அணிகள்

இயக்கத்தின் கொள்கைகளுக்கும், செயற்பாடுகளுக்கும் உறுதுணையாக அமையும் வகையில் இயக்கத்தின் அங்கங்களாகக் கட்டமைக்கப்படும் குழுக்களே அணிகளாகும். இவை இயக்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும். தேவையினடிப்படையில், வௌ;வேறு தளங்களில் இத்தகைய அணிகள் உருவாக்கப்படும். அணிகளுக்கான நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகள் மையப்பேரவையின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வரையறுக்கப்படும். அணிகளின் உறுப்பினர்களாகவும், பொறுப்பாளர்களாகவும், கணிசமான அளவில் மகளிர் பங்கேற்பை உறுதி செய்யும் சூழல்களை உருவாக்குதல் வேண்டும்.

தொண்டரணி

1. இயக்கத்தின் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், மாநாடுகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளின்போது, அவை அமைதியாகவும், கட்டுப்பாடாகவும் நடந்தேற, அவற்றை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பாதுகாப்பு அளித்தல் போன்ற பணிகளைத் தொண்டரணி மேற்கொள்ளும். ஊடற்பயிற்சி, தற்காப்புப்பயிற்சி மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கானப் பயிற்சி ஆகியவற்றுடன் மனநலம் உள்ளிட்ட நல்லொழுக்கப் பயிற்சிகளும் பெற்ற, சீருடை அணிந்த குழுவாகத் தொண்டரணி இயங்கும். வாய்ப்புள்ளச் சூழல்களில் மகளிர் தொண்டரணியும் உருவாக்கப்படும்.

2. இது, குறைந்த அளவில் இருபது உறுப்பினர்களையும், அதிக அளவில் ஐம்பது உறுப்பினர்களையும் கொண்டதாக ஒவ்வொரு ஒன்றியத்திலும் கட்டமைக்கப்படும். இக்குழுவில் ஒருவர்தொண்டரணிச் செயலாளராகவும், இருவர் தொண்டரணித் துணைச் செயலாளர்களாகவும் பொறுப்பேற்று வழிநடத்துவர்.
 
3. பிரிக்கப்பட்ட மாவட்ட அளவில், மாவட்டத் தொண்டரணிச் செயலாளர் ஒருவரும், தொண்டரணித் துணைச் செயலாளர்கள் மூவரும் பொறுப்பேற்று மாவட்டத் தொண்டரணியை வழிநடத்துவர். மாநில அளவில், மாநிலத் தொண்டரணிச் செயலாளர் ஒருவரும், மாநிலத் தொண்டரணித் துணைச் செயலாளர்களாக ஐவரும் பொறுப்பேற்று மாநிலத் தொண்டரணியை வழிநடத்துவர்.

வழக்கறிஞர் அணி
1. ஒடுக்கப்பட்ட மக்களுக்கெதிரான அரச வன்கொடுமைகள் மற்றும் சாதிய வன்கொடுமைகளை எதிர்த்துப் போராடும் சூழலில், மக்களின் மீதும், இயக்கத்தின் மீதும் திணிக்கப்படும் பொய்வழக்குகள், காவல் விசாரணைகள், வழக்குமன்ற விசாரணைகள், சிறைத்தண்டனைகள் போன்ற நெருக்கடிகளிலிருந்து மக்களையும் இயக்கத்தையும் பாதுகாப்பதே வழக்கறிஞர் அணியின் நோக்கமாகும்.
 
2. ஆதனடிப்படையில் இயக்கத்திற்குத் தேவையான சட்ட அறிவுரைகள் வழங்கவும், இயக்கத் தோழர்கள் மற்றும் மக்கள் மீதான வழக்குகளை எதிர்கொள்ளவும், ஆணாதிக்க ஒடுக்குமுறைககளிலிருந்து மகளிர் உரிமைகளைப் பாதுகாத்திடவும், அனைத்துத் தளங்களிலும் மனித உரிமைகளைப் பாதுகாத்திடவும், சட்ட விழிப்புணர்வுகளை உருவாக்கிடவும், உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் முதல் உயர்நீதிமன்றம் வரையில் வழக்கறிஞர் அணி கட்டமைக்கப்படும் நீதிமன்ற வாரியாகத் கட்டமைக்கபடும் இவ்வணியை மாவட்ட அளவில் செயலாளர் ஒருவரும், துணைச் செயலாளர்கள் மூவரும் வழிநடத்துவர். மாநில அளவில் செயலாளர் ஒருவரும், துணைச் செயலாளர்கள் ஐவரும் வழிநடத்துவர்.

மருத்துவர் அணி
1. ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களிடையே சுற்றுப்புறத்தூய்மை, சுகாதாரம், குடும்பநலம், நோய்த்தடுப்பு மற்றும் முதலுதவி உள்ளிட்ட மருத்துவ விழிப்புணர்வை ஏற்படுத்துவது, பில்லி, சூனியம், ஏவல் போன்ற செய்வினைகள் மற்றும் பேய், பிசாசு, சாத்தான் போன்ற மருத்துவத்திற்கெதிரான மூடநம்பிக்கைகளிலிருந்து மக்களை மீட்டெடுப்பது, ஆங்கில மருத்துவத்தின் வல்லரசியச் சுரண்டலிலிருந்து மக்களைப் பாதுகாப்பது, இயற்கை மருத்துவம், சித்தமருத்துவம் உள்ளிட்ட மரபு சார்ந்த மருத்துவத்தை மீட்டெடுப்பது, வன்கொடுமை மற்றும் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு மருத்துவச்
சிகிச்சைகள் வழங்குவது போன்ற பணிகளையாற்றுவதே மருத்;துவர் அணியின் நோக்கமாகும்.
 
2. அதனடிப்படையில், மருத்துவர் அணி கட்டமைக்கப்படும். பிரிக்கப்பட்ட மாவட்ட அளவில் செயலாளர் ஒருவரும், துணைச்செயலாளர் இருவரும், பிரிக்கப்பட்ட மாவட்ட அளவில் செயலாளர் ஒருவரும், துணைச்செயலாளர்கள் மூவரும், மாநில அளவில் செயலாளர் ஒருவரும், துணைச்செயலாளர்கள் ஐவரும் இவ்வணியை வழிநடத்துவர். சமூக 

நல்லிணக்க அணி
1. இந்தியச் சமூகக் கட்டமைப்பில் சமூக, பொருளாதார, பண்பாட்டு அடிப்படையில் மக்களை ஆயிரக்கணக்கானக் குழுக்களாகக் கூறுபடுத்தி, நீண்ட நெடுங்காலமாக ஒன்றுக்கொன்று முரண்பட்டு மோதிக் கொள்ளவும், ஒன்றையொன்று அடிமைப்படுத்தி இழிவுபடுத்தவும், சுரண்டவும் சாதியும், மதமும் அடிப்படையாக அமைகின்றன. இந்நிலையில் சாதி, மத அடிப்படையிலான முரண்பாடுகளைக் களைந்து சமத்துவத்தை வென்றெடுக்கும் தொலைநோக்கில், சமூகம் மற்றும் மத நல்லிணக்கத்தை உருவாக்குவதே சமூக நல்லிணக்க அணியின் நோக்கமாகும்.
 
2. இதனடிப்படையில் சமூக நல்லிணக்க அணி கட்டமைக்கப்படும். இது ஒன்றிய அளவில் செயலாளர் ஒருவரும், துணைச் செயலாளர் இருவரும், பிரிக்கப்பட்ட மாவட்ட அளவில் செயலாளர் ஒருவரும், துணைச்செயலாளர்கள் மூவரும், மாநில அளவில் செயலாளர் ஒருவரும், துணைச் செயலாளர்கள் ஐவரும் இவ்வணியை வழிநடத்துவர்.
 
3. இவ்வணியில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மட்டுமின்றி, பிற சமூகங்களைச் சார்ந்த சனநாயக முற்போக்குவாதிகள் கூடுதலான அளவில்