மையங்கள்

தத்துவ மையம்

இயல்நிலை உண்மைகளை நோக்கியக் கருத்தியல்கள் என்னும் தத்துவங்கள், காலச் சூழல்களுக்கேற்ப மானுட வாழ்வியலில் நிலவும் பல்வேறு முரண்பாடுகளின் அடிப்படையில் அவ்வப்போது பரிணமிக்கின்றன. மதம், அரசியல், பொருளியல் போன்றத் தளங்களிலிருந்து உருவாகும் தத்துவங்கள் தனிமனிதனை அல்லது சமூகத்தை வழிநடத்திச் செல்வதில் ஆளுமைச் செலுத்துகின்றன.அத்தகையத் தத்துவங்களின் அடிப்படைகளையும், பின்னணிகளையும், அவற்றின் விளைவுகளையும் தொலைநோக்குப் பார்வையில் ஆராயவும், ஆதிக்கம், ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல் போன்றவற்றிலிருந்து தாழ்த்தப்பட்ட மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கேற்ற அம்பேத்கரியம் முதலான தத்துவங்களை அமைப்பு வழியில் முன்னெடுத்து, தத்துவத் தலைமையை நிலைநாட்டவும் இயக்கத்திற்கு உறுதுணையான வகையில் செயலாற்றுவதே தத்துவ மையத்தின் நோக்கமாகும் இம்மையம் தத்துவ மையச்செயலாளர் ஒருவர், துணைச் செயலாளர்கள் இருவர் உள்ளிட்ட குறைந்தது ஒன்பது உறுப்பினர்கள் கொண்ட குழுவாக இயங்கும்.


ஆவண மையம்

ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் விடுதலைக்கானப் பணிகளுக்கு உறுதுணையாக அமையும் வகையிலும், ஆய்வுகளுக்குப் பயன்படும் வகையிலும், சமூகம், அரசியல், பொருளியல், வரலாறு, மதம், தத்துவம் போன்றவை தொடர்பான நூல்கள், ஏடுகள், கல்வெட்டுப் பதிவுகள், ஒவியங்கள், சிற்பங்கள் மற்றும் இயக்கத்தின் செயல்பாடுகள் தொடர்பான ஆவணங்கள், ஒலி-ஒளி நாடாக்கள், குறுந்தகடுகள், புகைப்படங்கள், தேர்தல் ஆவணங்கள் முதலியவற்றின் கடந்தகால, நிகழ்காலப் பதிவுகளைத் தொகுப்பதும், பாதுகாப்பதும் ஆவண மையத்தின் நோக்கமாகும்.
இம்மையம், ஆவண மையச் செயலாளர் ஒருவர், துணை செயலாளர்கள் இருவர் உள்ளிட்ட குறைந்தது ஒன்பது உறுப்பினர்கள் கொண்ட குழுவாக இயங்கும்.
வெளியீட்டு மையம் 

இயக்கத்தின் கொள்கை மற்றும் கோட்பாடுகளைப் பரப்பும் வகையிலும், இயக்கச் செயல்பாடுகளை ஆவணங்களாகப் பதிவு செய்யும் வகையிலும், நூல்கள், நாளேடுகள், பருவகால இதழ்கள், குருந்தகடுகள், இணையத்தளங்கள் போன்றவற்றை வெளியிடுவதும், அவற்றுக்கான பதிப்பகம், வெளியீட்டகம், விற்பனையகம் முதலியவற்றைக் கட்டமைப்பதும் வெளியீட்டு மையத்தின் நோக்கமாகும். இம்மையம், வெளியீட்டு மையச் செயலாளர் ஒருவர், துணைச் செயலாளர்கள் இருவர் உள்ளிட்ட குறைந்தது ஐந்து உறுப்பினர்கள் கொண்ட குழுவாக இயங்கும்.

செய்தித் தொடர்பு மையம்

இயக்கத் தீர்மானங்கள் மற்றும் நிலைப்பாடுகள், அவ்வப்போது வெளியிடப்படும் பொதுச் செயலாளரின் அறிக்கைகள் மற்றும் முடிவுகள் போன்றவற்றைச் செய்தி ஊடகங்களின் வழியாக வெகுமக்களைச் சென்றடையச் செய்வது செய்தித் தொடர்பு மையத்தின் நோக்கமாகும்.

இம்மையம், செய்தித் தொடர்பாளர் ஒருவர், துணைச் செயலாளர் இருவர் உள்ளிட்ட மூவர் கொண்ட குழுவாக இயங்கும், மாநில, மாவட்ட அளவில் முறையே செய்தித் தொடர்பாளர்கள் செய்தித் தொடர்பு மையத்தின் உறுப்பினர்களாக இடம் பெறுவர்.துணைநிலை அமைப்புகள்
 
இயக்கத்தின் கொள்கைகள் மற்றும் குறிக்கோள்களின் அடிப்படையில், தாழ்த்தப்பட்டோருடன் பிற சமூகங்களைச் சார்ந்த உழைக்கும் மக்களையும் ஒருங்கிணைத்து அரசியல்படுத்தவும், அவர்களை அமைப்பாக்கவும், மகளிர், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் போன்ற வௌ;வேறுத் தளங்களில் கட்டமைக்கப்படும் தன்னதிகாரம் பெற்ற அமைப்புகளேத் துணைநிலை அமைப்புகளாகும்.

தேவையினடிப்படையில், இவ்வமைப்புகளுக்கான கொடி, சின்னம், கட்டமைப்பு, நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகள், மையப்பேரவையின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வரையறுக்கப்படும். ஒவ்வொரு துணைநிலை அமைப்புகளுக்குமான பொறுப்பாளர்கள் மையப்பேரவையின் வழிகாட்டுதலின்படி தெரிவு செய்யப்படுவர். இவர்களின் கணிசமான அளவில் மகளிர் இடம்பெற வேண்டும்.

மகளிர் விடுதலை இயக்கம்
 

சாதி, மதம் நிலவுடைமை, முதலாளித்துவம் மற்றும் வல்லரசியம் ஆகியவற்றின் அடிப்படையில் மகளிருக்கெதிராகத் திணிக்கப்படும் ஆணாதிக்க ஒடுக்குமுறைகள், இழிவுகள், வன்கொடுமைகள் மற்றும் சுரண்டல்களை ஒழிக்கவும், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் ஆகியவற்றில் மகளிருக்கான இடஒதுக்கீடு உரிமை, நிலம் மற்றும் குடும்பச் சொத்துக்களில் சம உரிமை, மறுமண உரிமை போன்ற உரிமைகளை வென்றெடுக்கவும், மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட நலன்களைப் பாதுகாக்கவும், சமூகம்,

பொருளாதாரம், பண்பாடு மற்றும் அரசியல் முதலிய அனைத்துத் தளங்களிலும் பாலினச் சமத்துவத்தை நிலைநாட்டவும், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற சமூகங்களைச் சார்ந்த மகளிரை ஒருங்கிணைத்து அமைப்பாக்குவதே மகளிர் விடுதலை இயக்கத்தின் நோக்கமாகும்.
 

1. இவ்வமைப்பானது, முகாம் அளவிலிருந்து மாநிலம் வரை விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் கட்டமைப்பைப் போன்றே கட்டமைக்கப்படும்.
 

2. இவ்வமைப்பை மாநில அளவில் மாநிலச் செயலாளர் ஒருவரும், துணைச்செயலாளர்கள் ஐவரும், நிதிச்செயலாளர் ஒருவரும்; பிரிக்கப்பட்ட மாவட்டம், வாட்டாரம், முகாம் அளவுகளில் முறையே செயலாளர் ஒருவரும், துணைச் செயலாளர்கள் இருவர் அல்லது மூவரும், நிதிச் செயலாளர் ஒருவரும் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர

 

தமிழக உழவர் இயக்கம்
 

சாதிய நிலவுடைமை, முதலாளித்துவம் மற்றும் வல்லரசிய மேலாதிக்கத்தின் அடிப்படையிலான வர்க்க ஒடுக்குமுறைகள், சுரண்டல்கள் ஆகியவற்றை ஒழிக்கவும், உழைப்புக்கேற்ற மற்றும் பாலினப் பாகுபாடற்ற ஊதியம், நிலம், நீர் மற்றும் இயற்கை வளங்கள் மீதான உரிமைகள். அரசுச் சொத்துக்களில் குத்தகை மற்றும் ஏல உரிமைகள் மற்றும் பணியில் பாதுகாப்புரிமைகள் போன்ற பல்வேறு உரிமைகளை வென்றெடுக்கவும், பஞ்சமி மற்றும் தரிசு நிலங்களை மீட்டெடுக்கவும், சிறு, குறு மற்றும் குத்தகை விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கவும், தாழ்த்தப்பட்ட மற்றும் பிறசமூகங்களைச் சார்ந்த உழைக்கும் விவசாயத் தொழிலாளர்கள், சிறு, குறு மற்றும் குத்தகை விவசாயிகளை ஒருங்கிணைத்து அமைப்பாக்குவதே விவசாய உழைப்பாளர் சங்கத்தின் நோக்கமாகும்.
 

1. இச்சங்கமானது, முகாம் அளவிலிருந்து மாநிலம் வரை விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் கட்டமைப்பைப் போன்றே கட்டமைக்கப்படும்.
 

2. இச்சங்கத்தை மாநில அளவில் மாநிலச் செயலாளர் ஒருவரும், துணைச்செயலாளர்கள் ஐவரும், நிதிச்செயலாளர் ஒருவரும்; பிரிக்கப்பட்ட மாவட்டம், வட்டாரம், முகாம் அளவுகளில் முறையே செயலாளர் ஒருவரும், துணைச் செயலாளர்கள் இருவர் அல்லது மூவரும், நிதிச் செயலாளர் ஒருவரும் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர்.

 

தொழிலாளர் விடுதலை முன்னணி
 

சாதியம், முதலாளித்துவம் மற்றும் வல்லரசிய மேலாதிக்கத்தின் அடிப்படையில் திணிக்கப்படும் தொழிலாளர் வர்க்கத்தின் மீதான ஒடுக்குமுறைகள், சுரண்டல்கள் ஆகியவற்றை ஒழிக்கவும், அரசு, தனியார்
பொருளாதாரம், பண்பாடு மற்றும் அரசியல் முதலிய அனைத்துத் தளங்களிலும் பாலினச் சமத்துவத்தை நிலைநாட்டவும், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற சமூகங்களைச் சார்ந்த மகளிரை ஒருங்கிணைத்து அமைப்பாக்குவதே மகளிர் விடுதலை இயக்கத்தின் நோக்கமாகும்.
 

1. இவ்வமைப்பானது, முகாம் அளவிலிருந்து மாநிலம் வரை விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் கட்டமைப்பைப் போன்றே கட்டமைக்கப்படும்.
 

2. இவ்வமைப்பை மாநில அளவில் மாநிலச் செயலாளர் ஒருவரும், துணைச்செயலாளர்கள் ஐவரும், நிதிச்செயலாளர் ஒருவரும்; பிரிக்கப்பட்ட மாவட்டம், வாட்டாரம், முகாம் அளவுகளில் முறையே செயலாளர் ஒருவரும், துணைச் செயலாளர்கள் இருவர் அல்லது மூவரும், நிதிச் செயலாளர் ஒருவரும் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர்.

 

தமிழக உழவர் இயக்கம்
 

சாதிய நிலவுடைமை, முதலாளித்துவம் மற்றும் வல்லரசிய மேலாதிக்கத்தின் அடிப்படையிலான வர்க்க ஒடுக்குமுறைகள், சுரண்டல்கள் ஆகியவற்றை ஒழிக்கவும், உழைப்புக்கேற்ற மற்றும் பாலினப் பாகுபாடற்ற ஊதியம், நிலம், நீர் மற்றும் இயற்கை வளங்கள் மீதான உரிமைகள். அரசுச் சொத்துக்களில் குத்தகை மற்றும் ஏல உரிமைகள் மற்றும் பணியில் பாதுகாப்புரிமைகள் போன்ற பல்வேறு உரிமைகளை வென்றெடுக்கவும், பஞ்சமி மற்றும் தரிசு நிலங்களை மீட்டெடுக்கவும், சிறு, குறு மற்றும் குத்தகை விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கவும், தாழ்த்தப்பட்ட மற்றும் பிறசமூகங்களைச் சார்ந்த உழைக்கும் விவசாயத் தொழிலாளர்கள், சிறு, குறு மற்றும் குத்தகை விவசாயிகளை ஒருங்கிணைத்து அமைப்பாக்குவதே விவசாய உழைப்பாளர் சங்கத்தின் நோக்கமாகும்.
 

1. இச்சங்கமானது, முகாம் அளவிலிருந்து மாநிலம் வரை விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் கட்டமைப்பைப் போன்றே கட்டமைக்கப்படும்.
 

2. இச்சங்கத்தை மாநில அளவில் மாநிலச் செயலாளர் ஒருவரும், துணைச்செயலாளர்கள் ஐவரும், நிதிச்செயலாளர் ஒருவரும்; பிரிக்கப்பட்ட மாவட்டம், வட்டாரம், முகாம் அளவுகளில் முறையே செயலாளர் ஒருவரும், துணைச் செயலாளர்கள் இருவர் அல்லது மூவரும், நிதிச் செயலாளர் ஒருவரும் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர்.


 

தொழிலாளர் விடுதலை முன்னணி
 

சாதியம், முதலாளித்துவம் மற்றும் வல்லரசிய மேலாதிக்கத்தின் அடிப்படையில் திணிக்கப்படும் தொழிலாளர் வர்க்கத்தின் மீதான ஒடுக்குமுறைகள், சுரண்டல்கள் ஆகியவற்றை ஒழிக்கவும், அரசு, தனியார் மற்றும் பொதுத்துறைகளில் சமூக நீதியை நிலைநாட்டவும், தாராளமயமாதல், தனியார்மயமாதல் மற்றும் உலகமயமாதல் ஆகிய வல்லரசிய ஆக்கிரமிப்புகளை முறியடிக்கவும், தொழிலாளர்களின் பணிப்பாதுகாப்பு, பதவி உயர்வு, தொழிற்சங்கம் அமைத்தல் மற்றும் போராடுதல் முதலிய உரிமைகளை நிலைநாட்டவும், காப்பீடு, ஓய்வூதியம், மருத்துவம், குழந்தைகளுக்கான கல்வி போன்ற நலன்களைப் பாதுகாக்கவும், தாழ்த்தப்பட்ட மற்றும் பிறசமூகங்களின் அமைப்புச் சார்ந்த மற்றும் அமைப்புச் சாராத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து அமைப்பாக்குவதே தொழிலாளர் விடுதலை முன்னணியின் நோக்கமாகும்.

1. இம்முன்னணியை மாநில அளவில் மாநிலச் செயலாளர் ஒருவரும், துணைச்செயலாளர்கள் ஐவரும், நிதிச்செயலாளர் ஒருவரும், ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஒருவரும், பிரிக்கப்பட்ட மாவட்ட அளவில் செயலாளர் ஒருவரும், துணைச் செயலாளர்கள் இருவர் அல்லது மூவரும், நிதிச் செயலாளர் ஒருவரும் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர்.

மீனவர் மேம்பாட்டுப் பேராயம்
 

சாதியம், முதலாளித்துவம் மற்றும் வல்லரசிய மேலாதிக்கத்தின் அடிப்படையில் திணிக்கப்படும மீனவர்கள் மீதான ஒடுக்குமுறைகள் மற்றும் சுரண்டல்கள் ஆகியவற்றை ஒழிக்கவும், கடல் எல்லைகள் தொடர்பான அரச வன்கொடுமைகளை முறியடிக்கவும், புயல், மழை, கடல், அரிப்பு மற்றும் ஆழிப்பேரலை போன்ற இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாக்கவும், மீன்பிடித்தொழிலை மேம்படுத்துவதற்கான அரசு மானியம், கடன்உதவி, வேலையில்லாக் காலங்களில் வாழ்வூதியம், பணியில் பாதுகாப்பு, ஓய்வூதியம், காப்பீடு, கல்வி, பாதுகாப்பான குடியிருப்புகள் போன்ற நலன்களைப் பாதுகாக்கவும், மீனவர்களை மேம்பாடு அடையச் செய்யவும், கடல் மீனவர்கள், உள்நாட்டு மீனவர்கள், மீனவரல்லாத மீன்பிடித் தொழிலாளர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து அமைப்பாக்குவதே மீனவர் மேம்பாட்டுப் பேராயத்தினர் நோக்கமாகும்.

1. இப்பேராயத்தை மாநில அளவில் மாநிலச் செயலாளர் ஒருவரும், துணைச்செயலாளர்கள் மூவரும், நிதிச்செயலாளர் ஒருவரும், பிரிக்கப்பட்ட மாவட்டம் மற்றும் வட்டார அளவில் முறையே செயலாளர் ஒருவரும், துணைச் செயலாளர்கள் இருவர் அல்லது மூவரும், நிதிச் செயலாளர் ஒருவரும் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர்.
 

2. முகாம் அளவில் குறைந்தளவு இருபது உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்படும் குழு மீனவர் மேம்பாட்டுப் பேராயத்தின் அடிப்படை அமைப்புக் குழுவாகும். முகாமளவில் செயலாளர் ஒருவரும்,

துணைச்செயலாளர்கள் இருவர் அல்லது மூவரும், நிதிச்செயலாளர் ஒருவரும் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர்.

முற்போக்கு மாணவர் கழகம்

 
மாணவர்களிடையே நிலவும் சாதி, மதம், பாலினம் மற்றும் வர்க்கப்பாகுபாடுகளை அகற்றவும், நன்கொடைகள் மற்றும் கட்டணங்களின் பெயரால் கல்வி வணிகமயமாதலைத் தடுக்கவும், பாடத்திட்டங்களில் மாணவிகளுக்கெதிரான பாலினச்சீண்டல்கள் மற்றும் பாலினச் சுரண்டல்கள் ஆகியவற்றை ஒழிக்கவும், மது மற்றும் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகும் மாணவர்களை மீட்கவும், அனைவருக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை அடிப்படை உரிமைகளாக வென்றெடுக்கவும், தாய்மொழி மற்றும் தேசியஇன உணர்வுகளை வளர்த்தெடுக்கவும், சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் பண்பாட்டு விழிப்புணர்வுகளை மேம்படுத்தவும், அனைவரும் அவரவர் தாய்மொழியில் தரமான, சமமானக்கல்வி பெறவும், தங்கும் வசதி, கல்வி உதவித்தொகை, தொழிற்கல்விகளுக்கான கடனுதவி போன்ற நலன்களைப் பாதுகாக்கவும், தாழ்த்தப்பட்ட மற்றும் பிறசமூகங்களைச் சார்ந்த மாணவர்களை ஒருங்கிணைத்து அமைப்பாக்குவதே முற்போக்கு மாணவர் கழகத்தின் நோக்கமாகும்.


1. இக்கழகம் மேனிலைப்பள்ளிகள், தொழிற்கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் அளவில் கட்டமைக்கப்படும். இக்கழகத்தில் மாணவிகளும் சமஅளவில் பங்கேற்க வேண்டும்.
 

2.இக்கழகத்தை மாநில அளவில் செயலாளர் ஒருவரும், துணைச்செயலாளர்கள் இருவர் அல்லது மூவரும், நிதிச்செயலாளர் ஒருவரும், பிரிக்கப்பட்ட மாவட்டம் மற்றும் வட்டார அளவுகளில் முறையே செயலாளர் ஒருவரும், துணைச்செயலாளர்கள் இருவர் அல்லது மூவரும், நிதிச் செயலாளர் ஒருவரும், தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர்.

பிரிவு 6: விடுதலை கலை இலக்கியப் பேரவை
 

திருமணங்கள், திருவிழாக்கள், பண்டிகைகள், கடவுள் வழிபாடுகள், குடும்பச் சடங்குகள் மற்றும் ஈமச்சடங்குகள் போன்ற பல்வேறு பண்பாட்டுத் தளங்களில் சாதி, மதம், பாலினம், மொழி, நிலவுடைமை, முதலாளித்துவம் மற்றும் வல்லரசியம் ஆகியவற்றின் அடிப்படையிலான ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தால் உழைக்கும் மக்களின் மீது திணிக்கப்பட்டுள்ள அடிமைத்தனமான பண்பாட்டு மரபுகள் அவற்றினடிப்படையிலான சுரண்டல்கள் மற்றும் ஒடுக்குமுறைகளை ஒழிக்கவும், மண்ணின் மைந்தர்களின் சமத்துவமும், சனநாயகமும் நிறைந்த பாரம்பரிய பண்பாட்டு மரபுகளை மீட்டெடுக்கவும், அவற்றுக்கான கலை, இலக்கியக் கருவிகளின் வழியாகப் பண்பாட்டு விடுதலையை வென்றெடுக்கவும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பிற சமூகங்களைச் சார்ந்த உழைக்கும் மக்களை ஒருங்கிணைத்து அமைப்பாக்குவதே விடுதலை கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவையின் நோக்கமாகும்.

இப்பேரவையில் மாநில அளவில் மாநிலச் செயலாளர் ஒருவரும், துணைச் செயலாளர்கள் ஐவரும், நிதிச்செயலாளர் ஒருவரும் பிரிக்கப்பட்ட மாவட்ட அளவில் மாவட்டச் செயலாளர் ஒருவரும், துணைச்செயலாளர்கள் இருவர் அல்லது மூவரும், நிதிச் செயலாளர் ஒருவரும் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர். இப்பேரவையில் மகளிரும் சமஅளவில் பங்கேற்க வேண்டும்.

அரசு ஊழியர் ஐக்கியப் பேரவை
சாதியம், முதலாளித்துவம் மற்றும் வல்லரசிய மேலாதிக்கத்தின் அடிப்படையில் திணிக்கப்படும் அரசு ஊழியர் மீதான ஒடுக்குமுறைகள், சுரண்டல்கள் ஆகியவற்றை ஒழிக்கவும், நீதி, நிர்வாகம், மருத்துவம் மற்றும் கல்வி போன்ற அரசுத்துறைகளில் சமூக நீதியை நிலைநாட்டவும், தராரளமயமாதல், தனியார்மயமாதல் மற்றும் உலகமயமாதல் ஆகிய வல்லரசிய ஆக்கிரமிப்புகளை முறியடிக்கவும், ஊழியர்களின் பணிப்பாதுகாப்பு, பதவி உயர்வு, ஊழியர் சங்கம் அமைத்தல் மற்றும் போராடுதல் முதலிய உரிமைகளை நிலைநாட்டவும், காப்பீடு, ஓய்வூதியம், மருத்துவம், குழந்தைகளுக்கான கல்வி போன்ற நலன்களைப் பாதுகாக்கவும், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற சமூகங்களைச் சேர்ந்த ஊழியர்களை ஒருங்கிணைத்து அமைப்பாக்குவதே அரசு ஊழியர் ஐக்கியப் பேரவையின் நோக்கமாகும்.


1. இப்பேரவையில் மாநில அளவில் மாநிலச் செயலாளர் ஒருவரும், துணைச் செயலாளர்கள் ஐவரும், நிதிச் செயலாளர் ஒருவரும், ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஒருவரும், பிரிக்கப்பட்ட மாவட்ட அளவில் செயலாளர் ஒருவரும், துணைச்செயலாளர்கள் இருவர் அல்லது மூவரும், நிதிச் செயலாளர் ஒருவரும் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர்.

சிறுபான்மையோர் கூட்டமைப்பு
இனம், மொழி, மதம், சாதி, பாலினம் (அரவாணிகள்) ஆகியவற்றின் அடிப்படையிலான சிறுபான்மை மக்களின் அடிப்படை மற்றும் சனநாயக உரிமைகளை நிலைநாட்டவும், இச்சிறுபான்மை மக்களுக்கெதிரான மனிதஉரிமை மீறல்கள், வன்கொடுமைகள், பண்பாட்டுச் சுரண்டல்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கவும், கல்வி, வேலைவாய்;ப்பு மற்றும் அரசியல் தளங்களில் இடஒதுக்கீட்டை வென்றெடக்கவும், இசுலாமியர், கிறித்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களை ஒருங்கிணைத்து அமைப்பாக்குவதே சிறுபான்மையோர் கூட்டமைப்பின் நோக்கமாகும்.
 

1. இவ்வமைப்பில் மாநில அளவில் மாநிலச் செயலாளர் ஒருவரும், துணைச்செயலாளர்கள் ஐவரும், நிதிச்செயலாளர் ஒருவரும், ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஒருவரும், பிரிக்கப்பட்ட மாவட்டம் மற்றும் வட்டார அளவில் முறையே செயலாளர் ஒருவரும், துணைச்செயலாளர்கள் இருவர் அல்லது மூவரும், நிதிச் செயலாளர் ஒருவரும் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர். சிறுவர் எழுச்சி மன்றம் சிறுவர்களுக்கு கற்கும் ஆற்றலை ஊக்குவிக்கவும், மனம் மற்றும் உடல்வலிமைப் பயிற்சி அளிக்கவும், சமூக விடுதலைத் தலைவர்களின் வரலாறுகளை கதைகள், பாடல்கள், நாடகங்கள், கண்காட்சி போன்ற ஊடகங்கள் மூலமாக அறியச் செய்யவும், குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள், பாலினக் கொடுமைகள், குழந்தைத் தொழிலாளர் முறை ஆகியவற்றை ஒழிக்கவும், கல்வி உரிமை, பங்கேற்கும் உரிமை, தேர்வு செய்யும் உரிமை, பாதுகாப்புரிமை ஆகியவை குறித்து விழிப்புணர்வை ஊட்டவும், அனைத்து சமூகங்களைச் சார்ந்த சிறுவர்களை ஒருங்கிணைத்து அமைப்பாக்குவதே சிறுவர் எழுச்சி மன்றத்தின் நோக்கமாகும்.
 

1. இம்மன்றத்தில் முகாமளவில் சிறுவர் எழுச்சி மன்றம் அமைக்கப்படும், வட்டார அளவில், செயலாளர் ஒருவர், மாவட்ட அளவில், ஒருங்கிணைப்பாளர் ஒருவர், மாநிலச் செயலாளர் ஒருவர் ஆகியோர் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர்.
 

2. ஆண்டுக்கொருமுறை வட்டார அளவிலும், மாநில அளவிலும் சிறுவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் மேற்கூறிய நோக்கத்தின் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்படும். முகாமளவில் பள்ளி விடுமுறைக் காலங்களிலும், பண்டிகைக் காலங்களிலும், தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்படும்