்
ஒன்றியம் நகரம், நகரியம் மற்றும் மாநகங்களிலும், பெருநகரங்களிலும் உள்ள பகுதிகள் ஆகிய எல்லைகளுக்குள் கட்டமைக்கப்படும் அமைப்புகளே வட்டார அமைப்புகளாகும்.

ஓன்றிய அளவில் பதினைந்துக்கும் மேற்பட்ட முகாம்களைக் கொண்ட அமைப்பே ஒன்றிய அமைப்பாகவும், நகரம் மற்றும் நகரியம் அளவில் ஐந்திற்கும் மேற்பட்ட முகாம்களைக் கொண்ட அமைப்புகளே நகரம் மற்றும் நகரிய அமைப்புகளாகவும், சென்னை, மும்பை, பெங்க@ர் போன்ற பெருநகரங்களில் உள்ள பகுதி அளவில் இருபதுக்கும் மேற்பட்ட முகாம்களைக் கொண்ட அமைப்பே பெருநகரப் பகுதி அமைப்பாகவும் திருச்சி, கோவை, சேலம், மதுரை, நெல்லை போன்ற மாநகரங்களில் உள்ள பகுதி அளவில் பத்துக்கும் மேற்பட்ட முகாம்களைக் கொண்ட அமைப்பே மாநகரப்பகுதி அமைப்பாகவும் ஏற்கப்படும். பெருநகரப்பகுதி என்பது சட்டமன்றத் தொகுதிப் பரப்பைக் குறிப்பதாகும். மாநகரப்பகுதி என்பது மாநகராட்சி நிர்வாகத்துக்குட்பட்ட மண்டலப் (டிவிசன்) பரப்பைக் குறிப்பதாகும்.

பிரிவு 1: பொதுக்குழு (ஒன்றியம், நகரம், நகரியம் மற்றும் மாநகர, பெருநகரப் பகுதிகள்)
1. வட்டார அளவிலான உயர்நிலை அதிகாரம் கொண்ட இப்பொதுக்குழு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை வட்டார அமைப்புகளின் அந்தந்த செயலாளர் தலைமையில் மாவட்ட அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் ஆகியோர் முன்னிலையில் கூடும்.

2. இடைப்பட்டக் காலங்களில் தேவையையொட்டி, மாவட்டச் செயலாளரின் வழிகாட்டுதல் அல்லது ஒப்புதலின் அடிப்படையிலோ, வட்டார அமைப்புப் பொதுக் குழுவின் உறுப்பினர்களில் மூன்றிலொரு பங்கினர் கையைழுத்திட்டுக் கேட்டுக் கொளவதன் அடிப்படையிலோ சிறப்புப் பொதுக்குழுவைக் கூட்டலாம்.

3. பொதுக்குழுவில் மொத்த உறுப்பினர்களில் மூன்றிலொரு பங்கினர் பங்கேற்க வேண்டும். இவ்வெண்ணிக்கைக்குக் குறைவாயிருப்பின், அக்கூட்டத்தில் முகாமையான முடிவுகளை எடுக்கவோ, தீர்மானங்களை நிறைவேற்றவோ கூடாது.

4. பொதுக்குழுவிற்கான இடம், நாள் மற்றும் நேரம் ஆகியவற்றைக் கூட்டம் நடத்துவதற்குப் பதினைந்து நாட்களுக்கு முன்னதாக செயலாளர் உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.


1. செயலாளர் முன்வைக்கும் செயலறிக்கைகள், இயக்கத் தொடர்பான பிற அறிக்கைகள் மற்றும் நிதிச் செயலாளர் முன்வைக்கும் வரவு-செலவு அறிக்கை ஆகியவற்றைத் திறனாய்வு செய்து ஒப்புதல் அளித்தல்.

2. செயற்குழு முன்வைக்கும் மூன்றாண்டுகளுக்கானச் செயல்திட்டத்தை ஆய்வு செய்து ஒப்புதல் அளித்தல்.

3. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை வட்டார அமைப்புகளின் பொறுப்பாளர்களாக, செயலாளர் ஒருவர், துணைச்செயலாளர்கள் இருவர் அல்லது மூவர், நிதிச்செயலாளர் ஒருவர் ஆகியோரையும், வட்டார அமைப்புகளின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரையும் தெரிவு அல்லது தேர்வு செய்தல்.

4. சிறப்புப் பொதுக்குழுவில் காலியாகவுள்ள இடங்களுக்கு பொறுப்பாளர்களை நிரப்புதல் அல்லது நிரப்பியதற்கு ஒப்புதல் அளித்தல்.
விதி 1: ஐந்து முகாம்களுக்கு ஒரு உறுப்பினர் வீதம் வட்டார அமைப்புகளுக்கான செயற்குழு உறுப்பினர்களும், ஒவ்வொரு வட்டார அமைப்புகளிலிருந்து இரண்டு உறுப்பினர்கள் வீதம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களும் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர்.

பிரிவு 3: பொதுக்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள்.

1. வட்டார அமைப்புக் குழுவின் பொறுப்பாளர்கள்.

2. வட்டார அமைப்புச் செயற்குழு உறுப்பினர்கள்.

3. முகாம் பொறுப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்.

4. துணைநிலை அமைப்புகளின் முகாம் செயலாளர்கள் மற்றும் வட்டார அளவிலான பொறுப்பாளர்கள்.

5. அணிகளின் வட்டாரப் பொறுப்பாளர்கள்.

6. வட்டார அமைப்பிலிருந்து மாவட்ட அமைப்பிற்குத் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள்.

7. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள்.

8. மாவட்ட அமைப்புச் செயலாளரின் ஒப்புதல் பெற்ற சிறப்பு அழைப்பாளர்கள்.

பிரிவு 4: செயற்குழு ஒன்றியம், நகரம், நகரியம் மற்றும் மாநகர பெருநகரப் பகுதிகள்
1. மேலமைப்புகளின் வழிகாட்டுதல்கள், வட்டார அமைப்புகளின் பொதுக்குழுவின் முடிவுகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தவும், அவ்வப்போது வட்டார அளவில் எழும் அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ப முடிவுகளை மேற்கொள்ளவும், இயக்கத்தை வழிநடத்தவும், அதிகாரம் கொண்ட குழுவே வட்டார அமைப்புகளின் செயற்குழுவாகும்.

2. இச்செயற்குழு இரண்டு மாதங்களுக்கொருமுறைச் செயலாளரின் தலைமையில் கூடும். தேவையையொட்டி, மாவட்டச் செயலாளரின் அனுமதியோடு செயலாளரோ அல்லது செயற்குழு உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கையெழுத்திட்டுக் கேட்டுக் கொள்வதன் அடிப்படையிலோ இடைப்பட்டக் காலங்களில் சிறப்புச் செயற்குழு கூட்டப்படும்.

பிரிவு 5: செயற்குழுவின் பணிகள்
1. மேலமைப்புகளின் வழிகாட்டுதல் மற்றும் பொதுக்குழுவின் முடிவுகள் அனைத்தையும் செயற்குழு நடைமுறைப்படுத்தும்.

2. இயக்கத்தின் வட்டார அளவிலான செயலறிக்கைகள், இயக்கத் தொடர்பான பிற அறிக்கைகள் மற்றும் செயல்திட்டங்கள் முதலியவற்றை திறனாய்வுக்கும், கலந்தாய்வுக்கும் ஒவ்வொருப் பொதுக்குழுவிலும், செயற்குழு முன்வைக்கும்.

3. அரசியல் சூழல்கள் மற்றும் இயக்கத் தொடர்பானச் சிக்கல்கள் குறித்து அவ்வப்போது கலந்தாய்வுகள் செய்யவும், முடிவுகள் எடுக்கவும், அம்முடிவுகளினடிப்படையில் இயக்கத்தை வழி நடத்தவுமானப் பணிகளை செயற்குழு செய்யவும்.

4. இயக்கத்திற்கு எதிராகச் செயல்படுகிற, சட்ட விதிமுறைகளை மீறுகிற செயற்குழு உறுப்பினர்கள் மீது செயற்குழுவின் மொத்த செயற்குழு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்.

5. செயற்குழுவின் ஒழுங்கு நடவடிக்கையினாலோ அல்லது வேறு காரணங்களாலோ காலியாகும் இடங்களுக்கு உரிய உறுப்பினர்களை செயற்குழுத் தெரிவு செய்யும்.

6. வழக்கமான செயற்குழு கூடும் ஒவ்வொரு முறையும், நிதிச் செயலாளர் முன் வைக்கும் வரவு, செலவு அறிக்கைகளை செயற்குழு ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கும்

7. வட்டார அளவிலான அரசியல் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்கான செயல் திட்டங்களை செயற்குழு வரையறுக்கும்.

8. இயக்கத்தின் அதிகாரபூர்வமான ஏடுகள், ஒலி-ஒளிப்பேழைகள் மற்றும் பிற வெளியீடுகள் ஆகியவற்றின் மூலம் பொதுமக்களிடையே கொள்கைகளைப் பரப்பிடவும், ஆதரவை பெருக்கிடவும் தேவையான செயல்திட்டங்களை செயற்குழு வரையறுக்கும்.

பிரிவு 6: செயற்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள்

1. செயலாளர், துணைச் செயலாளர்கள் இருவர் அல்லது மூவர், நிதிச் செயலாளர்
2. செயற்குழு உறுப்பினர்கள்
3. மாவட்ட அமைப்புக்கான செயற்குழு உறுப்பினர்கள் மாவட்டப் பிரதிநிதிகள்
4. வட்டார அளவிலான அணிகள் மற்றும் துணைநிலை அமைப்புகளின் செயலாளர்கள்.
5. வட்டார அளவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள்.
6. மாவட்டச் செயலாளரின் ஒப்புதலோடு செயலாளரின் அனுமதி பெற்ற சிறப்பு அழைப்பாளர்கள்.

விதி 1: செயற்குழுவை நடத்துவதற்கு, செயற்குழுவின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பங்கேற்க வேண்டும். இவ்வெண்ணிக்கைக்குக் குறைவாக இருப்பின், அக்கூட்டத்தில் முகாமையான முடிவுகளை எடுக்கவோ அல்லது தீர்மானங்களை நிறைவேற்றவோ கூடாது.

விதி 2: வழக்கமாகக் கூட்டப்படும் செயற்குழுவின் கூட்டத்திற்கான அறிவிப்பை ஏழு நாட்களுக்கு முன்னதாகவும், இன்றியமையாதச் சூழல்களில் கூட்டப்படும் செயற்குழுவின் கூட்டத்திற்கான அறிவிப்பை மூன்று நாட்களுக்கு முன்னதாகவும், செயற்குழு உறுப்பினர்களுக்குச் செயலாளர் தெரியப்படுத்த வேண்டும்.


விதி 3: தவிர்க்கமுடியாதக் காரணங்களால் செயற்குழுக் கூட்டங்களில் கலந்து கொள்ள இயலாதவர்கள் அதற்கானத் தகவலைச் செயற்குழுக் கூட்டத்திற்கு முன்னதாகவோ அல்லது கூட்டத்தின்போதோ செயலாளருக்குத் தெரிவிக்க வேண்டும் அல்லது கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாமைக்கான விளக்கத்தைச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்ற ஏழு நாட்களுக்குள் செயலாளரிடம் எழுத்தில் வழங்க வேண்டும்.


விதி 4: 1. செயற்குழுக் கூட்டத்திற்குக் குறித்த நேரத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவர்.

2. செயற்குழுக்கூட்டத்தில் தொடர்ந்து மூன்றுமுறை பங்கேற்காதவர்கள் செயற்குழு உறுப்பினர் தகுதியைத் தானாகவே இழந்து விடுவர். அத்துடன் அவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கான நடைமுறைகளுக்கும் ஆளாவர்.


விதி 5: செயற்குழுவின் நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக நிகழ்க் குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும். செயற்குழுவில் செயற்குழு உறுப்பினர்கள் ஒப்படைக்கும் செயலறிக்கைகளுக்கான கோப்புகளையும் செயற்குழுக் கையாள வேண்டும்.

விதி 6:1. செயற்குழு கூடும் ஒவ்வொரு முறையும், அதற்கு முன்னதாக நடைபெற்ற செயற்குழுவின் நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் குறித்துச் சுருக்க அறிக்கையினை செயலாளர் செயற்குழுவின் மீள்பார்வைக்கு முன்வைக்க வேண்டும்.

2. செயலாளர் உட்பட செயற்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் வழக்கமாகக் கூட்டப்படும் ஒவ்வொரு செயற்குழுவிலும், செயற்குழுவின் இரண்டு கூட்டங்களுக்கு இடைப்பட்டக் காலத்திற்குரியச் செயலறிக்கைகளையும், வரவு - செலவு அறிக்கைகளையும் செயற்குழுவில் ஒப்படைக்க வேண்டும். தவறினால், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவர்.

3. தேவையெனில், செயலாளர் மூலம் செயலாளர்களின் கூட்டத்தை
செயற்குழு முடிந்த ஏழு நாட்களுக்குள் கூட்டலாம்.

4. வட்டார அளவில் நடைபெறும் நிகழ்ச்சிகள் தொடர்பான புகைப்படங்கள், துண்டறிக்கைகள், ஒட்டிகள், ஒலி - ஒளி நாடாக்கள், செய்தி நறுக்குகள் மற்றும் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் செயலாளர் மாவட்டச் செயற்குழுவில் ஒப்படைக்க வேண்டும்.

5. மேலமைப்புகளின் வழிகாட்டுதல் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்படும் அரசியல் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் பிற பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கான வரவு-செலவு அறிக்கைகளை தொடர்புடைய பொறுப்பாளர்கள் பதினைந்து நாட்களுக்குள் செயலாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.

உறுப்பு எண் 12: அடிப்படை அமைப்புக் குழு
குறைந்த அளவு இருபது உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்படும் குழு அடிப்படை அமைப்புக் குழுவாகும், இதில் பெண்களும் சமஅளவில் உறுப்பினர்களாக இடம் பெற வெண்டும். குறைந்த அளவு ஐந்து பெண்களாவது இருத்தல் வேண்டும். இந்த அடிப்படை அமைப்புக் குழுவானது முகாம் என்று அழைக்கப்படும்.

பிரிவு 1: முகாம் பொதுக்குழு
1. முகாம் அளவிலான உயர்நிலை அதிகாரம் கொண்டதே முகாம் பொதுக்குழுவாகும். இப்பொதுக்குழு ஆண்டுக்கு ஒருமுறை முகாம் செயலாளர் தலைமையில் முகாமிற்கு அடுத்த மேலமைப்புச் செயலாளர் அல்லது அவர் சார்பில் ஒரு பொறுப்பாளர் முன்னிலையில் கூடும்.

2. இடைப்பட்டக் காலங்களில் தேவையையெட்டி, முகாமிற்கு அடுத்த மேலமைப்புச் செயலாளரின் வழிகாட்டுதல் அல்லது ஒப்புதலின் அடிப்படையிலோ, முகாமின் உறுப்பினர்களில் மூன்றிலொரு பங்கினர் கையெழுத்திட்டுக் கேட்டுக் கொள்வதன் அடிப்படையிலோ சிறப்புப் பொதுக்குழுவைக் கூட்டலாம்.

3. பொதுக்குழுவின் மொத்த உறுப்பினர்களில் மூன்றிலொரு பங்கினர் பங்கேற்க வேண்டும். இவ்வெண்ணிக்கைக்குக் குறைவாயிருப்பின், முகாமையான முடிவுகளை எடுக்கவோ, தீர்மானங்களை நிறைவேற்றவோ கூடாது.

4. பொதுக்குழுவிற்கான இடம், நாள் மற்றும் நேரம் ஆகியவற்றைக் கூட்டம் நடத்துவதற்கு ஏழு நாட்களுக்கு முன்னதாக முகாம் செயலாளர் முகாம் உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

பிரிவு 2: பொதுக்குழுவின் பணிகள்
1. முகாம் செயலாளர் முன்வைக்கும் ஆண்டறிக்கை மற்றும் நிதிச் செயலாளர் முன்வைக்கும் வரவு-செலவு அறிக்கை ஆகியவற்றைத் திறனாய்வு செய்து ஒப்புதல் அளித்தல்.

 2. முகாம் செயற்குழு முன் வைக்கும் ஆண்டுச் செயல் திட்டத்தை ஆய்வு செய்து ஒப்புதல் அளித்தல்.

3. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முகாம் பொறுப்பாளர்களாக, முகாம் செயலாளர் ஒருவர், துணைச்செயலாளர்கள் இருவர் அல்லது மூவர், நிதிச்செயலாளர் ஒருவர் ஆகியோரையும், முகாம் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் வட்டார அமைப்புக்கான செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரையும் தெரிவு அல்லது தேர்வு செய்தல்.


4. ஆண்டுக்கு ஒருமுறை கூடும் பொதுக்குழுவில் காலியாகவுள்ள இடங்களுக்கு பொறுப்பாளர்களை நிரப்புதல் அல்லது நிரப்பியதற்கு ஒப்புதல் அளித்தல்.

விதி 1: பொதுக்குழுவில் இடம் பெறும் உறுப்பினர்கள்
1. முகாம் பொறுப்பாளர்கள்
2. முகாம் செயற்குழு உறுப்பினர்கள்
3. முகாமிலுள்ள அனைத்து உறுப்பினர்கள்
4. துணைநிலை அமைப்புகளின் முகாம் பொறுப்பாளர்கள்
5. முகாமிற்கு அடுத்த மேலமைப்புச் செயலாளரின் ஒப்புதல் பெற்ற சிறப்பு அழைப்பாளர்கள்.

பிரிவு 4: முகாம் செயற்குழு

1. முகாமிற்கு அடுத்த மேலமைப்புகளின் வழிகாட்டுதல்கள், முகாம் பொதுக்குழுவின் முடிவுகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தவும், அவ்வப்போது முகாம் அளவில் எழும் அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ப முடிவுகளை மேற்கொள்ளவும், இயக்கத்தை வழிநடத்தவும், அதிகாரம் கொண்ட குழுவே முகாம் செயற்குழுவாகும்.

2. இச்செயற்குழு திங்களுக்கொருமுறை முகாம் செயலாளரின் தலைமையில் கூடும். தேவையையொட்டி, மேலமைப்புச் செயலாளரின் அனுமதியோடு முகாம் செயலாளரோ அல்லது முகாம் செயற்குழு உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கையெழுத்திட்டுக் கேட்டுக் கொள்வதன் அடிப்படையிலோ இடைப்பட்டக் காலங்களில் சிறப்பு முகாம் செயற்குழு கூட்டப்படும்.


பிரிவு 5: முகாம் செயற்குழுவின் பணிகள்

1. மேலமைப்புகளின் வழிகாட்டுதல்கள், முகாம் பொதுக்குழுவின் முடிவுகள் அனைத்தையும் முகாம் செயற்குழு நடைமுறைப்படுத்தும்.

2. இயக்கத்தின் முகாம் அளவிலான செயலறிக்கைகள், இயக்கத் தொடர்பான பிற அறிக்கைகள் மற்றும் செயல்திட்டங்கள் முதலியவற்றை திறனாய்வுக்கும், கலந்தாய்வுக்கும் ஒவ்வொரு முகாம் பொதுக்குழுவிலும், முகாம் செயற்குழு முன்வைக்கும்.

3. அரசியல் சூழல்கள் மற்றும் இயக்கத் தொடர்பானச் சிக்கல்கள் குறித்து அவ்வப்போது கலந்தாய்வுகள் செய்யவும், முடிவுகள் எடுக்கவும், அம்முடிவுகளினபடிப்படையில் இயக்கத்தை வழிநடத்தவுமானப் பணிகள் முகாம் செயற்குழு செய்யும்.

விதி 1: பொதுக்குழுவில் இடம் பெறும் உறுப்பினர்கள்
1. முகாம் பொறுப்பாளர்கள்
2. முகாம் செயற்குழு உறுப்பினர்கள்
3. முகாமிலுள்ள அனைத்து உறுப்பினர்கள்
4. துணைநிலை அமைப்புகளின் முகாம் பொறுப்பாளர்கள்
5. முகாமிற்கு அடுத்த மேலமைப்புச் செயலாளரின் ஒப்புதல் பெற்ற சிறப்பு அழைப்பாளர்கள்.

பிரிவு 4: முகாம் செயற்குழு
1. முகாமிற்கு அடுத்த மேலமைப்புகளின் வழிகாட்டுதல்கள், முகாம் பொதுக்குழுவின் முடிவுகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தவும், அவ்வப்போது முகாம் அளவில் எழும் அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ப முடிவுகளை மேற்கொள்ளவும், இயக்கத்தை வழிநடத்தவும், அதிகாரம் கொண்ட குழுவே முகாம் செயற்குழுவாகும்.

2. இச்செயற்குழு திங்களுக்கொருமுறை முகாம் செயலாளரின் தலைமையில் கூடும். தேவையையொட்டி, மேலமைப்புச் செயலாளரின் அனுமதியோடு முகாம் செயலாளரோ அல்லது முகாம் செயற்குழு உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கையெழுத்திட்டுக் கேட்டுக் கொள்வதன் அடிப்படையிலோ இடைப்பட்டக் காலங்களில் சிறப்பு முகாம் செயற்குழு கூட்டப்படும்.

பிரிவு 5: முகாம் செயற்குழுவின் பணிகள்
1. மேலமைப்புகளின் வழிகாட்டுதல்கள், முகாம் பொதுக்குழுவின் முடிவுகள் அனைத்தையும் முகாம் செயற்குழு நடைமுறைப்படுத்தும்.

2. இயக்கத்தின் முகாம் அளவிலான செயலறிக்கைகள், இயக்கத் தொடர்பான பிற அறிக்கைகள் மற்றும் செயல்திட்டங்கள் முதலியவற்றை திறனாய்வுக்கும், கலந்தாய்வுக்கும் ஒவ்வொரு முகாம் பொதுக்குழுவிலும், முகாம் செயற்குழு முன்வைக்கும்.

3. அரசியல் சூழல்கள் மற்றும் இயக்கத் தொடர்பானச் சிக்கல்கள் குறித்து அவ்வப்போது கலந்தாய்வுகள் செய்யவும், முடிவுகள் எடுக்கவும், அம்முடிவுகளினபடிப்படையில் இயக்கத்தை வழிநடத்தவுமானப் பணிகள் முகாம் செயற்குழு செய்யும்.

விதி 3: தவிர்க்கமுடியாதக் காரணங்களால் முகாம் செயற்குழுக் கூட்டங்களில் கலந்து கொள்ள இயலாதவர்கள் அதற்கானத் தகவலை முகாம் செயற்குழுக் கூட்டத்திற்கு முன்னதாகவோ அல்லது கூட்டத்தின்போதோ முகாம் செயலாளருக்குத் தெரிவிக்க வேண்டும். அல்லது கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாமைக்கான விளக்கத்தை முகாம் செயற்குழு கூட்டம் நடைபெற்ற ஏழு நாட்களுக்குள் முகாம் செயலாளரிடம் எழுத்தில் வழங்க வேண்டும்.

விதி 4: 1. முகாம் செயற்குழுக் கூட்டத்திற்குக் குறித்த நேரத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவர்.
2. முகாம் செயற்குழுக் கூட்டத்தில் தொடர்ந்து மூன்று முறை பங்கேற்காதவர்கள் முகாம் செயற்குழு உறுப்பினர் தகுதியைத் தானாகவே இழந்து விடுவர். அத்துடன் அவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கான நடைமுறைகளுக்கும் ஆளாவர்.

விதி 5: முகாம் செயற்குழுவின் நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக நிகழ்க் குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும். முகாம் செயற்குழுவில் பங்கேற்போர் கையொப்பமிடும் வருகைப் பதிவேட்டையும் செயற்குழு உறுப்பினர்கள் ஒப்படைக்கும் செயலறிக்கைகளுக்கான கோப்புகளையும் முகாம் செயற்குழுக் கையாள வேண்டும்.

விதி 6:. 1. முகாம் செயற்குழு கூடும் ஒவ்வொரு முறையும், அதற்கு முன்னதாக நடைபெற்ற முகாம் செயற்குழுவின் நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் குறித்தச் சுருக்க அறிக்கையினை முகாம் செயலாளர் முகாம் செயற்குழுவின் மீள்பார்வைக்கு முன்வைக்க வேண்டும்.

2. முகாம் செயலாளர் உட்பட முகாம் செயற்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும், வழக்கமாகக் கூட்டப்படும் ஒவ்வொரு முகாம் செயற்குழுவிலும், முகாம் செயற்குழுவின் இரண்டு கூட்டங்களுக்கு இடைப்பட்டக் காலத்திற்குரியச் செயலறிக்கைகளையும், வரவு-செலவு அறிக்கைகளையும் முகாம் செயற்குழுவில் ஒப்படைக்க வேண்டும். தவறினால், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவர்.

3. முகாம் அளவில் நடைபெறும் நிகழ்ச்சிகள் தொடர்பான புகைப்படங்கள், துண்டறிக்கைகள், ஒட்டிகள், ஒலி - ஒளி நாடாக்கள், செய்தி நறுக்குகள் மற்றும் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் முகாம் செயலாளர் வட்டார அமைப்புச் செயற்குழுவில் ஒப்படைக்க வேண்டும்.

4. மேலமைப்புகளின் வழிகாட்டுதலின்படி, ஒருங்கிணைக்கப்படும் அரசியல் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் பிற பொதுநிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கான வரவு - செலவு அறிக்கைகளை தொடர்புடைய பொறுப்பாளர்கள் பதினைந்து நாட்களுக்குள் முகாம் செயலாளரிடம் ஒப்படைக்க வேண்டும்